டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘காகித மலர்’!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘காகித மலர்’!
தயாரிப்பாளர் பிரேமா செழியன், மகள் செல்வி அதிதா செழியன் பங்கேற்பு
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்காக (World Premiere) தேர்வு செய்யப்பட்டு, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன.
இந்த உலகத் திரையிடலில் படத்தின் தயாரிப்பாளரான பிரேமா செழியன் மற்றும் சிங்கப்பூரில் கல்வி பயிலும் அவரது மகள் செல்வி அதிதா செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திரையிடப்பட்ட இரண்டு காட்சிகளுமே பார்வையாளர்களால் (Housefull)நிரம்பி வழிந்தன. ஜப்பானிய ரசிகர்கள் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். படம் நிறைவடைந்ததும் அரங்கம் முழுவதும் பலத்த கைதட்டல்...









