இதுதான் நான் செய்த தவறு - வருத்தத்தை தெரிவித்த நடிகை டாப்சி!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை டாப்சி இப்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தி திரையுலகில் அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்துள்ளது. சினிமாவுக்கு வந்த புதிதில் சில தவறுகளை செய்ததாக டாப்சி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபோது கதைகளை தேர்வு செய்யும் முறையில் சில தவறுகளை செய்தேன். வணிக படங்கள்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து அதுமாதிரியான படங்களை தேர்வு செய்து நடித்தேன். அதுதான் நான் செய்த தவறு. அதன் பிறகு நான் என்ன மாதிரி படங்களைப் பார்க்க விரும்புகிறேனோ, அதுபோன்ற கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன்.
அது எனக்கு சாதகமாக அமைந்தது. ஆனாலும் ஒரு ரசிகையின் பார்வையில் இருந...
ஒரு பாடலுக்கு நடனம்.... பிரபல நடிகைக்கு சிபாரிசு செய்த சிரஞ்சீவி!
ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதற்கு தெலுங்கு திரைத்துறையில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தான் நடிக்கும் போலா ஷங்கர் என்ற படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலைப்போல் ஒரு பாடல் வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.
இந்த பாடலுக்கு நடிகை ராஷ்மி கவுதமை நடிக்க வைக்க சிரஞ்சீவியே சிபாரிசு செய்திருக்கிறார். ராஷ்மி கவுதம் தமிழில் சாந்தனுவுடன் கண்டேன் படத்தில் நடித்தவர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பணியிலிருந்து பிரபலமானவர். பல தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்திருக்கும் ராஷ்மி, சிரஞ்சீவியுடன் ஒரு பாடலுக்கு ஆடுவது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது....
விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு!
சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இயக்குனர் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தனது மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஐஸ்வர்யா அடுத்து பே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மியூஸிக் வீடியோ ஆல்பம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்குகிறார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியுள்ளார். தனது குழுவினரு...
இலங்கை சிறையில் உள்ள 55 தமிழக மீனவர்கள் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு!
வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை அடுத்த மாதம் ஏலத்தில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள 55 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி படகுகள் ஏலம் விடுவது குறித்த வழக்கு விசாரணை ஏப்ரல் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது...
லண்டனில் இருந்து 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோல்ட் காரை நடிகர் விஜய் வாங்கினார்.
இதற்கு இறக்குமதி வரியாக கிட்டத்தட்ட 2 கோடியை செலுத்தினார்.
இருப்பினும் அந்த காரை வட்டார போக்குவரத்து அதிகாரியின் அலுவலகத்தில் பதிவுசெய்யும் போது வணிக வரித்துறையில் நுழைவு வரியை செலுத்தி சான்று வாங்கிவருமாறு சொல்லப்பட்டது.
இந்த வரியை செலுத்தவேண்டிய அவசியமில்லை என கேரள மற்றும் சென்னை உயர்நீதி மன்ற வழக்குகள் சிலவற்றில் குறிப்பிட்டுள்ளதாக கூறி இந்த வரியை செலுத்த மறுத்தார் விஜய்.
இருப்பினும் நுழைவு வரியை கட்டாயம் செலுத்தவேண்டும் என வணிக துறை உத்தரவிட்டதால் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் விஜய்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 20 % வரியை செலுத்திவிட்டு வாகனத்தை பதிவுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
2012 ஆம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதே ஆண்டில் வரியை செலுத்தி விஜய...
வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி.எஸ்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன் பொறுப் பேற்றுக் கொண்டார்.
திமுக தலைமை நிலையச் செயலராக பதவி வகித்து வரும் பூச்சி. எஸ். முருகனை வீட்டு வசதி வாரிய தலைவராக நியமித்து
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் நேற்று கோயம்பேடு சிஎம்டிஏ அலுவலகத்தில் பூச்சி எஸ் . முருகன் வீட்டு வசதி வாரிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பூச்சி எஸ் முருகன்,
“வீட்டு வசதி வாரிய தலைவராக நியமித்ததற்கு முதல்வ...
7 வது முறையாக இணையும் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி !
மெகா பட்ஜட்டில் தயாரிக்கும் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன்!!
இயக்குநர் சுசீந்திரன் இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி 7 வது முறையாக புதிய படமொன்றில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் சுசீந்திரன், பிரபல இசையமைப்பாளர் D.இமான் உடன் இணைந்து பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என ஆறு படங்களில் பணிபுரிந்துள்ளனர்.
நேற்று, இசையமைப்பாளர் D.இமான் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து கூறியுள்ள இயக்குநர் சுசீந்திரன், தான் 7 வது முறையாக டி.இமானுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், பாடல் கம்போசிங் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய பட்ஜ...
ராமதாஸ் வசம் உள்ள பலகோடி வன்னியர் சொத்தை மீட்க அரசு முயற்சி!
பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?
வன்னிய முன்னோர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்கள் ஈட்டிய பெரும் சொத்துக்களை இன மக்களின் நலனுக்காக அர்ப்பணித்து தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி விட்டு சென்றார்கள்.
இந்த வன்னிய பெரியோர்கள் அமைத்து இருக்கும் அறக்கட்டளைகள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது.
சுமார் பத்து லட்சம் கோடி ருபாய் பெறுமான சொத்துக்கள் இந்த அறக்கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ளது.
இந்த அறக்கட்டளைகள் எந்த நோக்கத்திற்காக அமைக்க பெற்றதோ அந்த நோக்கம் நிறைவேறாமல், காலபோக்கில் கேட்பாரின்றி இந்த அறக்கட்டளைகளின் சொத்துக்கள் சுயநல எண்ணம் கொண்டோர் கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது.
அந்த அறக்கட்டளைகளின் மூலமாக வரும் பல கோடி பெறுமான வருமானங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு கிட...
‘நட்புக்காக’ என்ற திரைப்படத்தில் விஜயகுமாரும், சரத்குமாரும் கார் வாங்க ஷோரூமுக்கு செல்வார்கள்.
அப்போது அவர்களது பேச்சு, உடை பாவனையை பார்த்து ஷோரூம் ஊழியர்கள் கிண்டல் செய்வார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாக்கு மூட்டையில் கொண்டு வந்த பணத்தை கொட்டி விஜயகுமார் அதிர்ச்சி கொடுப்பார்.
இதுபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ராமனபாளையா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கெம்பேகவுடா.
இவர் நேற்று முன்தினம் துமகூரு டவுனில் உள்ள கார் ஷோரூமுக்கு கெம்பேகவுடா சென்றுள்ளார்.
அப்போது அவர் அழுக்கு உடை அணிந்து சென்றதாக தெரிகிறது.
கெம்பேகவுடாவிடம் ஷோரூம் ஊழியர்கள் இங்கு எதற்காக வந்தீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அப்போது விவசாய பொருட்களை எடுத்து செல்லும் வகையில் ஒரு சரக்கு வேனை வாங்க வந்துள்ளேன் என்று கெம...