கொரானா நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தால்… தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு டெல்லி முதல்வர் எச்சரிக்கை!
கொரானா நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தால்... தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் எச்சரிக்கை!
டெல்லியில் சில தனியார் ஆஸ்பத்திரிகள் கொரானா நோயாளிகளுக்கு படுக்கைகளை ஒதுக்க லட்சக்கணக்கான ரூபாய் வசூலிப்பதாகவும், அந்த ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லியில் 36 அரசு ஆய்வகங்களும், மற்றும் சில தனியார் ஆய்வகங்களும் கொரானா பரிசோதனை நடத்தி வருகின்றன. டெல்லியில் உள்ள பெரும்பாலான தனியார் ஆஸ்பத்திரிகள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை எதுவும் இல்லை....









