பீஸ்ட் படத்தின் இந்தி ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ’அதிரடியான #BeastHindiTrailer-ஐ அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.
https://youtu.be/0q7bKjLa0Nc
குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து புதிய பாஸ்போர்ட் வாங்கிய முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபல இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு மனைவி மோனிகாவிடமிருந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் இமானுக்கு, குழந்தைகளைச் சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
அப்போது இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்களையும் இமான் வைத்திருந்தார்.
இந்நிலையில், குழந்தைகளின் பாஸ்போர்ட்கள் தொலைந்து விட்டதாக தவறான தகவலை கூறி,
புதிய பாஸ்போர்ட் பெற்ற முன்னாள் மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
அந்த மனுவில், ஏற்கெனவே பாஸ்போர்ட் உள்ள நிலையில், புதிய பாஸ்போர்ட் வாங்கியது சட்டவிரோதம் என்பதால், தனது மனைவிக்கு எதிராக நடவடிக...
நடிகர் ஆர்யா நடிக்கும் “கேப்டன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை போன்ற தொடர்ச்சியாக அழுத்தமான கதையம்சங்கள் கொண்ட, பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கியதன் மூலம் புகழின் உச்சத்தை எட்டியுள்ளார்.
அவரது நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்திற்கு வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.
“டெடி” என்ற பிரமாண்டமான படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்,
இந்த ஃபர்ஸ்ட் லுக், பார்வையாளர்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கு இட்டு செல்லும் வகையில், அனைவரையும் ஈர்க்கும் படி அமைந்துள்ளது.
நம்பமுடியாத ஆச்சர்யமான உண்மை என்னவென்றால், இந...
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அமல்படுத்தப்பட்ட 36 மணி நேர ஊரடங்கு இன்று காலை முடிவுக்கு வந்தது.
இதற்கிடையே, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நேற்று பதவி விலகினர்.
இதையடுத்து, இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார்.
அமைச்சர் பதவிகளை ஏற்று பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இதில், நிதி அமைச்சராக அலி சப்ரியும், கல்வி அமைச்சரா...
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் அமல்படுத்தப்பட்ட 36 மணி நேர ஊரடங்கு இன்று காலை முடிவுக்கு வந்தது.
இதற்கிடையே, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நேற்று பதவி விலகினர்.
இந்நிலையில், இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சர் பதவிகளை ஏற்று பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது சபரி என்ற புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்.
அனில்காட்ஸ் இயக்கும் இப்படத்தை மஹா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் திரு.மகேந்திர நாத் கோண்ட்லா தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் வரலட்சுமி சரத்குமார் கலந்துக் கொண்டுள்ளார்.
காதல் மற்றும் கிரைம் கலந்த திரைப்படமாக சபரி படம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம்ஷெட்டி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு கோபி சுந்தரின் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக நானி சமிடிசெட்டியும், கலை இயக்குனராக ஆசிஷ் தேஜா புலாலாவும், படத்தொகுப்பாளராக தர்மேந்திரா காக்கர்லால் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு உகாதி தினத...
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருந்தார்.
இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், தலைவர் 169 என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் ஆசையை இயக்குனர் நெல்சன் இப்படத்தின் மூலம் பூர்த்தி செய்யவுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது.
வான்வெளி, தரைவழி கடல்வழி என பலமுனைகளில் தனது தாக்குதலை உக்கிரமாக நடத்தி வருகிறது.
இந்த போர் ஆரம்பித்து 6 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களை கைப்பற்ற ரஷியா கடுமையாக போராடி வருகிறது.
ஆனால் உக்ரைன் படை வீரர்களும் அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என எதிர்த்து சண்டையிடுகின்றனர்.
இதனால் ரஷியா படைகளும் திணறி வருகிறது. கீவ் புறநகர் பகுதியான புச்சா நகரை ரஷியா படைகள் கைப்பற்றினார்கள்.
இந்த நிலையில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதியில் ஆதிக்கம் செலுத்த ரஷியா முழு கவனம் செலுத்தி வருகிறது.
போர் உச்சகட்டதை எட்டி உள்ள நிலையில் புச்சா நகரை மீண்டும் உக்ரைன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
ஆனால் இந்த நகரை விட்டு ரஷியா...
மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, பெரிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க புதிய கண்ணோட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடந்துமுடிந்த மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்கள் பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை.
இத்திட்டங்கள் மூலம் இலங்கையில் ஏற்பட்டதை போல் பொருளாதார நெருக்கடி நம் நாட்டிலும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்....
சரண்ராஜ் இயக்கத்தில், தேவ் சரண்ராஜ் அறிமுகமாகும் புதிய படம். Soni Sri Production வழங்கும், “Production No 1“.
தென்னிந்திய திரைத்துறையின் பிரபல நடிகர் சரண்ராஜ் இரண்டாவது மகன், தேவ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார்.
பெயர் சூட்டப்படாத இந்த புதிய திரைப்படம் “Production No 1” என தயாராகிறது.
Soni Sri Production நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ், நாயாகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதா பத்திரத்திலும் தனி முத்திரை பதித்து, தனக்கென மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இப்படம் மூலம் இயக்குநராக கால் பதிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் அவரே எழுதுகிறார்.
பைலட்டாக இருந்து, கோவிட் காலத்தில் பணியினை விட்டு, நடிப்பு கல்லூரியில...