பணத்தை கொண்டு வரவில்லை, மக்களின் மனத்தையே எடுத்து வந்திருக்கிறேன்- அபுதாபியில் முதல்வர் ஸ்டாலின்
அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில்,
இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சமூகம் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
நான்கு நாட்களாக துபாயிலும், இந்த அபுதாபி பகுதியிலும் நான் ஒரு சுற்றுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்.
தமிழகத்திலே தான் சுற்றுப் பயணம் நடத்துவது எனக்கு வழக்கம்.
அவர்கள் அழைத்த இடங்களுக்கு எல்லாம் நான் போவது உண்டு.
அப்படி அழைக்கப்பெறும் இடங்களிலெல்லாம் எனக்கு வரவேற்புக்களை மகிழ்ச்சியோடு,
உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு அவர்கள் என்னை வரவேற்பது உண்டு.
அதற்குக் கொஞ்சம் கூட குறைவில்லாமல், கொஞ்சம் கூட இல்லை, ஒரு இன்ச் கூட குறைவில்லாமல்,
இந்த நான்கு நாட்களாக நான் திக்குமுக்காடிப் போயிருக்கிறேன்.
தமிழ்நாட்டை நோக்கி பல தொழில் நிறுவனங்களை ஈர்ப்ப...









