செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  இயக்குனர் பொன்ராம் & இயக்குனர் M.P.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து STUDIO GREEN ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பில் மதியம் விருந்தும் விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தினார். கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் அகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறினர். ...
சிம்புவின் 45வது படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கும் நிறுவனம்!

சிம்புவின் 45வது படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கும் நிறுவனம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. இப்படத்தின் வேலைகள் இன்னும் ஆரம்பிக்காத நிலையில், சிம்புவின் 45வது படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. நர்தன் எனும் புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் கெளதம் கார்த்திக்கும் நடிக்கிறார். பாடல்களை மதன் கார்க்கி எழுதுகிறார். சிம்புவின் 45-வது படமாக உருவாகும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம். நாயகி, இசையமைப்பாளர் உட்பட மற்ற விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறது படக்குழு....
அன்புமணிக்காக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதா ? தர்மபுரியில் பல வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை

அன்புமணிக்காக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதா ? தர்மபுரியில் பல வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைத்து, தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’ தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியில் உள்ள 8 வாக்குச்சாவடிகள், பூந்தமல்லி மற்றும் கடலூரில் உள்ள தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைத்திருக்கிறோம். பட்டன் வேலை செய்யாதது, கள்ள ஓட்டு பதிவு புகார், வாக்குச்சாவடியைக் கைப்பற்றியதாக எழுந்த குற்றச்சாட்டு, தேர்தல் அதிகாரிகளின் அறிக்கை ஆகியவற்றை வைத்து தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருக்கிறோம். மதுரையில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றதாக எழுந்த புகார் தொடர்பாக, வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எதற்காக வட்டாட்சியர் அங்கு சென்றார் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருக...
மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
இளைஞர்களை இளையராஜா தனது இசையால் கட்டிப் போட்ட, 1990களில் பயணிக்கும் கதைதான் இப்படம்.. ஊர் ஊராக சென்று தனது தந்தையுடன் சர்க்கஸ் செய்து பிழைப்பு நடத்தி வருபவர் வட நாட்டைச் சேர்ந்த நாயகி மெஹந்தி. இப்படியாக ஒரு முறை கொடைக்கானலில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ குழு அங்கு வருகிறது. இளையராஜாவின் இசையால் அடிமையாக்கப்பட்ட நமது ஹீரோ ‘ஜீவா’ கேசட் கடை ஒன்றை கொடைக்கானலில் நடத்தி வருகிறார். ஹீரோயினை பார்த்ததும் ஹீரோ அவர் மீது காதலில் விழுகிறார். அப்படியும் இப்படியுமாக ஹீரோயினையும் காதலில் விழ வைக்கிறார் ஹீரோ. கீழ் ஜாதியினரை வீட்டில் கூட அனுமதிக்க மறுப்பவர் தான் ‘ஜீவா’வின் தந்தை மாரிமுத்து. இந்த ஜாதி வெறி கொண்ட தந்தையை மீறி ஜீவா-மெஹந்தியின் காதல் ஜெயித்ததா..?? இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. ஜீவாவாக நடித்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் என்று சொல்லாமல...
தேர்தலில் வாக்களித்த ரஜினிக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஆனது..!

தேர்தலில் வாக்களித்த ரஜினிக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஆனது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, நடிகர்கள்
  தேர்தலில் வாக்களித்த ரஜினிக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஆனது.   தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் பொதுமக்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றனர். அதே போல் வயதானவர்களும், வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டு சென்றனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வந்து தனது வாக்கை செலுத்தினார். ரஜினிகாந்தின் வருகையால், ஏராளமான ரசிகர்கள் அவரை காண குவிந்தனர். அப்போது ரஜினிக்கு இடது கைக்கு பதிலாக வலது கை விரலில் மை வைக்கப்பட்டது. தேர்தல் பரபரப்பில் இந்த விவகாரம் பெரிதாக ப...
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் புதுப்படம்..!

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் புதுப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்தபடம் . இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரடக்சன்ஸ் , மற்றும் பத்ரி கஸ்தூரியின் ஷர்தா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் இன்று துவங்கப்பட்டது. பா. இரஞ்சித்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் மாரி இந்த படத்தை இயக்குகிறார். கலையரசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தின் முதல்கட்டபணிகள் இன்று துவங்கியிருக்கிறார்கள்....
லாரன்ஸின் ஆதரவுடன் ‘காஞ்சனா-3’க்காக மதன் கார்க்கியின் புதிய முயற்சி

லாரன்ஸின் ஆதரவுடன் ‘காஞ்சனா-3’க்காக மதன் கார்க்கியின் புதிய முயற்சி

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
கடினமான உழைப்பு, உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் வரும். ஆனால் அது புதுமையான விஷயத்தை முயற்சிக்கும் போது கிடைத்தால் அது மிகப்பெரிய சாதனை. பின்பற்றுவதற்கு பாதை எதுவும் இல்லாமல், ஒரு புதிய பாதையை உருவாக்கும் முயற்சி அது. DooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களை கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசை கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது. பாடலாசிரியர் மற்றும் DooPaaDooவின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, "இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்...