சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

“திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான்” -நாக சைதன்யா

“திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான்” -நாக சைதன்யா

CINI NEWS, HOME SLIDER, நடிகர்கள், நடிகைகள்
"திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான்" -நாக சைதன்யா நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்பு வெளியாகி நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும், இவர்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் பேட்டியளித்த நாகசைதன்யா விவாகரத்து என்பது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்றும் விவாகரத்துக்கு பின் சமந்தா சந்தோசமாக இருந்தால் தனக்கும் சந்தோசம்தான் என்றும் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான் என்றும் அவருக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒத்துப்போகும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் சமந்தா நடித்த ’மஜ்லி’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்....
ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த மீண்டும்  “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர்

ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த மீண்டும் “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர்

HOME SLIDER, TV news, சினி நிகழ்வுகள்
      ரசிகர்களை மகிழ்ச்சி படுத்த வருகிறது “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர் ! OTT தளங்களின் வரவில் எண்ணற்ற தொலைத்தொடர்கள் வெளிவருகின்றன, ஆனால் அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்து தரப்பிலும் ரசிகர்களை கவர்கின்றன. அந்த வகையில் “அம்முச்சி” தொடர் முதல் சீசனில் பலரின் இதயங்களை வென்றது. நக்கலைட்ஸ் என்ற புகழ்பெற்ற YouTube சேனலால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றது. உண்மையில், 'அம்முச்சி' என்ற வார்த்தை நம்மிடையே ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பை உருவாக்கியுள்ளது, இப்போது இந்தகுழு அம்முச்சி சீசன் 2 உடன் மீண்டும் வந்துள்ளது. இந்த டிரமா காமெடி தொடரின் புதிய சீசன் 8 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக்கூடியது. கிராமப்புற பின்னணி...
இயக்குனர் சங்க தலைவராக  மகுடம் சூடப்போவது யார்? திரைக்கதை மன்னனா? வசூல் மன்னனா?

இயக்குனர் சங்க தலைவராக மகுடம் சூடப்போவது யார்? திரைக்கதை மன்னனா? வசூல் மன்னனா?

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
  இயக்குனர் சங்க தலைவராக  மகுடம் சூடப்போவது யார்? திரைக்கதை மன்னனா? வசூல் மன்னனா? https://youtu.be/b4-yJ7FYwFE
நீட்தேர்வு விவகாரம்… உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

நீட்தேர்வு விவகாரம்… உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பான மனுவை அளித்தனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன், கடந்த செப்.13-ல் சட்டப்பேரவையில், தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. இதை சுட்டிக்காட்டி, குடியரசுத் தலைவரை தமிழக எம்பிக்கள் கடந்த டிச.28-ல் சந்திக்க முயற்சித்தனர். எனினும், சந்திப்பு நடைபெறாததால், அவரது அலுவலகத்தில் நீட் தேர்வுதீர்மானம், ஆளுநர் அனுப்பாதது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு மனு ஒன்றை அளித்தனர். அந்த மனு அன்றே உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்துக்கு அனுப்பப்பட...
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய எலன் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய எலன் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள், தமிழக அரசியல்
    மின்சார வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக , டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் கூறிய நிலையில், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார். உலக அளவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து வரும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் 7 வகையான மின்சார கார்களை விற்பனை செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிகிறது. எனினும், டெஸ்லா நிறுவனம் இறக்குமதி வரி சலுகை உள்ளிட்ட சலுகைகளை கோரி வருவதால், டெஸ்லா கார்கள் இந்தியாவில் கிடைப்பது காலதாமதமாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் எப்போது டெஸ்லா கார்கள் கிடைக்கும் என அதன் தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்கிடம்இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த அவர், இந்திய அரசிடம் பல்வேறு சவால்களை எத...
திருச்செந்தூர் கோவிலில் இன்று தைப்பூச திருவிழா… பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

திருச்செந்தூர் கோவிலில் இன்று தைப்பூச திருவிழா… பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
      தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த 14-ந் தேதி பொங்கல் பண்டிகை முதல் தைப்பூசமான செவ்வாய்க்கிழமை வரை பக்தர்கள் கூட்டம் கோவில்களில் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.   5 நாட்கள் தடை எதிரொலியாக அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த வியாழக்கிழமை வரை ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இந்த நிலையில் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூச திருவிழா இன்று  நடக்கிறது. இதையொட்டி திருச்செந்தூர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட...
தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்!

தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்! இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். போதுமான நேரம் தூங்காமல் இருந்தாலோ, தூக்கம் வராமல் தவித்தாலோ அது ஆரோக்கியத்தை கெடுக்கும். உடல் பருமன் பிரச்சினைக்கும் வழி வகுத்துவிடும். தூங்க செல்வதற்கு முன்பு அதிக கலோரிகள் கொண்ட உணவு பொருட்களை சாப்பிட்டால் தூக்கமின்றி தவிக்க வேண்டியதிருக்கும். சர்க்கரை, காபின் கலந்த பொருட்களையும் சாப்பிடக்கூடாது. சரி! தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம். கிரீன் டீயை இரவு பருகுவது உடலுக்கு நல்லது. அதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். குறிப்பாக அது தூக்கத்திற்கு வழிவகை செய்யும். உடல் எடையையும், கொழுப்பையும் குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. மன அழுத்தம், கவலையை போக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். தூங்குவதற்கு முன்பு பால் பருக...
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் – டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் – டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் - டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு! சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பு மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடிஉரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது. நாட்டில் 156 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதித்து உலகிற்கு இந்தியா நம்பிக்கையின் பூச்செண்டை பரிசாக அளித்துள்ளது. இந்தியர்களாகிய நமக்கு நமது ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. 21-ம் நூற்றாண்டை இந்தியர்களின் மனோபாவம் மற்றும் திறமையால் மேம்படுத்தும் தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது. இந்தியா உலகின் 3-வது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது. கொரோனா தொற்று காலங்களில் 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி பல நாடுகள...
ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்திய அயர்லாந்து!

ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்திய அயர்லாந்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்திய அயர்லாந்து! அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 24 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் அயர்லாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதால், ஒருநாள் தொடர் 1-1 என சமனிலையில் இருந்தன. இந்நிலையில், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 44.4 ஓவரில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் அரை சதமடித்து 53 ரன்னில் வெளியேறினார். ஜேசன் ஹோல்டர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அயர்லாந்து சார்பில் ஆன்டி மெக்பிரின் 4 விக்கெட்டும், கிரேக் யங் 3 விக்கெட...
அருணாசல பிரதேசத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

அருணாசல பிரதேசத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அருணாசல பிரதேசத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! அருணாசல பிரதேசத்தின் பர்சாவில் இருந்து தென்மேற்கே இன்று காலை 4.30 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. கடந்த சில நாட்களாக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்....