செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர்

சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர்

HOME SLIDER, NEWS, politics, நடிகர்கள்
சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் ஒரு சிலர் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.  எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். அதன்பின் அக்கட்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது....
வலிமை அப்டேட் வந்தாச்சு….

வலிமை அப்டேட் வந்தாச்சு….

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வலிமை அப்டேட் வந்தாச்சு.... அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர். இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வலிமை அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி வருகிற மே 1-ந் தேதி, நடிகர் அஜித்தின் 50-வது பிறந்தநாளன்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். போனி கபூரின் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது....
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சுந்தர்.சி

மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சுந்தர்.சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சுந்தர்.சி தமிழ் சினிமாவில் இயக்குனராக வெற்றி பெற்றவர் சுந்தர்.சி. இவர் பல படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். தற்போது மீண்டும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த புதிய படத்தை கட்டப்பாவ காணோம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணி செயோன் இயக்குகிறார். வி.ஆர்.டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர்.மணிகண்டராமன் தயாரிக்கும் இப்படம் கிரைம் டிராமாவாக உருவாக இருக்கிறது. இதில் சுந்தர்.சி.யுடன் ஹெபா படேல், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது...
ஆஸ்கர் விருது பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறவில்லை!

ஆஸ்கர் விருது பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறவில்லை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், திரைப்படங்கள்
ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களின் இறுதிப் பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறவில்லை! சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனிடையே ஆஸ்கர் விருதின் பொதுப்பிரிவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டதாக ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களின் பட்டியலிலும் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் இப்படம் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களின...
கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பிரசாரத்தை இன்று தொடங்கினார்!

கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பிரசாரத்தை இன்று தொடங்கினார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பிரசாரத்தை இன்று தொடங்கினார்! தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று முதற்கட்டமாக கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார். திருவாரூரில் திறந்த வேனில் பிரசாரம் செய்த அவர் பொதுமக்களிடையே பேசியதாவது: முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்திலிருந்து எனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளேன். பாஜக - அதிமுக கூட்டணியால் பாழ்பட்டுவிட்ட தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற துடிப்பு ஆர்ப்பரிக்கும் மக்களின் ஒவ்வொரு குரலிலும் எதிரொலிக்கிறது. நாங்கள் சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்! ஆட்சிக்கு வரப்போவதில்லை எனத் தெரிந்து விட்டதாலேயே, தேர்தல் அறிக்கையில்  எடப்பாடி பழனிசாமி ...
தேர்தல் பிரசாரத்தில் கமல் கார் கண்ணாடி உடைப்பு!

தேர்தல் பிரசாரத்தில் கமல் கார் கண்ணாடி உடைப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கமல்ஹாசனின் கார் மீது தாக்குதல் நடத்தியவரை பொதுமக்கள் பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.* காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். காந்திரோடு பகுதியில் பரப்புரையை முடித்துக்கொண்டு கமல்ஹாசன் கிளம்பும்போது வாலிபர் ஒருவர் அவரின் காரை வழிமறித்தார். இதையடுத்து கமல்ஹாசனின் பவுன்சர்கள் அவரை அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மீண்டும் அந்த நபர் கமல்ஹாசனின் கார் மீது ஏறி அவர் அமர்ந்திருந்த முன்பக்க கண்ணாடியை உடைத்தார். இதில் கண்ணாடி சேதமடைந்தது. பவுன்சர்கள் மீண்டும் அந்த நபரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். உடனே கமல்ஹாசன் தனது ஓட்டல் அறைக்கு கிளம்பி சென்றார். இதைப்பார்த்த மநீம தொண்டர்களும் பொதுமக்களும் சேர்ந்து தாக்குதல் நடத்திய நபரை பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்...
துரை முருகன் ஜாதி பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்!

துரை முருகன் ஜாதி பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  துரைமுருகனின் "ஜாதி" பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்..! தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. அதன் காரணமாக நடக்க உள்ள 2021 சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என பல மாதங்களுக்கு முன்பே ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியில் தொடங்கி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பல்வேறு வகையான நிகழ்வுகளை நடத்தி தேர்தலுக்கு தயார் ஆனது திமுக. அதே நேரம் 1951ம் ஆண்டில் இருந்து கடந்த தேர்தல்வரை அரக்கோணம் தொகுதியை எந்த கட்சி வெற்றி பெருகிறதோ அந்த கட்சிதான் ஆட்சியை பிடித்த வரலாறு உண்டு. திமுக கோட்டையாக இருந்த அரக்கோணம் தொகுதியை தவறான வேட்பாளர் தேர்வால் அதிமுகவிடம் தொடர்ந்து 2 முறை இழந்து நிற்கிறது திமுக. இந்த சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் பனப்பாக்கம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது " அரக்கோணம் தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. ரவி அமைச்சர்களுக்கு ...
கொரானா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட ஸ்டாலின்!

கொரானா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics
கொரானா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட ஸ்டாலின்!   முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன். குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம். - மு.க. ஸ்டாலின்...
அன்பிற்கினியாள் – கோடங்கி விமர்சனம்

அன்பிற்கினியாள் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, விமர்சனம்
  மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ரீமேக் ஆகி வந்துள்ள அன்பிற்கினியாள் தமிழில் புது கான்செப்ட். மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த படம் ஹெலன். இந்த படத்தை தமிழில் அன்பிற்கினியாள் ஆக மாறியுள்ளது. அப்பா - மகள் பாச கதை எந்த மொழிக்கும் பொருந்தக் கூடியது. அதைப் போல ஒரிஜனல் ஹெலன் திரைக்கதைக்கு எந்த சேதமும் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கோகுல்.   இதற்குத்தானே ஆசைப்பட்டாய், காஷ்மோரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்திற்காக பெருசாக எதையும் மெனக்கெடவில்லை. அதே நேரம் ஒரிஜினல் கதையில் இருந்த விறுவிறுப்பை கொஞ்சமும் குறையாமல் கொடுத்திருக்கிறார் கோகுல். ரீல் அப்பா-மகள் கதையாக இல்லாமல் இது ரியல் அப்பா அருண்பாண்டியன், மகள் கீர்த்தி பாண்டியன் இந்த படத்திலும் அப்பா மகளாக நடித்திருக்கிறார்கள். கதைப்படி அப்பா அருண்பாண்டியன், எல்ஐசி ஏஜன்டாக இருப...
ஒரே அறையில் கூட்டமாக நிற்க வைத்து நேர்க்காணல் நடத்தும் அதிமுக!

ஒரே அறையில் கூட்டமாக நிற்க வைத்து நேர்க்காணல் நடத்தும் அதிமுக!

HOME SLIDER, NEWS, politics
  அ.தி.மு.கவில் நடைபெறும் நேர்காணல் பரபரப்பு *அ.தி.மு.கவில் போட்டியிட வாய்ப்பு கோரி, 15 ஆயிரம் பணம் கட்டி விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று காலை 9 மணி முதல் நேர்காணல் நடைபெறுகிறது.* *Batch-Batch ஆக தலைமை அலுவலகமாடிக்கு அனுப்பப்படுகிறார்கள்.* *6 மாவட்டங்களுக்கு ஒரு பிரிவு அனுப்பப்படுகிறார்கள்.* *800 முதல் 1000 பேர் வரை செல்கிறார்கள்.* *இருக்கும் நாற்காவிகளில் அமர்ந்தவர்கள் போக மீதமுள்ளவர்கள் நெருக்கி அடித்து நிற்கிறார்கள்.* *அவர்கள் முன்னால், ஓ.பி.எஸ், இ.பி.எஸ், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பா.வளர்மதி, தமிழ் மகன் உசேன், முன்னாள் எம்.பி.வேணுகோபால் ஆகிய ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் தோன்றுகிறார்கள்.* *கே.பி.முனுசாமி அனனவரையும் வரவேற்று ஒரு நிமிடம் பேசுகிறார் -* *இ.பி.எஸ் 2 நிமிடம் பேசுகிறார்.* *புரட்சித் தலைவர் மற்றும் அம்மா ஆட்சியை மீண்டும் அமைக்க நாம் அனைவரும்...