நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் – விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் - விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி வடமாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று நாளை எட்டி உள்ளது. இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மத்திய அரசுக்கு விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 92-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த மத்திய அரசு இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்பட...









