இந்தியர்கள் கினியா பன்றிகளா அவர்களிடம் சோதனை நடத்த – பாஜகவை காட்டமாக விமர்சித்த சுப்பிரமணியசாமி
மத்தியஅரசு அஸ்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியர்கள் கினியா பன்றிகளா அவர்களிடம் சோதனை நடத்த என காட்டமாக விமர்சித்து உள்ளார்.
அவசரகால பயன்பாட்டிற்காக கூட அஸ்ட்ராஜெனெகாவை உலக சுகாதார நிறுவனம் அனுமதிக்காத நிலையில், இந்தியர்கள் கினியாப் பன்றிகளாக இருக்கப் போகிறார்களா? என கேள்வி எடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் 6 தடுப்பூசிகள் பல்வேறு கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவற்றில், உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்–டி தடுப்பூசி, இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைய...









