செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உலகம் முழுவதும் இன்று இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்றைய தமது கிறிஸ்துமஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக  வாட்டிகனில் கிறிஸ்துமஸ் விழா எளிமையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற நள்ளிரவு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள்  நடத்தப்பட்டு முகக்கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். உலக மக்களின் பாவங்கள் நீங்க தன்னுடலை சிலுவையில் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான இன்று அவர் பிறந்த பெத்லஹேம் நகரில் கிறிஸ்மஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் திகதி உலகம்...
பாலிவுட் படத்தில் ராஷ்மிகா!

பாலிவுட் படத்தில் ராஷ்மிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்ததாக அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். அதேபோல், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இப்படி பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதன்படி ‘மிஷன் மஞ்சு’ எனும் பாலிவுட் படத்தில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சாந்தனு பாகி இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ்!

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்காளத்தில் 1977ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 35 ஆண்டுகள் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி ஆட்சியை வீழ்த்தி திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியை எப்படியும் வீழ்த்தி பாஜக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக இடதுசாரிகளும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுகள் எழுந்துள்ளன. 2016ம் ஆண்டு நடந்த சட்ட...
அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர். லுக்

அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர். லுக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று, நடிகர் அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆராக 1 மணிநேரம் நடித்தது வெறும் கெளரவம் மட்டும் அல்ல பெரிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் ஏ.எல். விஜய் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. தலைவரின் நினைவாக இந்த புகைப்படங்களை இன்று வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அரவிந்த்சாமி அச்சு அ...
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக சிப்காட் தொழிற் பூங்காக்களில் 2.63 லட்சம் மரக்கன்றுகள்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக சிப்காட் தொழிற் பூங்காக்களில் 2.63 லட்சம் மரக்கன்றுகள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக சிப்காட் தொழிற் பூங்காக்களில் ரூ.10.36 கோடியில் 2.63 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் தொழில் பூங்காக்கள் உள்ள இடங்களை மேம்படுத்தும் வகையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசுக்கு துணை நின்று, பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றது. தமிழகத்தில் 33,776 ஏக்கர் நிலப்பரப்பளவில், 15 மாவட்டங்களில், 7 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட 23 தொழில் பூங்காக்களுடன் தொழில் வளர்ச்சி நிறுவனங்களில் மிகப்பெரும் நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு, ஜூலை மாதம், அனைத்து தொழில் பூங்காக்களிலும் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை சரிவர பேணி, திரும்பும் திசையெல்லாம் பச்சைப்பசேலென செடிகளும், செடிகள் வளர்ந்த நிலை...
கண்ணு கூசும் ‘தூங்காவனம்’ ஹீரோயின் செம்ம சூடான படம்!

கண்ணு கூசும் ‘தூங்காவனம்’ ஹீரோயின் செம்ம சூடான படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ஷாலினி தெலுங்கானாவில் பிறந்தவர் அந்த ரிவார்டு என் தெலுங்கு படத்தில் அறிமுகமான மதுஷாலினி தமிழ் படங்களிலும் இந்தி படங்களில் நடித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேஷ் அழகி பட்டத்தை வென்றார். அதன் பிறகு, ட்ரீம் கேர்ள் போட்டியில் வெற்றி பெற்ற பின் பிரேமகாதலு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழில் பழனியப்பா கல்லூரி படத்தின் அறிமுகமானார். அதன்பின் பதினாறு, அவன் இவன், தூங்காவனம் போன்ற படங்களில் நடித்தார். தூங்காவனம் படத்தில் கமலுடன் ஒரு முத்தக்காட்சியில் நடித்து, பரபரப்பை கிளப்பினார். தற்போது படம் ஏதும் கைவசம் இல்லாததால், இதுவரை பொத்தி பொத்தி மூடி வைத்திருந்தவர், இப்போது கவர்ச்சியை அள்ளி தெளிக்க ஆரம்பித்து விட்டார். 31 வயதில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்க நினைக்கும் இவர், இன்ஸ்டாவில் புகைப்படத்தை போட்டுள்ளார். அதில், அவர் மேலாடையில் நடுவில...
தனுஷ் மற்றும் யுவனுடன் மீண்டும் இணையும் செல்வராகவன்!

தனுஷ் மற்றும் யுவனுடன் மீண்டும் இணையும் செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள்
செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம் துள்ளுவதோ இளமை படம் 18 வருடங்கள் முன் வெளியானது. அந்தப் படத்தின் மூலம் 18 வருடங்களாக இயக்குனராக இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக இருந்த செல்வராகவன் தற்போது ஹீரோவாகவே இளைஞர்கள் மனதில் இருக்கப் போகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் முதல்முறையாக இணைகிறார். இந்த படத்திற்கு சாணிக் காயிதம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பயங்கர வைரலாகி பரவியது. செல்வராகவன் தற்போது முதன்முறையாக நடிகனாக சினிமாவில் நுழையபோவதால், ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்கு இடையில், ரொம்ப வருடங்களாக தனுஷ் – செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா Combination -ஐ எதிர்பார்த்து கொண்டிருக்க, தற்போது செல்வராகவன் தனது Twitter பக்கத்தில், ” மீண்டும் யுவன் மற்றும் தனுஷுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி ” என்று பதிவிட்டுள்ளார...
மீண்டும் புதிய கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் இங்கிலாந்தை தனிமைப்படுத்தியுள்ள உலக நாடுகள்!

மீண்டும் புதிய கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் இங்கிலாந்தை தனிமைப்படுத்தியுள்ள உலக நாடுகள்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
  உலக நாடுகளை மீண்டும் புதிய கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் உலக நாடுகள் இங்கிலாந்தை தனிமைப்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகளே ஸ்தம்பித்து போனது. ஒவ்வொரு நாடுகளிலம் மக்கள் கொரோனாவால் பாதிப்பட்டு பல இன்னல்களை சந்தித்தனர். மக்களை பாதிக்கமால் இருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொருளாதாரம், வர்த்தகம் கடும் பாதிப்படைந்தன. கடும் நடவடிக்கை மற்றும் கொரோனா தடுப்பில் தீவிரம் காட்டி வந்ததால் கொரோனா வீரியம் குறைய ஆரம்பித்தது. 2020ஆம் ஆண்டு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மீண்டும் புதிய வகை கொரோனா இங்கிலாந்து நாட்டில் பரவியது. புதிய வகை கொரோனா தொற்று இங்கிலாந்து பரவ தொடங்கியிருப்பது உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொரோனா தொற்று தங்கள் நாட்டில் பரவாமல் தடுக்க இங்கிலாந்தை தனிமைப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுத்துள...
இங்கிலாந்தில் இருந்து கோவைக்கு வந்து தனிமைப் படுத்தப்பட்ட 133 பயணிகள்!

இங்கிலாந்தில் இருந்து கோவைக்கு வந்து தனிமைப் படுத்தப்பட்ட 133 பயணிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இங்கிலாந்து நாட்டில் இருந்து கோவைக்கு வந்த 133 தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் பரிணாம மாற்றம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது. இதனைத்தொடர்ந்து இந்தியாவில் வரும் 31-ம் தேதி வரை இங்கிலாந்திற்கான விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கடந்த நவம்பர் மாதம் முதல் வந்த பயணிகளின் விவரங்கள் கண்டறியப்பட்டு, அவர்களை கண்காணித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் கடந்த நவம...
இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா!

இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் இருந்து உலக நாடுகளே திக்குமுக்காடி தற்போது கொரோனா பரவல் குறைந்தது என பெருமூச்சு விட்டிருந்த நிலையில், மீண்டும் புதிய வகை கொரோனா பிரிட்டன் நாட்டில் பரவியுள்ளது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கு இந்தியா தடை விதித்தது. இதே போன்று பல நாடுகளும் இங்கிலாந்துடன் விமான சேவையை ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து டெல்லி விமானநிலையத்திற்கு வந்த 6 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் பயணித்த 50 பயணிகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உறு...