HOME SLIDER
அனுஷ்காவின் அந்த 3 நிமிடங்கள்
அனுஷ்காவின்
அந்த 3 நிமிடங்கள்
அனுஷ்கா 3 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய ஒரு காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
இயக்குனர் ராஜமௌலி இப்போது , இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்து வரும் 'ஆர் ஆர் ஆர்' படத்தில், மூன்று நிமிடம் மட்டுமே வர கூடிய, சிறப்பு தோற்றத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சி இடைவேளைக்கு முன் வருகிறதாம். மூன்று நிமிட காட்சி என்றாலும் பரவாயில்லை என ராஜமௌலிக்காக நடிக்க ஒப்புக்கொண்டாராம் அனுஷ்கா.
ராஜமவுலியின் பிரமாண்டமான படமான பாகுபலியில் அனுஷ்கா உட்பட அதில் நடித்த அனைவருக்கும் பெரும் பேரும் புகழும் கிடைத்தது....
டாப்சியின் கேம் ஓவர்..!
மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் புதுப்படத்தில் டாப்சி தான் ஹீரோயின்.
Y not ஸ்டுடியோ தயாரிக்கிறது.
இதே கதை இந்தி தெலுங்கு மொழிகளில் படமாகிறது.
இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்குகிறார்
டாப்சி இதில் மாற்றுத்திறனாளி வேஷத்தில் நடிக்கிறார்.
படத்துக்கு கேம் ஓவர் என பேர் வைத்திருக்கிறார்கள். இதுவும் ஒரு விளையாட்டு அரசியல் தொடர்பான படம் என்கிறார்கள்....
கமலின் நெக்ஸ்ட் மூவ் தேவர் மகன் 2
நடிகர் கமல்ஹாசன் முழு நேர அரசியலில் இறங்கினாலும் அவரின் திரைப்பசி அடங்காது. ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் தான் என் சினிமா வாழ்க்கையில் கடைசி படம் என கமல் அறிவித்தாலும் இந்தியன் 2 முடிவதற்கான எந்த அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் தெரியவில்லை.
அதே நேரம் கமலின் அரசியலில் அடுத்த மூவ் சட்டமன்ற தேர்தல் என்றால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் பிக்பாஸ் சீசன் 3 முடித்து அதில் கிடைக்கும் தொகையில் இன்னும் சில படங்களை தயாரிக்க திட்டம் இருந்தாலும் தனது நீண்ட நாள் ஆசையான தேவர்மகன் படத்தின் 2ம் பாகம் எடுக்க வேண்டிய நேரம் இது தான் என கமல் முடிவு செய்திருக்கிறார்.
இதற்கான கதையை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்ததால் இப்போது கதாபாத்திரங்கள் தேடும் பணியில் இறங்கி இருக்கிறார் கமல்.
அதன் முதற்கட்டமாக இசையை இசைஞானி இளையராஜாவிடம் ஒப்படைத்து இருக்கிறார். இதற்கு சம்மதம் வாங்...
அப்பாடா… விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100 படங்கள் ஒருவழியாக இன்று ரிலீஸ்..!
விஷால் நடித்து மது தயாரித்த படம் அயோக்யா. இந்த படம் கன்னடத்தில் ஹிட் அடித்த டெம்பர் படத்தின் ரீமேக் என்றார்கள். இந்த நிலையில் படம் கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது.
அதன் பின் மே 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென படத்தின் தயாரிப்பாளர் மதுவே பட ரிலீசுக்கு முட்டுக்கட்டை போட்டார்.
பட தயாரிப்பு செலவு திட்டமிட்டதை விட அதிகம் ஆனதற்கு விஷால் தான் காரணம் அதிகரித்த பட்ஜெட் தொகையை கொடுத்தால் தான் படம் ரிலீஸ் ஆகும் என கூற ரிலீஸ் மீண்டும் சிக்கல் ஆனது.
ரிலீசுக்கு முதல் நாள் மாலை தொடங்கி நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாமல் போனதால் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகாமல் போனது.
தயாரிப்பாளர் சங்கத்தலைவர் படத்துக்கே இந்த நிலை என கோலிவுட்டில் கடும் விவாதங்கள் நடந்த நிலையில் மீண்டும் பல சுற்று பேச்சுவார்த்தை...
பா.ரஞ்சித் அடுத்த சாய்ஸ் எஸ்.ஜே.சூர்யா..!
பா.ரஞ்சித் அடுத்த சாய்ஸ் எஸ்.ஜே.சூர்யா..!
பா.ரஞ்சித் தயாரிப்பில் இப்போது இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் தினேஷ் நடிப்பில் உருவாகி வருகிறது.
அடுத்ததாக கலையரசனை வைத்து ஒரு படத்தை தனது பேனரில் தயாரிக்கிறார் ரஞ்சித்.
அவர் இப்போது ஆதிவாசி பழங்குடியினர் வாழ்க்கையில் மிக பிரபலமாக இருந்த மிர்சா முண்டா வாழ்க்கையை இந்தியில் படமாக்கி வருகிறார்.
அதை முடித்ததும் தமிழில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ரஞ்சித்.
...
பாலிவுட் போகிறார் அஜீத் … இயக்குநர் இவர்தான்…
நடிகர் அஜீத் எப்போதும் ஒரு படம் முடித்து அதன் ரிசல்ட் தெரிந்த பின் தான் அடுத்த படத்தை ஓகே சொல்வார்.
இப்போதும் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வையை முடித்திருக்கிறார்.
மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிக்கலாம் என செய்திகள் கிளம்பியது.
அதிலும் அஜீத் நேரடி இந்தி படமாக இருக்க 3 கதைகள் தயாராக இருப்பதாக போனி கபூரும் சொல்லி இருந்தார்.
அஜீத் தரப்பில் வழக்கமாக ஒரு சிரிப்பு மட்டுமே வந்தது.
இப்போது இந்தி படம் ரெடி. இயக்குனரும் ஓகே. கதையும் பக்கா. அறிவிப்பு மட்டுமே பாக்கி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
விஷயம் இதுதான்... நேர் கொண்ட பார்வை வாய்ப்பு வந்த போதே இயக்குனர் விஷ்ணு வர்தன் ஒரு கதையுடன் தலயை சந்தித்து பேசி இருக்கிறார்.
அந்த கதை பாலிவுட் பக்கா ஸ்டோரியாம். லைன் பிடித்து போக அஜீத் தரப்பில் கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது.
அதற்கு முன்பாக இயக்குனர் விஷ்ணு வர்...
காதலை சேர்க்கும் யோகிபாபு பிரிக்கும் மொட்டை ராஜேந்திரன்
4 காமெடி நடிகர்களின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'காவி ஆவி நடுவுல தேவி' திரைப்படம்.
இப்படத்தில் யோகி பாபு காதலை சேர்ந்து வைக்க போராடுபவராக நடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன் காதலை பிரிக்கும் தாதாவாக நடிக்கிறார். மந்திரவாதியாக இமான் அண்ணாச்சி நடித்து வருகிறார். 70 சதவீதம் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸ் ஆகுமாம். ஆரூரான் தயாரிப்பில் புகழ்மணி இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்....
விஷாலுக்கு அக்டோபரில் டும்டும்டும்…!
அரசியல்வாதிகள்தான் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுவார்கள். இப்போது அந்த லிஸ்ட்டில் நடிகர் விஷாலும் சேர்ந்து விட்டார்.
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா முடிந்தவுடன் தான் திருமணம் என்று அறிவித்திருந்த நடிகர் விஷால் கட்டிடப் பணிகள் இன்னும் முற்றுப்பெறாத நிலையில் தனது திருமணத் தேதியை அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சங்கத்துக்குப் போட்டியிட்ட போது அவர் அளித்த முக்கிய வாக்குறுதியான ‘கட்டிடம் கட்டி முடிக்காம கல்யாணம் கட்டிக்க மாட்டேன்’ என்ற அவரது வாக்குறுதியையும் மீறியிருக்கிறார்.
தமிழக அரசின் மீது தொடுத்த வழக்குக்காக கோர்ட்டுக்கு வந்தபோது நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் ஏர்கனவே நிச்சயம் செய்யப்பட்ட அனிஷாவுடன் தனக்கு அக்டோபர் 9ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக அறிவித்தார். ஆனால் நடிகர் சங்க கட்டிடம் முழுமைபெற குறைந்த ...
நான் அவ்வளவு நல்லவன் இல்லை – தனுஷ் ஓப்பன்
தனுஷ் தன் ரசிகர்களுக்கு திடீரென கடிதம் எழுதி வெளியிட்டார்.
அதில் "என் வாழ்க்கையை மாற்றிப் போட்ட துள்ளுவதோ இளமை வெளியாகி 17 ஆண்டுகள் ஓடி விட்டதா...
எல்லாமே நேற்று நடந்தது போல் இருக்கிறது. நடிப்பு என்றாலே என்ன என்று தெரியாமல் வந்த ஒரு சின்னப் பையனை ஆரத் தழுவி ஏற்றுக்கொண்டீர்கள். என் வெற்றியிலும் தோல்வியிலும் கூடவே இருந்து தோள் கொடுத்தீர்கள். என் இதயம் உங்களுக்குச் செலுத்தவேண்டிய நன்றியால் நிரம்பி வழிகிறது. இந்த 17ம் ஆண்டு நிறைவுக்கு வலைதளங்களில் நீங்கள் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச்செய்தி மற்றும் வீடியோக்களால் திக்குமுக்காடிவிட்டேன்.
நன்றி. மிக்க நன்றி. நான் ஒன்றும் அவ்வளவு சரியான நபர் அல்ல. ஆனால் நீங்கள் செலுத்தும் அளவு கடந்த அன்பால் என்னை இன்னும் கொஞ்சம் சரி செய்துகொண்டு பயணிக்க முயல்கிறேன்’என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் தனுஷ்.
கடந்த சில வாரங்களில் தனுஷ் ரசி...

