சிவி 2 விமர்சனம்
செந்தில்நாதன் இயக்கத்தில் யோகி, தேஜ், ஸ்வாதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “சிவி 2”. சிவி படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படம் எப்படியான கதையம்சத்தை கொண்டது என்பதை பார்த்துவிடலாம்.
துளசி சினி ஆர்ட்ஸ் சார்பில் லலிதா கஸ்தூரி கண்ணன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
கல்லூரி மாணவர்கள் சிலரை காணவில்லை என்று அவர்களது பெற்றோர்கள் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கின்றனர். மாணவர்களை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபடுகிறது.
அவர்கள் கடைசியாக சென்ற இடத்தில் கிடைத்த சில வீடியோ கேமராக்களைக் கைப்பற்றி, சாம்ஸிடம் அந்த வீடியோ கேமராக்குள் என்ன இருக்கிறது என்பதை பார்க்கச் சொல்லி கொடுக்கிறார் இன்ஸ்பெக்டர்.
சாம்ஸ் அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கிறார். அந்த வீடியோவிற்குள் என்ன இருந்தது.? மாணவர்கள் கிடைத்தார்களா.? என்பதை பயங்கர த்ரில்லர் கொண்டு இயக்கியிரு...








