நடராஜன் உடல் நிலை கவலைக்கிடம்: பரோல் கேட்கிறார் சசிகலா!
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், கணவரைப் பார்ப்பதற்காக சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய பார்வை ஆசிரியரும், சசிகலா கணவருமான நடராஜன் கல்லீரல் பிரச்சினை காரணமாகச் சென்னையை அடுத்த குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குக் கடந்த அக்டோபர் மாதம் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடராஜன், வெளிநிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று நடராஜனுக்குத் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடராஜன் உடல்நிலை குறித்து பரவும...









