படத்திற்கு தலைப்பு வைத்ததே கதாநாயகி தான் : ‘ரெட் லேபில்’ படத்தயாரிப்பாளர் வெளிப்படையான பேச்சு!
படத்திற்கு தலைப்பு வைத்ததே கதாநாயகி தான் : 'ரெட் லேபில்' படத்தயாரிப்பாளர் வெளிப்படையான பேச்சு!
இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்.
சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.
நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடிக்க,தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த 'ரெட் லேபில்' படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநர்...









