“ரத்னம்” ஜொலிக்குமா? கோடங்கி விமர்சனம் 3.5/5
நடிகர்கள் : விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார், கும்கி அஸ்வின், துளசி
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : எம்.சுகுமார்
இயக்கம் : ஹரி
இயக்குனர் ஹரி – நடிகர் விஷால் கூட்டணி. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் ரத்னம் படத்தில் இணைந்துள்ளது. பரபர ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் கதைப்படி. விஷாலின் அம்மா சிறுவயதிலேயே தற்கொலை செய்து இறந்துவிடுகிறார். ஒரு நாள் சமுத்திரக்கனியை கொலை செய்ய வருபவரை கொன்றுவிட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படும் விஷால் பெரியவன் ஆகி வெளியே வருகிறார். தற்போது எம்எல்ஏ வாக மாறியுள்ள சமுத்திரக்கனி உடன் இருந்து ரவுடியிஸம் செய்து வருகிறார். கொள்கைக்காக கொலை செய்யும் தொழில் விஷாலுக்கு. ஒருபுறம் ஆந்திராவில் தனது தம்பிகளுடன் சேர்ந்து மிகப் பெர...