புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்- 35 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100!

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்- 35 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்- 35 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100! பெட்ரோல்-டீசல் விலை நாடு முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டின் பெட்ரோலிய தேவைகளுக்கு இந்தியா இறக்குமதியையே நம்பியுள்ளது. அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக நமது நாடு உள்ளது. மொத்த தேவையில் 82 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் கச்சா எண்ணெயின் விலை (ஒரு பேரல்) ரூ.2,800ஆக இருந்தது. இது தற்போது பல மடங்கு உயர்ந்து ரூ.5,021ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மத்திய- மாநில அரசுகளும் பெட்ரோல்- டீசல் மீது வரியை விதிக்கின்றன. இந்த 2 காரணங்களாலும் பெட்ரோல்- டீசல் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து இருக்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பே 100-ஐ கடந்து இருந...
கடலுக்கடியில் ரொமான்ஸ் செய்யும் பாபி சிம்ஹா!

கடலுக்கடியில் ரொமான்ஸ் செய்யும் பாபி சிம்ஹா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கடலுக்கடியில் ரொமான்ஸ் செய்யும் பாபி சிம்ஹா! எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் படம் வசந்த முல்லை. இந்தப் படத்தை குறும்பட இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கி வருகிறார். ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரில் கடலுக்கடியில் இருக்கும் பாபி சிம்ஹாவை நாயகி காஷ்மீரா தன் மூச்சு காற்றை கொடுத்து காப்பாற்றுவது போல் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  ...
என்னுடைய பயோபிக்கில் அவர்தான் நடிக்க வேண்டும் – சுரேஷ் ரெய்னா!

என்னுடைய பயோபிக்கில் அவர்தான் நடிக்க வேண்டும் – சுரேஷ் ரெய்னா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, sports, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
என்னுடைய பயோபிக்கில் அவர்தான் நடிக்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா! தோனி, மேரி கோம், சாய்னா நேவால் என விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டு அவை வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, சமூக வலைத்தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக பேட்டியளித்தார். அப்போது, ’உங்களுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் யார் நடிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, “தென்னிந்தியாவில் என்னுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் என்னுடைய பேவரைட் ஹீரோ சூர்யாதான் நடிக்கவேண்டும். அவரால்தான், என்னுடைய கதாபாத்திரத்தைச் செய்யமுடியும்” என்று பதிலளித்துள்ளார்....
சூர்யா 40 படத்தின் கதை இதுவா!

சூர்யா 40 படத்தின் கதை இதுவா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா 40 படத்தின் கதை இதுவா! சூரரைப்போற்று படத்துக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தை தற்சமயம் சூர்யா 40 என்று அழைத்து வருகிறார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் நடந்த நிலையில், கொரோனா ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பாண்டிராஜ் படம் என்பதால் இது கிராமத்து கதையம்சத்தில் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக புதிய தகவல் கசிந்துள்ளது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. பல இளம் பெண்களை சீரழித்து வீடியோ எடுத்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை திரைக்கதையாக உருவாக்கி, படமாக்கி வருவதாகவும் பாலியல் குற்றவாளிகளை தேடிப்ப...
விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!' சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார். 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்....
டோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் தனுஷுக்கு ரூ.50 கோடி சம்பளம்!

டோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் தனுஷுக்கு ரூ.50 கோடி சம்பளம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
டோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் தனுஷுக்கு ரூ.50 கோடி சம்பளம்! நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இந்தி படங்களில் நடித்து வட இந்தியாவிலும் பிரபலமாகி இருக்கிறார். தற்போது ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் அவரது நட்சத்திர அந்தஸ்து உயர்ந்து, சம்பளமும் அதிகமாகி உள்ளது. அடுத்ததாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க தனுசை ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படம் மூலம் நடிகர் தனுஷ் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்க நடிகர் தனுசுக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் இதுவரை வாங்கிய சம்பளத்தி...
ஷாருக்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!

ஷாருக்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஷாருக்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா! ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார். அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அட்லீ. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை பாலிவுட் படங்களில் நடித்திராத நயன்தாரா, இப்படம் மூலம் எண...
டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது - ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! சீனாவின் உகான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ், உருமாறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள ‘பி.1.1.7’ உருமாறிய வைரஸ் ஆல்பா, தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பீ.1.351’ வைரஸ் பீட்டா, பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பி.1’ வைரஸ் கமா, ‘பி.2 ’வைரஸ் ஜீட்டா என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் எப்சிலான், அயோட்டா என அழைக்கப்படுகிறது. இந்த உருமாறிய வைரஸ்கள் பற்றிய வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையை உலக சுகாத...
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? – முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? – முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? - முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை! தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28-ம் தேதி வரை அமலில் உள்ளது. தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து இன்று காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக...