வாகன ஓட்டிகள் ஜனவரி 1 முதல் இத செய்யாம போனா சிக்கல்தான்!
வாகன ஓட்டிகள் ஜனவரி 1 முதல் இத செய்யாம போனா சிக்கல்தான்!
ஓட்டுநர் உரிமம், ஆர்.சி போன்றவை ஜனவரி 1 முதல் புதுப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம், உடற்பயிற்சி சான்றிதழ் மற்றும் பதிவு சான்றிதழ் போன்ற காலாவதியான வாகன ஆவணங்களை வைத்திருப்பவர்கள் விரைவில் புதுப்பிக்க வேண்டும். ஏனெனில் காலாவதியான ஆவணங்களை வைத்திருப்பவர்களுக்கு வழக்குகளில் இருந்து விலக்கு அளிப்பதற்கான நடவடிக்கை டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
ஒன்பது மாதங்களாக நடைமுறையில் உள்ள இந்த விலக்கு, நாட்டில் கொரோனா வைரஸால் பரவலால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது டிசம்பர் 31ல் முடிவுக்கு வருகிறது.
ஜனவரி 1, 2021 முதல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MORTH) இதை மேலும் நீட்டிக்க வழிமுறைகளை வழங்காவிட்டால் புதுபிக்காத ஆவணங்களை வைத்திருப்பவர்கள் மீது வழக்குகள் போடப்படும்....









