15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள்
சேர்க்கப்பட்டு உள்ளன.
இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.
இந்த ஐ.பி.எல். போட்டிக்காக மெகா ஏலம் நடத்தப்பட்டது.
ஏலத்தின் போது ஷ்ரேயாஸ் அய்யரை கொல்கத்தா அணி ரூ.12.25 கோடிக்கு வாங்கியது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரை நியமித்ததாக அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அணியின் உரிமையாளர்கள், நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது....
தெலுங்கு திரையுலுகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராம் சரண்.
இவர் நடிப்பில் வெளியான மகதீரா, யவடு, துருவா, ரங்கஸ்தலம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு தற்காலிகமாக 'ராம்சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, தமன் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது. அதில், "ராம்சரண் 15' படத்தின் படப்பிடிப்பு திறந்த வெளியில் மக்கள் கூட்டத்துடன் நடைபெற்று வருகிறது.
இதனால் ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்...
2003-இல் வெளியான ஸ்டுடண்ட் நம்பர் 1 படத்திம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நடிகர் சிபி சத்யராஜ்.
அதன்பின் அவருடைய தந்தை சத்யராஜுடன் சேர்ந்து மன்னின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல் படங்களில் நடித்தார்.
இவர் நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை, ஜேக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா போன்ற பல படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கபடதாரி படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இவர் நடிப்பில் மாயோன், ரங்கா, வட்டம், ரேஞ்சர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.
அதன்பின் அறிமுக இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் இயக்கும், புதிய படத்தில் சிபி நடிக்க உள்ளார். இவரின் 20-வது படமாக இது உருவாகிவருகிறது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன் இச...
நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்ற அளவுகளில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஹெல்மெட்டுகளை தயாரிக்கும்படி தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இருசக்கர வாகனத்தை 40 கிமீ வேகத்திற்கு மேல் இயக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மூலம் முன்மொழியப்பட்டுள்ளன.
புதிய விதிகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு கழித்து அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.
இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு சாதனம் மற்றும் ஹெல்மெட் பயன்படுத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முன்பு முன்மொழிந்தது.
இது ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விமல்.
இவர் ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கலகலப்பு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ போன்ற பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
இவர் கடைசியாக ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் ’விலங்கு’ என்ற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார்.
இதில் விமலுடன் இணைந்து இனியா, முனீஷ்காந்த் பாலா சரவணன், ஆர்.என்.ஆர் மனோகர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படம் பிப்ரவரி 18-ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட நடிகர் விமல் பேசியது, ”இந்தக் கதை முதலில் படமா...
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக தமிழக அரசு செலுத்திய 68 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதாகவும்,
கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தமிழக அரசு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு ஏதுவாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்தது.
24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டுத் தொகையைத் தமிழக அரசு செலுத்தியுள்ளது.
ஜெயலலிதா செலுத்தாமல் இருந்த வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது. மனுக்களை விசாரித்த நீதிபதி, அரசின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தீபா, தீபக் மற்றும் வரு...
நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் 'ஆதார்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, இவர்களுடன் நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் இப்பட...
டெல்லியில் கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.
அந்தப் போராட்டத்தின்போது டெல்லி செங்கோட்டையில் சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது.
அப்போது, டெல்லி செங்கோட்டையிலுள்ள கொடிக் கம்பத்தில் சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது.
இந்தச் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடியை பஞ்சாபி நடிகர் தீப் சித்து என்பவர்தான் ஏற்றினார்.
அதனை அவர் ஒப்புக்கொண்டார். அவர் குறித்து கூறிய விவசாயிகள் அமைப்பு, ‘அவர் ஒரு சீக்கியர் அல்ல.
அவர் பா.ஜ.கவைச் சேர்ந்தவர் என்று குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தீப் சித்து கைது செய்யப்பட்டார். சுமார் 70 நாள்கள் சிறை விசாரணைக்குப் பிறகு ஏப்ரல் 17-ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில், குண்டிலில் - மனேஷ்வர் - பல்...
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பி.பி. ஏறத்தான் செய்யும் என்று பாஜகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார்.
தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகளில் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், பருவமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்காக விவசாயிகளுக்கு 33 கோடியே 86 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதிமுக ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டதாக கூறிய முதல்வர், ஆறுகளில் தூர்வாரும் பணியில் கமிஷனை தூர்வாரியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் விமர்சித்தார்.
மேலும் வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி ...