புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் – பார்த்திபன்

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் – பார்த்திபன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா இன்று அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெற்றது. கடந்த 2019 ஆண்டில் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்.  தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள். நடிகர்கள் என்பதால் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என பேசினார்....
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க  மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - வைகோ இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டது தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைக் கைது செய்வதும் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. இவ்வாறு எல்லை தாண்டி வந்து இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்த 121 படகுகள் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுக் கிடக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக, இப்படகுகளை மீட்பதற்கு இந்திய அரசு எவ...
OTT தளத்தில் வெளியாகிறது மாதவனின் ‘மாறா’

OTT தளத்தில் வெளியாகிறது மாதவனின் ‘மாறா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2015-ம் ஆண்டு மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் சார்லி. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா இணைந்து, பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பாகத் தயாரித்துள்ளனர். திலீப் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷிவதா, மௌலி, அலெக்ஸாண்டர் பாபு, எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், கிஷோர் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தான் குழந்தையாய் இருக்கும் போது, கடலோர நகரம் ஒன்றின் சுவரில் வரையப்பட்ட ஓவியத்தை வைத்து அந்நியர் ஒருவர் சொன்ன கதையக் கேட்கிறாள் பாரு. அவள் வளர்ந்த பின் அந்த ஓவியத்தை வரைந்த மாறாவைத் ...
திருமணத்துக்குப் பின் கணவருடன் ‘ஆச்சார்யா’ ஷூட்டிங் வந்த காஜல்… சிறப்பாக வரவேற்ற சிரஞ்சீவி!

திருமணத்துக்குப் பின் கணவருடன் ‘ஆச்சார்யா’ ஷூட்டிங் வந்த காஜல்… சிறப்பாக வரவேற்ற சிரஞ்சீவி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
திருமணத்துக்குப் பின் கணவருடன் ஷூட்டிங் வந்த காஜல் அகர்வால் - வரவேற்ற சிரஞ்சீவி அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கவுதம் கிச்லு - காஜல் அகர்வால் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் காஜல் - கிச்லு தம்பதி மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றிருந்தனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். திருமணத்துக்குப் பின் கணவருடன் படப்பிடிப்புக்கு வந்த காஜல் அகர்வாலுக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கு முன்னர் இந்தியன் 2, ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வந்தார் காஜல் அகர்வால். இந்நிலையில் தேனிலவை முடித்த காஜல் அகர்வால் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பில் இன்று இணைந்தார் காஜல் அகர்வால் உடன் அவரது கணவர் கிச்லுவும் வந்திருந்தார். இருவரையும் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்க...
திரைப்படமாக உருவாகும்  செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை!

திரைப்படமாக உருவாகும் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளது. சச்சின் தெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் பலரின் வாழ்க்கை, திரைப்படமாக தயாரிக்கப்பட்டு உள்ளன.  செஸ் விளையாட்டில் முடிசூடா மன்னனாக திகழும் விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாக உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர். 1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன ஆனந்த், 2000-ம் ஆண்டில், முதல்தடவையாக உலக சாம்பியன் ஆனார். தொடர்ந்து 2007, 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன் பட்டங்களை அடுத்தடுத்து வென்று சாதனை செய்தார். சூசன் நினனுடன் இணைந்து மைண்ட் மாஸ்டர் என்கிற சுயசரிதை நூலை எழுதியுள்ளார். விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பது குறித்து பலர் அவரை...
விவசாயிகள் போராட்டத்தால் தினமும் ரூ.3,500 கோடி இழப்பு!

விவசாயிகள் போராட்டத்தால் தினமும் ரூ.3,500 கோடி இழப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை நீங்க வேண்டும் என தலைநகர் புதுடெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் கடந்த 20 நாட்களாக போராடி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக நாட்டில் தினசரி ரூ. 3,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. தொழில்துறை அமைப்பான அசோசெம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 20 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தினால், தொழில்துறை பாதிப்பினை சந்தித்துள்ளது. தினசரி 3 ஆயிரத்து 500 கோடி வீதம் இதுவரை 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு அறிமுகம் செய்த, விவசாயச் சட்டங்கள் மூலம் தங்களின் விவசாய உரிமைகள் பறிக்கப்படும் என விவசாயிகள் குரலெழுப்பி வருகின்றனர். இதையடுத்து பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். விவசாயிகள், கால்நடையாக...
ரஜினி கட்சி பதிவு செய்யப்பட்டதா? ரஜினி மக்கள் மன்றம் அதிரடி அறிக்கை !!

ரஜினி கட்சி பதிவு செய்யப்பட்டதா? ரஜினி மக்கள் மன்றம் அதிரடி அறிக்கை !!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினி மக்கள் மன்றத் தலைமையிடமிருந்து அதிகாராப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் வரை ரஜினிமக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என ரஜினி மக்கள் மன்றம் வி.எம்.சுதாகர் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்சி பெயர், சின்னம் உள்ளிட்டவை குறித்தும், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார் அதற்கு பிறகு ரஜினி தொடங்கும் புதிய கட்சியின் பெயர் “மக்கள் சேவை கட்சி” என்று பெயரிடப்பட்டுள்ளதாக தற்போது அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு சின்னமாக பாபா திரைப்படத்தில் ரஜினி காட்டு ...
பாஜக-வை விட பெரிய திருடன் இல்லை: மம்தா பானர்ஜி கடும் தாக்கு

பாஜக-வை விட பெரிய திருடன் இல்லை: மம்தா பானர்ஜி கடும் தாக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாஜகவை விட பெரிய திருடன் இல்லை: மம்தா பானர்ஜி கடும் தாக்கு மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என பா.ஜனதா களம் இறங்கியுள்ளது. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மம்தா பானர்ஜி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். மத்தியில் ஆளும் பா.ஜனதா கடும் நெருக்கடி கொடுத்து வந்தாலும், அது பற்றி மம்தா பெரிதாக கவலைப்படவில்லை. மத்திய அரசு, ஆளுநர் ஆகியோர் எதிர்த்து நிற்கிறார். இந்த நிலையில் ஜல்பைகுரி என்ற இடத்தில் மம்தா பேசினார். அப்போது ‘‘பா.ஜனதாவை விட பெரிய திருடன் இல்லை. அவர்கள் சம்பல் கொள்ளைக்காரர்கள்... அவர்கள் 2014, 2016, 2019 தேர்தல்களில் ஏழு தேயிலை தோட்டங்கள் மீண்டும் திறக்கப்படும், அவற்றை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும் என்றார்கள். தற்போது வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளிக்கிறார்கள். அவர்கள் ஏமாற்றுகிறார்கள். அவர்கள் CAA, NRC அல்லது NPR ஆகியவற்றை செயல்...
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரிட்டன் பிரதமர்

இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரிட்டன் பிரதமர்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
இந்திய குடியரசு தினம் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், இந்தியாவின் 72-வது அடுத்த குடியரசு தின விழா 2021 ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து போரிஸ் ஜான்சன் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப் இன்று தெரிவித்துள்ளார்....
உலகின் 10 “Magnetic Cities” பட்டியல்… லண்டன் தொடர்ந்து சாதனை!

உலகின் 10 “Magnetic Cities” பட்டியல்… லண்டன் தொடர்ந்து சாதனை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  உலகின் 10 “Magnetic Cities” பட்டியலை வெளியிட்டது குளோபல் பவர் சிட்டி இன்டெக்ஸ். தொடர்ந்து 9 ஆண்டுகளாக முதல் இடம் பிடித்து லண்டன் சாதனை.  குளோபல் பவர் சிட்டி இன்டெக்ஸ் உலகின் மிக Magnetic Cities நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மோரி மெமோரியல் ஃபவுண்டேஷனின் நகர்ப்புற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட, காந்த நகரங்களின் குறியீடானது அதிகாரப்பூர்வ தரவு மற்றும் ஆய்வு செய்த அனைத்து 48 நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்களுடன் நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது. குளோபல் பவர் சிட்டி குறியீட்டில் தரவரிசைக்கான முதன்மைக் காரணி காந்தவியல் ஆகும். உலகெங்கிலும் உள்ள மக்கள், நிறுவனங்கள் மற்றும் மூலதனத்தை ஈர்க்க இந்த நகரங்களின் திறனை எடுத்துக்கொள்கிறது. 70 நடவடிக்கைகளை இது அடிப்படையாகக் கொண்டது. இதில் பொருளாதாரம், ஆராய்ச்சி, வளர்ச்சி, அணுகல் போன்றவைகள் அடங்கும். உலகின் முதல் 10 Magnetic Cities...