செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

கவர்ச்சிக்கு மாறிய இனியா!

கவர்ச்சிக்கு மாறிய இனியா!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இனியா. பின்னர் மெளனகுரு, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார். மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்பு சரிவர கிடைக்காததால் சீரியலில் நடிக்க தொடங்கி உள்ளார். இருப்பினும் முயற்சியை கைவிடாத இனியா, பட வாய்ப்பை பெற தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார். விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். அவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது. இனியாவின் இந்த முடிவு அவருக்கு கைகொடுக்குமா?  ...
சூர்யா தயாரிப்பில் அருண்விஜய் மகன் நாயகனாகிறார்

சூர்யா தயாரிப்பில் அருண்விஜய் மகன் நாயகனாகிறார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமார்.அவருடைய பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை இயக்குபவர் சரோவ் சண்முகம். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை அமரன் செய்கிறார் மற்றும் உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார். படம் குறித்து சரோவ் சண்முகம் கூறியதாவது… குழந்தைகளை மையப்படுத்திய குடும்பப் படங்கள் ஹாலிவுட்டை ஒப்பிடும்போது நம் தமிழ் சினிமாவில் மிகவும் அரிதானவை. நடிகர் சூர்யா அவர்களின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் எப்போதும் அழகான, கருத்துள்ள குடும்பப் படங்களை உலகளவிலான இரசிகர்கள் க...
செம்பருத்தி தொடரின் கதாநாயகன் கார்த்திக் ராஜ் நீக்கம்!

செம்பருத்தி தொடரின் கதாநாயகன் கார்த்திக் ராஜ் நீக்கம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி தொடரின் கதாநாயகன் கார்த்திக் ராஜ் நீக்கப்பட்டது தொடர்பாக ஜி தமிழ் அறிவித்துள்ளது. ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல கவனம் பெற்ற மெகா தொடர் செம்பருத்தி. இதில் கார்த்திக் ராஜ், ஷப்னம் மற்றும் பிரியா ராமன் ஆகியோர் நடித்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களாக இதில் இருந்து கார்த்திக் ராஜ் விலகிவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அதுபற்றி அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. இதை இப்போது ஜி தமிழ் நிறுவனமே டிவிட்டரில் உறுதி செய்துள்ளது. அதில் ‘செம்பருத்தி தொடரின் வெற்றிக்காக கார்த்திக்கின் அர்ப்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் கார்த்திக்கு பதில் வேறு ஒருவர் நடிக்க உள்ளார். ஆனால் எதிர்காலத்தில் கார்த்திக்கோடு இணைந்து ஜி தமிழ் பணியாற்றும்’ எனக் கூறியுள்ளது....
வலிமையை பின்னால் தள்ளிய மாஸ்டர் 2020ம் ஆண்டில் அதிகம் ட்ரெண்டான டாப் 10

வலிமையை பின்னால் தள்ளிய மாஸ்டர் 2020ம் ஆண்டில் அதிகம் ட்ரெண்டான டாப் 10

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  2020ம் ஆண்டு முடிய உள்ள நிலையில் இந்த ஆண்டில் அதிகம் ட்ரெண்டான படங்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது ட்விட்டர். 2020ம் ஆண்டின் இறுதி மாதத்தில் நுழைந்துள்ள நிலையில் இந்தியாவில் அதிகம் ட்ரெண்டான அதிகம் பேசப்பட்டவை குறித்த பட்டியலை ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்திய படங்களின் பட்டியலை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படமாக முதல் இடத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இரண்டாவதாக வக்கீல் சாஹெப் படமும், மூன்றாவது இடத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படமும் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான சூரரை போற்று 5ம் இடத்தை பிடித்துள்ள நிலையில், கேஜிஎஃப் அத்தியாயம் 2 திரைப்படம் 9வது இடத்தையும், ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் 10வது இடத்தையும் பெற்றுள்ளது....
டெல்லியில் போராடும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர்!

டெல்லியில் போராடும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியில் போராடும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். மத்திய அரசின் வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 19 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக டெல்லி ஹரியானா பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளின் போராட்டம் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. விவசாயிகள் மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டம் தற்போது தீவிரமாக வலுத்து வருகிறது. இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியில் போராடும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக உண்ணாவிரத போராட்டத்தை இன்று முதல் துவங்கியுள்ளனர்....
41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன்தான் கூட்டணி… இல்லை எனில், தேமுதிக தனித்து களமிறங்குமாம்!

41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன்தான் கூட்டணி… இல்லை எனில், தேமுதிக தனித்து களமிறங்குமாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன்தான் கூட்டணி... இல்லை எனில், தேமுதிக தனித்து களமிறங்குமாம்! 2021 சட்டமன்ற தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டிவரும் நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 67 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது, சட்டமன்ற தேர்தல், கட்சிப்பணிகள், களப்பணிகள், கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், பிரசார ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. ‘டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு ஒரு நிரந்தர முடிவு ஏற்படுத்திட முன்வர வேண்...
இந்தாண்டின் கடைசி சூரியகிரகணம் இன்று நிகழ்கிறது

இந்தாண்டின் கடைசி சூரியகிரகணம் இன்று நிகழ்கிறது

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தாண்டின் கடைசி சூரியகிரகணம் இன்று நிகழ்கிறது சூரியன் மற்றும் பூமிக்கு இடையே சரியாக ஒரே நேர்க்கோட்டில் நிலா  வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டின் கடைசி முழு சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.03 மணிக்கு தொடங்கி நாளை நள்ளிரவு வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பூமி மற்றும் சூரியனுக்கு இடையே நிலவு கடந்து செல்லும்போது சூரியன் மறைக்கப்படுவது சூரிய கிரகணம் எனப்படுகிறது. இந்த நேரத்தில், நிலவின் நிழல் பூமியின் மேற்பரப்பின் மீது விழும். பொதுவாக சூரிய கிரகணம் பகலிலும் சந்திர கிரகணம் இரவிலும் நிகழும். இந்திய நேரப்படி இந்த கடைசி சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் நம்மால் பார்க்க முடியாது. அதே நேரத்தில் சிலி, அர்ஜென்டைனா நாடுகளில் பகல் நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால் அங்கு பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்....
உறவினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்க கோரி வேலூர் ஜெயிலில் முருகன் 21வது நாளாக உண்ணாவிரதம்

உறவினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்க கோரி வேலூர் ஜெயிலில் முருகன் 21வது நாளாக உண்ணாவிரதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தனது தாய், மகள் மற்றும் உறவினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்க கோரி வேலூர் ஜெயிலில் முருகன் 21வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவரது மனைவி நளினியுடன் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி வருகிறார். தனது தாய், மகள் மற்றும் உறவினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் அரசு தன்னை ஜீவ சமாதி அடைய அனுமதிக்க வேண்டும். விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 21வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். சிறைக்காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக முருகன் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முருக...
புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய மர்மநபர்!

புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய மர்மநபர்!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மெக்ஹரன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகருக்கு நேற்று மதியம் 2 மணியளவில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் புறப்பட தயாரானது. விமானம் புறப்பட தயாரானபோது பாதுகாப்பையும் மீறி விமான நிலையத்தின் வேலியை தாண்டி விமான ஓடுதளத்திற்குள் மர்மநபர் நுழைந்தார். அந்த நபர் விமான ஓடுதளத்திற்குள் வேகமாக ஓடி வருவதை கண்ட அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் வருவதற்குள் அந்த நபர் போர்ட்லேண்ட் புறப்படுவதற்கு தயாராக இருந்த அலாஸ்கார் ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கை பகுதி மீது அத்துமீறி ஏறினார். இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய அந்...