புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

ஆட்சி முடியும் போது அவசர கதியில் தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுக்கும் மோடி அரசு… – திருமா எச்சரிக்கை

ஆட்சி முடியும் போது அவசர கதியில் தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுக்கும் மோடி அரசு… – திருமா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆட்சி முடியும் போது அவசர கதியில் தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுக்கும் மோடி அரசு... - திருமா எச்சரிக்கை வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:   புதுச்சேரி விழுப்புரம் பகுதிகளில் கடலிலும் நிலத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு உரிமம் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது அதை உடனே ரத்து செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் குமரியில் இருந்து காஞ்சிபுரம் வரை கடலிலும் நிலத்திலும் நூற்றுக் கணக்கான எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அவசரம் அவசரமாக உரிமங்களை வழங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அம்பானிக்கு அதிக அளவில் உரிமங்கள் வழங்கப் பட்டுள்ளன. தற்போது புதுச்சேரி விழுப்...
போலி கடிதம் தயாரித்த விவகாரம் நேரில் ஆஜராக லதா ரஜினிகாந்துக்கு போலீஸ் சம்மன்..!

போலி கடிதம் தயாரித்த விவகாரம் நேரில் ஆஜராக லதா ரஜினிகாந்துக்கு போலீஸ் சம்மன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  போலி கடிதம் தயாரித்த விவகாரம் நேரில் ஆஜராக லதா ரஜினிகாந்துக்கு போலீஸ் சம்மன்..! 2014ல் வெளியான ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கியிருந்தார். படுதோல்வியை அடைந்த இப்படத்தால் ரஜினி அவரது மனைவி லதா மற்றும் மகள் மூவரும் பெரும் சங்கடங்களுக்கு ஆளானார்கள். விநியோகஸ்தர்கள் பலருக்கும் ரஜினி பதில் சொல்லவேண்டி வந்தது. கர்நாடகத்தில் பிரபல தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று  இதை வாங்கி விளம்பரம் செய்தது. ஆனால், அங்கும் தமிழகத்தைப்போலவே படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.  இதனால், அதிருப்தியடைந்த வினியோகஸ்தர்கள் மற்றும் தனியார் விளம்பர நிறுவனம், நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டதாக கூறப்படுகிறது.அப்போது, ரஜினிகாந்த் குடும்பம் தரப்பில் அவரது மனைவி, நீதிமன்றம் மற்றும் தனியார் விளம்பர நிறுவனத்திற்கு கடித...
அனுஷ்காவின் அந்த 3 நிமிடங்கள்

அனுஷ்காவின் அந்த 3 நிமிடங்கள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அனுஷ்காவின் அந்த 3 நிமிடங்கள் அனுஷ்கா 3 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய ஒரு காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி இப்போது , இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்து வரும் 'ஆர் ஆர் ஆர்' படத்தில், மூன்று நிமிடம் மட்டுமே வர கூடிய, சிறப்பு தோற்றத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சி இடைவேளைக்கு முன் வருகிறதாம். மூன்று நிமிட காட்சி என்றாலும் பரவாயில்லை என ராஜமௌலிக்காக நடிக்க ஒப்புக்கொண்டாராம் அனுஷ்கா. ராஜமவுலியின் பிரமாண்டமான படமான பாகுபலியில் அனுஷ்கா உட்பட அதில் நடித்த அனைவருக்கும் பெரும் பேரும் புகழும் கிடைத்தது....
டாப்சியின் கேம் ஓவர்..!

டாப்சியின் கேம் ஓவர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் புதுப்படத்தில் டாப்சி தான் ஹீரோயின். Y not ஸ்டுடியோ தயாரிக்கிறது. இதே கதை இந்தி தெலுங்கு மொழிகளில் படமாகிறது. இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்குகிறார் டாப்சி இதில் மாற்றுத்திறனாளி வேஷத்தில் நடிக்கிறார். படத்துக்கு கேம் ஓவர் என பேர் வைத்திருக்கிறார்கள். இதுவும் ஒரு விளையாட்டு அரசியல் தொடர்பான படம் என்கிறார்கள்....
கமலின் நெக்ஸ்ட் மூவ் தேவர் மகன் 2

கமலின் நெக்ஸ்ட் மூவ் தேவர் மகன் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் கமல்ஹாசன் முழு நேர அரசியலில் இறங்கினாலும் அவரின் திரைப்பசி அடங்காது. ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் தான் என் சினிமா வாழ்க்கையில் கடைசி படம் என கமல் அறிவித்தாலும் இந்தியன் 2 முடிவதற்கான எந்த அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் தெரியவில்லை. அதே நேரம் கமலின் அரசியலில் அடுத்த மூவ் சட்டமன்ற தேர்தல் என்றால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பிக்பாஸ் சீசன் 3 முடித்து அதில் கிடைக்கும் தொகையில் இன்னும் சில படங்களை தயாரிக்க திட்டம் இருந்தாலும் தனது நீண்ட நாள் ஆசையான தேவர்மகன் படத்தின் 2ம் பாகம் எடுக்க வேண்டிய நேரம் இது தான் என கமல் முடிவு செய்திருக்கிறார். இதற்கான கதையை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்ததால் இப்போது கதாபாத்திரங்கள் தேடும் பணியில் இறங்கி இருக்கிறார் கமல். அதன் முதற்கட்டமாக இசையை இசைஞானி இளையராஜாவிடம் ஒப்படைத்து இருக்கிறார். இதற்கு சம்மதம் வாங்...
அப்பாடா… விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100 படங்கள் ஒருவழியாக இன்று ரிலீஸ்..!

அப்பாடா… விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100 படங்கள் ஒருவழியாக இன்று ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஷால் நடித்து மது தயாரித்த படம் அயோக்யா. இந்த படம் கன்னடத்தில் ஹிட் அடித்த டெம்பர் படத்தின் ரீமேக் என்றார்கள். இந்த நிலையில் படம் கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது. அதன் பின் மே 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென படத்தின் தயாரிப்பாளர் மதுவே பட ரிலீசுக்கு முட்டுக்கட்டை போட்டார். பட தயாரிப்பு செலவு திட்டமிட்டதை விட அதிகம் ஆனதற்கு விஷால் தான் காரணம் அதிகரித்த பட்ஜெட் தொகையை கொடுத்தால் தான் படம் ரிலீஸ் ஆகும் என கூற ரிலீஸ் மீண்டும் சிக்கல் ஆனது. ரிலீசுக்கு முதல் நாள் மாலை தொடங்கி நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாமல் போனதால் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகாமல் போனது. தயாரிப்பாளர் சங்கத்தலைவர் படத்துக்கே இந்த நிலை என கோலிவுட்டில் கடும் விவாதங்கள் நடந்த நிலையில் மீண்டும் பல சுற்று பேச்சுவார்த்தை...
பா.ரஞ்சித் அடுத்த சாய்ஸ் எஸ்.ஜே.சூர்யா..!

பா.ரஞ்சித் அடுத்த சாய்ஸ் எஸ்.ஜே.சூர்யா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  பா.ரஞ்சித் அடுத்த சாய்ஸ் எஸ்.ஜே.சூர்யா..! பா.ரஞ்சித் தயாரிப்பில் இப்போது இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் தினேஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. அடுத்ததாக கலையரசனை வைத்து ஒரு படத்தை தனது பேனரில் தயாரிக்கிறார் ரஞ்சித். அவர் இப்போது ஆதிவாசி பழங்குடியினர் வாழ்க்கையில் மிக பிரபலமாக இருந்த மிர்சா முண்டா வாழ்க்கையை இந்தியில் படமாக்கி வருகிறார். அதை முடித்ததும் தமிழில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ரஞ்சித்.  ...
பாலிவுட் போகிறார் அஜீத் … இயக்குநர் இவர்தான்…

பாலிவுட் போகிறார் அஜீத் … இயக்குநர் இவர்தான்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் அஜீத் எப்போதும் ஒரு படம் முடித்து அதன் ரிசல்ட் தெரிந்த பின் தான் அடுத்த படத்தை ஓகே சொல்வார். இப்போதும் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வையை முடித்திருக்கிறார். மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிக்கலாம் என செய்திகள் கிளம்பியது. அதிலும் அஜீத் நேரடி இந்தி படமாக இருக்க 3 கதைகள் தயாராக இருப்பதாக போனி கபூரும் சொல்லி இருந்தார். அஜீத் தரப்பில் வழக்கமாக ஒரு சிரிப்பு மட்டுமே வந்தது. இப்போது இந்தி படம் ரெடி. இயக்குனரும் ஓகே. கதையும் பக்கா. அறிவிப்பு மட்டுமே பாக்கி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். விஷயம் இதுதான்... நேர் கொண்ட பார்வை வாய்ப்பு வந்த போதே இயக்குனர் விஷ்ணு வர்தன் ஒரு கதையுடன் தலயை சந்தித்து பேசி இருக்கிறார். அந்த கதை பாலிவுட் பக்கா ஸ்டோரியாம். லைன் பிடித்து போக அஜீத் தரப்பில் கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. அதற்கு முன்பாக இயக்குனர் விஷ்ணு வர்...
காதலை சேர்க்கும் யோகிபாபு பிரிக்கும் மொட்டை ராஜேந்திரன்

காதலை சேர்க்கும் யோகிபாபு பிரிக்கும் மொட்டை ராஜேந்திரன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
4 காமெடி நடிகர்களின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'காவி ஆவி நடுவுல தேவி' திரைப்படம். இப்படத்தில் யோகி பாபு காதலை சேர்ந்து வைக்க போராடுபவராக நடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன் காதலை பிரிக்கும் தாதாவாக நடிக்கிறார். மந்திரவாதியாக இமான் அண்ணாச்சி நடித்து வருகிறார். 70 சதவீதம் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸ் ஆகுமாம். ஆரூரான் தயாரிப்பில் புகழ்மணி இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்....