ஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்
சிறந்த ஒலி வடிவமைப்பிற்காக ஆஸ்கர் விருது பெற்றவரான ரசூல் பூக்குட்டி கதையின் நாயகனாக, அவரது நிஜ கதாபாத்திரமாகவே நடித்துள்ள படம்தான் ”ஒரு கதை சொல்லட்டுமா”. மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவத்தை போல கேரள மாநிலம் திருச்சூரில் மிக பிரபலமான திருச்சூர் பூரம் திருவிழாவும் அதன் பின்னணியில் நடக்கும் நிகழ்வுகளும் தான் இந்த படத்தின் கதை.
படங்களுக்கு ஒலி வடிவமைப்பதில் பிஸியாக இருக்கும் ரசூல் பூக்குட்டிக்கு திருச்சூர் பூரம் திருவிழாவின் இயல்பான செண்டை மேள, மங்கள வாத்திய, பாரம்பரிய இசையை துல்லியமாக பதிவு பண்ண வேண்டும் என்பது நீண்டநாள் லட்சியம்.
அதேசமயம் இதை வியாபாரமாக்கி லாபம் சம்பாதிக்கும் திட்டத்துடன் ரசூல் பூக்குட்டியின் நண்பர் மூலமாக அவரை அணுகுகிறார் தயாரிப்பாளரான ஜாய் மேத்யூ. நட்புக்காக வேறுவழியின்றி அவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, திருச்சூர் பூரம் நிகழ்வை வீடியோ மற்றும் ஆடியோ வடிவில் கொடுப்ப...









