இலங்கை இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் “பேர்ல் இன் தி பிளட்’
இலங்கையில் நடந்த இன படுகொலை என்பது நீதிபதியும், நீதியும் இல்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு! - ‘பேர்ல் இன் தி பிளட்’ (PEARL IN THE BLOOD) இயக்குநர் கென் கந்தையா ஆதங்கம்!
இலங்கையில் ஈழத் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், அவர்களின் வலிகளையும் உலக மக்களிடம் கொண்டு சேர்க்க திரைப்படங்கள் மூலம் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதில் ஓரளவே வெற்றி பெற முடிகிறது.காரணம், பல்வேறு கட்டுப்பாடுகளால் அம்மக்களின் வலிகளை முழுமையாக இதுவரை யாராலும் சொல்ல முடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் அப்படிப்பட்ட படங்களை வெளியிடுவதற்கே பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இப்படி ஒரு நிலையில், ஈழத்தில் நடந்த இன அழிப்பின் பின்னணியை கதைக்களமாக கொண்டு, உலகளவில் நடக்கும் இன அழிப்பு சம்பவங்களை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இயக்குநர் கென் கந்தையா இயக்கியிருக்கும் படம் தான் ‘பேர்ல் இ...









