'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி- நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து நடனமாடியிருக்கும் 'பாஸ் பார்ட்டி..' பாடல் வெளியீடு
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி..' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே. எஸ். ரவீந்திரன்) இணைந்து உருவாக்கி வரும் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான 'வால்டேர் வீரய்யா' படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி இந்த படத்தி...
*பான் இந்திய திரைப்படமான 'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியீடு*
இளம் நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹனு-மேன்' படத்தில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
'ஜோம்பி ரெட்டி' எனும் திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், திறமையான இளம் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் 'ஹனு-மேன்' எனும் பான் இந்திய அளவிலான சூப்பர் ஹீரோ திரைப்படம் தயாராகியிருக்கிறது.
இயக்குநர் பிரசாந்த் வர்மா அண்மையில் வெளியிட்ட 'ஹனு-மேன்' படத்தின் காட்சி துணுக்குகளில் நாயகன் தேஜா சஜ்ஜாவின் கதாபாத்திரத்தை பிரத்யேக பார்வை மூலம் அறிமுகப்படுத்தியிருந்தார்.
இதற்கு பார்வையாளர்களிடத்தில் பெரும் தாக்கத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசர், பார்வையாளர்கள் தங்களின் கற்பனையில் கூ...
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு மூலம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
ஆனால் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி பெற இயலாத நிலை இருந்தது.
அவற்றை போக்கும் வகையில் இலவச பயிற்சி பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் 2 வருடமாக ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு நேரடி பயிற்சி வகுப்பு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இலவச நீட் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடு கடந்த சில நாட்களாக நடந்து வந்தன.
முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தமிழகத்தில் உள்ள 414 பிளாக்குகளில் ஒரு பிளாக்கிற்கு ஒரு மையம் வீதம் 414 மையங...
தென் இந்தியா படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜோதிகா. இவர் இந்தியில் 1998-ம் ஆண்டு வெளியான 'டோலி சஜா கே ரக்கீனா' என்ற படத்தில் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் தமிழ் படங்களில் கவனம் செலுத்திய ஜோதிகா, 2001-ல் 'லிட்டில் ஜான்' என்ற இந்தி படத்தில் மீண்டும் நடித்து இருந்தார். அதன் பிறகு இந்தியில் அவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை.
தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.
இது ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழில் அதிபரின் வாழ்க்கை வரலாறு படம். இதில் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்க, துஷார் இத்ராணி இயக்குகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகாவை படக்குழுவினர் அணுக அவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீண்ட இடைவெளிக்கு ஜோதிகா மீண்டும் இந்தி படத்தில் நடிக்கயிருப்பது ரசிகர்கள் மத்தி...
2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார்.
தற்போது உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு வாழை என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்ப்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராய குறிச்சியில் இன்று தொடங்கியது. அதனை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இதில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்...
*விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா*
உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். உண்மையில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழிகாட்டி.
கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம்.
பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்திய மொழிகளில் வெளியாகிறது.
வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத...
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும், எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான துஷார் காந்தி, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இன்று கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் இந்த ஒற்றுமை நடைப்பயணம், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மத்திய அரசுக்கு எதிராகவும் தொடங்கியதாக கூறப்பட்டது.
அதன்படி, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிராவில் நவம்பர் 7 ஆம் தேதி நுழைந்த ராகுல்காந்தியின் நடைப்பயணம், இன்று அம்மாநிலத்தின் அகோலா மாவட்டத்தின் பாலாபூர் பகுதியில் தொடங்கிய...
அடுத்தடுத்து படங்கள் குறித்த அப்டேட் கொடுத்து வரும் ஒரே தமிழ் நடிகராக விஜய் மட்டுமே.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான “தளபதி 67” படத்திற்கான ஒரு புதிய அப்டேட் வெளியாகி, ரசிகர்களை உற்சாகக் கடலில் நீச்சலடிக்க வைத்துள்ளது.
சமீபத்தில் வெளியாகி இந்தாண்டின் மிகப்பெரும் தமிழ் படமாக பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை உலகளவில் அள்ளிய படம் தான் விக்ரம்.
கமலஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில், யாரும் எதிர்பாராத விதத்தில் மிகவும் வித்தியாசமான ஒரு பக்கா மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகிய விக்ரம் படம், உலகளவில் பெரும் மக்கள் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த படம் விஜய்யுடன் “தளபதி 67” தான் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தளபதி 67 குறித்த தகவல் விர...