புரட்சி வாலிபனாக களமிறங்கும் அதர்வா!
“குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன்” படங்களை இயக்கிய ராஜமோகன் அடுத்தாக அட்ரஸ் என்னும் படத்தை இயக்கி இருக்கிறார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் அதர்வா, புரட்சி வாலிபராக நடித்திருக்கிறார். காளி என்ற கதாபாத்திரத்தில் வரும் அதர்வா, நட்புக்காக சிறிய வேடத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்.
இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பூஜா ஜாவேரி நடிக்கிறார். மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலி சோடா முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
தனுஷ் - செல்வராகவன் இணையும் படத்தின் புதிய அறிவிப்பு!
இயக்குனர் செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘நானே வருவேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்....
எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் இயக்கி இருக்கும் விஜயன்!
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இயக்கத்தில் தற்போது லாபம் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில் எஸ்.பி.ஜனநாதன் காலமானார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
எஸ்.பி.ஜனநாதனின் படங்கள் எப்படி தமிழ் சினிமாவில் பேசப்பட்டதோ அதுபோல், அவருடைய உதவியாளராக பணியாற்றிய எஸ்.டி.புவி, புதிய படத்தை இயக்கி வெள்ளித்திரைக்கு கொண்டு வந்து அனைவரையும் கவர இருக்கிறார்.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுடன் 2004 ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்த எஸ்.டி.புவி, விஜயன் என்னும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். விஜயன் படத்தில் பாரி, கார்த்திகேயன், யோகி, ஆர்த்தி வினோ, லைலிதா, ஶ்ரீனிதி உள்ளிட்ட...
மெட்ரோ ரெயிலில் 34 ஆயிரம் பேர் பயணம்!
மெட்ரோ ரெயில் சேவை ஒரு மாதத்திற்கு பின்பு நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் 5 நிமிடத்திற்கு ஒரு சேவையும் மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு சேவையும் அளிக்கப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ரெயில் நிலையங்களில் குளிர்சாதன வசதி தடை செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.
குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் அதிக அளவு பயணம் செய்தனர்.
முதல் நாளில் 29 ஆயிரம் பேர் பயணித்தனர். நேற்று இந்த எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், விமான நிலையங்களில் அதிக பயணிகள் பயணம் செய்தனர்.
அதேபோல ஆலந்தூர், திருமங...
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி!
தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு விவகாரம் எதிரொலித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக திமுக, அதிமுக இடையே விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு திமுக ஒருபோதும் துணை நிற்காது, தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெறுவோம் என்றார்.
‘அதிமுக ஆட்சியில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது நீட் விவகாரம் குறித்து வலியுறுத்தினேன். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்கவேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வி...
இத்தாலியில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், வரும் 28ந்தேதி முதல் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவித்து உள்ளது.
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தொற்றின் 2வது அலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று பரவலை தடுப்பதில் தடுப்பூசி சிறப்பாக பணியாற்றுவதால், உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இத்தாலி நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளையிலர, கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், அங்கு வருகிற 28ந்தேதி முதல் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு உள்ள வடமேற்கில் ...
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் உரையுடன தொடங்கியது. 24ந்தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தொடரில் நேற்று முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இன்று 2வது நாளாக விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின்போது, பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி, வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைவைத்தார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 20 விழுக்காட்டில் உள் ஒதுக்கீடாக வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு வழங்கப்பட்டிருக்கிறது. இதைச் ச...
சேலம் வாழப்பாடி அருகே குடிபோதையில் தகராறு செய்த நபர் மீது போலீஸ்காரர் லத்தியால் தாக்குதல்: குடிபோதையில் தகராறு செய்த நபர் மரணம்!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாப்பநாயகன்பட்டி சோதனைச்சாவடியில் மதுபோதையில் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை, காவலர் லத்தியால் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
https://youtu.be/wl-Eyt6_UlY
இந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போதையில் வந்த முருகேசன் என்பவரின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். பைக்கை பறிமுதல் செய்த போலீசாரை போதையில் இருந்த முருகேசன் சில வார்த்தைகளை அநாகரிகமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீஸ்காரர் ஒருவர் லத்தியால் தாக்கினார். லத்தியால் போலீஸ்காரர் அடித்த நிலையில் முருகேசன் மயங்கி விழுந்தார்.
சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மதுபோதை முருகேச...
ஓணம் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் ரிலீசாகும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’
16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.
இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ள இப்படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.
‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ திரைப்படம் வர...