செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

ஹீரோயின் நிகிலா விமலை வரவேற்று டிவீட் போட்ட கார்த்தி..!

ஹீரோயின் நிகிலா விமலை வரவேற்று டிவீட் போட்ட கார்த்தி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கார்த்தியும் அவரது அண்ணி ஜோதிகாவும் அக்கா தம்பியாக நடிக்கும் படத்தை ஜித்து ஜோசப் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் நடந்து வருகிறது. கார்த்தியின் ஜோடி யார் என்பதை முடிவு செய்யாமலேயே படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில் கிடாரி, வெற்றிவேல் படங்களில் நடித்த நிகிலா விமல் கார்த்தியின் ஜோடியாக இந்த படத்தில் இணைந்திருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகிலா விமல் இயக்குனர் ஜித்து ஜோசப் ஹீரோ கார்த்தி பேசிக் கொண்டு இருப்பது போன்ற படங்களை தனது பக்கத்தில் வெளியிட்டு ஹீரோயின் நிகிலா விமலை வரவேற்றிருக்கிறார் கார்த்தி. இந்த படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
முள்ளிவாய்கால் பேரவலம்… விடுதலை களமே விடியலை படைக்கும் – திருமாவளவன் அறிக்கை

முள்ளிவாய்கால் பேரவலம்… விடுதலை களமே விடியலை படைக்கும் – திருமாவளவன் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முள்ளிவாய்க்கால் பேரவலம்! சர்வதேச சமூகத்தின் நல்லாதரவை வென்றெடுப்போம் ! விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை. மே-18, ஈழமண்ணில் இனவழிப்புக் கொடூரம் நடந்தேறிய நாள். “யுத்தம் முடிந்தது; விடுதலைப்புலிகள் அழிந்தனர்” என்று இராஜபக்‌ஷே தலைமையிலான சிங்கள இனவெறி கும்பல் கொக்கரித்த நாள். பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன. ஈழத்தமிழர் வாழ்வில் இன்னும் வெளிச்சக் கீற்று வெளிப்படவில்லை. இனக்கொலை மற்றும் போர்க்குற்றம் இழைத்த இராஜபக்சே கும்பல் இன்னும் விசாரிக்கப்படவும் தண்டிக்கப்படவும் இல்லை. மேலும் எஞ்சியுள்ள தமிழருக்கு மறுவாழ்வளிக்கவும் அவர்களின் வாழ்வாதாரங்களுக்கான மறுகட்டமைப்பைச் செய்யவும் ஆளுங்கும்பல் எந்த முனைப்பையும் பெரிதாக மேற்கொள்ளவில்லை. தமிழர் காணிகள் யாவும் சிங்கள இராணுவத்தினருக்கென ஆக்கிரமிப்புக்குள்ளாகி பெருமளவில் இராணுவமயமாகி வருகிறது. இராணுவக் குடும்பத்தினர் புலப்பெயர்...
சரித்திர வில்லியாக களம் இறங்கப் போகும் உலக அழகி..!

சரித்திர வில்லியாக களம் இறங்கப் போகும் உலக அழகி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொடங்கி இயக்குனர் செல்வராகவன் வரை படமாக்கி பார்க்க ஆசைப்பட்டு நிறைவேறாத ஒரு விஷயம் கல்கியின் பொன்னியின் செல்வன் கதை. இப்போது அந்த கதையை பிரபல இயக்குனர் மணிரத்னம் கையில் எடுத்திருக்கிறார். தமிழ் தொடங்கி இந்தி திரையுலக பிரபலங்கள் பலர் நடிக்க ஒப்பந்தம் ஆகிவருகிறார்கள். பூங்குழலி கேரக்ட்டரில் தமிழ் பெண் சூப்பர் ஸ்டாரிணி நயன்தாரா நடிக்க பேசி வருகிறார். இப்போது முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அந்த சரித்திர படத்தில் நந்தினி ரோலில் நடிக்க பேசி இருக்கிறார்கள். இந்த கேரக்டர் கொஞ்சம் வில்லத்தனமானது. அப்ப ஐஸ் வில்லியோ......
சோமாரிகளுக்கு… காட்டமான கமல் டிவீட்

சோமாரிகளுக்கு… காட்டமான கமல் டிவீட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  மக்கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மத்திய மாநில அரசுகளை விமர்சித்தும், அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தும் சமூகவலைதள பக்கத்தில் எழுதி இருக்கிறார். அதன் விவரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள். மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. 12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, “இந்து” என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ “இந்து” என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் “பெயராக”, “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை... நாம் “இந்தியர்” என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. ...
என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் – சொல்கிறார் கமல்

என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் – சொல்கிறார் கமல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம்தான் அதிகரிக்கும்; அதனால் என்னை கைது செய்யாமல் இருப்பதுதான் நல்லது. கைதுக்கு நான் அஞ்சவில்லை. மாறாக இந்த கருத்துக்கு சரித்திரம் பதில் சொல்லும். இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறில்லை; இது உருவான சர்ச்சை அல்ல; உருவாக்கப்பட்ட சர்ச்சை பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் பதில் சொல்லும் என்கிறார் கமல்ஹாசன்....
நடிகர் சங்க நில மோசடி புகார் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக ராதாரவி, சரத்குமாருக்கு சம்மன்..!

நடிகர் சங்க நில மோசடி புகார் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக ராதாரவி, சரத்குமாருக்கு சம்மன்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தை முறை கேடாக விற்பனை செய்த புகாரில் நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் ராதாரவி, சரத்குமார் உட்பட 4 பேர் மீது மோசடி புகாரை நடிகர் சங்க தலைவர் நாசர் கொடுத்திருந்தார். அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சார்ஜ் ஷீட் போட்ட பிறகும் ராதாரவி, சரத்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல் அழுத்தம் காரணமாக இந்த வழக்கு தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் நடிகர் சங்க முன்னாள் நிர்வாகி சரத்குமார் மற்றும் ராதாரவி வரும் 20ஆம் தேதி காஞ்சிபுரம் குற்றவியல் போலீசாரிடம் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க நிலம் கையாடல் செய்ததாக சங்கத் தலைவர் நாசர் தொடர்ந்த வழக்கில் வரும் 20ஆம் தேதி காஞ்சீபுரம் குற்றவியல் போலீசாரிடம் முன...
பப்ளிக் ஸ்டாரின் வில்லன் அவதாரத்தால் அதிரப்போகும் களவாணி 2

பப்ளிக் ஸ்டாரின் வில்லன் அவதாரத்தால் அதிரப்போகும் களவாணி 2

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ’களவாணி 2’ வில் அரசியல் வில்லனாக அதிரடி காட்டியிருக்கும் பப்ளிக் ஸ்டார்! விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு, தடை பெற்றது தான். இயக்குநர் சற்குணத்தின் நடவடிக்கையால் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், ஹீரோ விமலின் பிரச்சினையால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இதற்கிடையே, சமீபத்தில் விமலும், விநியோகஸ்தரும் சமரசமாக போவதாக, தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டதை தொடர்ந்து ‘களவாணி 2’ பத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ‘களவாணி 2’ வில் அரசியல் வில்லனாக அதிரடி காட்டியிருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுத...
வரலட்சுமியை கழற்றி விட்டவர் விஷால் – சாட்டை விளாசிய நடிகர்

வரலட்சுமியை கழற்றி விட்டவர் விஷால் – சாட்டை விளாசிய நடிகர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கொச்சின் ஷாதி அட் சென்னை 03 என படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. ஹீரோவாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் இந்த படம் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த விழாவில் ஆர்.கே. சுரேஷ் பேசியது: ஆர்.கே.சுரேஷிடம், நடிகர் சங்கம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்ட போது, “நாசர் தலைமையில் தேர்தலில் நிற்கும் அனைவருக்கும் ஆதரவாக செயல்படுவேன். ஆனால், விஷால் நின்றால் அவருக்கு எதிராக செயல்படுவேன். அதேபோல், விஷாலை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுபவர்களு உறுதுணையாக இருப்பேன். எனக்கும் விஷாலுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர் என் ‘பில்லா பாண்டி’ படத்தை பார்க்காமல் விமசித்ததை கூட நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நடிகர்கள் சங்கத்தில் நாடக கலைஞர்களை ஒருங்கிணைத்ததில் ஜே.கே.ரித்தீஷின் மிகப்பெரிய பணி இருக்கிறது. ஆனால், அவரையே விஷால் தூக்கி எறிந்துவிட்டார். ...
தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்யத் தொடங்கும்

தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்யத் தொடங்கும்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்யத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த முறை 5 நாட்கள் தாமதமாக தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 2019-ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை புள்ளியியல் ஆய்வின்படி கேரளாவில் சற்று தாமதமாகத் தொடங்க வாய்ப்புள்ளது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்குவதற்கு பதிலாக ஜூன் 6-ஆம் தேதி தொடங்கும் எனவும், அந்தமான் நிகோபர் கடல் பகுதியில் வரும் 18-ஆம் தேதி அல்லது 19-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
ஸ்லிம் சீக்ரெட்ஸ்  வெளியிடும் அனுஷ்கா

ஸ்லிம் சீக்ரெட்ஸ் வெளியிடும் அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  விஜய், சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த அனுஷ்கா தமிழில் வெளியான ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக 20 கிலோ எடை அதிகரித்தார். அதன் பின் ‘பாகுபலி’ படத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்காவால் தன்னுடைய பழைய உடல் எடைக்கு திரும்ப முடியவில்லை. பிரபல நியூட்ரீஷியன் லூக் கோட்டின்ஹோ உதவியுடன் டயட், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் என படிப்படியாக தனது உடல் எடையைக் குறைத்து பழைய ஸ்லிம் அண்ட் ஃபிட் அனுஷ்காவாக மாறியுள்ளார். அதற்காகத்தான் எடுத்த முயற்சிகளை தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நம்முடைய உடல் எடை அதிகரிப்பு அதற்கான சிகிச்சை முறை என எல்லாமே வாழ்க்கை முறை மாற்றத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனஅழுத்தம், உடல் எ...