செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

ரஜினி படத்தில் இணைந்த திருநங்கை – தர்பார் அப்டேட்

ரஜினி படத்தில் இணைந்த திருநங்கை – தர்பார் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரஜினி படத்தில் இணைந்த திருநங்கை - தர்பார் அப்டேட் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் அதில் இணைந்து நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மும்பையை கதைக்களமாக கொண்டிருப்பதால் பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் திருநங்கை ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். திருநங்கை ஜீவா இதற்கு முன் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ படத்தில் அறிமுகமானவர். பல குறும்படங்களிலும் நடித்துள்ளார்....
16 கோடியில் மும்பையில் 14வது மாடியில் வீடு வாங்கிய தமன்னா..!

16 கோடியில் மும்பையில் 14வது மாடியில் வீடு வாங்கிய தமன்னா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  மும்பை அந்தேரியில் உள்ள லோகண்ட்வாலா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்மன்னா, மும்பை வெர்சோ வாவில் பிரபல பில்டர் சமீர் போஜ்வானியிடம் ரூ.16 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். ’பே வியூ’ என்ற பெயர் கொண்ட, 22 மாடிகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 14 வது தளத்தை வாங்கி இருக்கிறார் தமன்னா. இந்த வீட்டின் ஒரு சதுர அடி விலை ரூ.80,778. இப்பகுதியில் விற்கப்படும் விலையை விட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தரகர்களின் கூற்றுப்படி இந்த கட்டிடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் வர இருக்கும் புதிய கட்டிடத்திற்கு சதுர அடி ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அப்படியிருக்க தமன்னா 2,055 சதுர அடி பிளாட்டிற்கு ரூ.16 கோடி தமன்னா செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த புதிய வீட்டில் தமன்னா மற்றும் அவரது பாட்டி என இருவர் மட்டுமே குடியேறவிருப்பத...
பள்ளிகளில் வாத்தியாரே இல்லாமல் நீட் தேர்ச்சியை பற்றி பேசலாமா – மத்திய மாநில அரசுகளை சாடிய ஜோ..!

பள்ளிகளில் வாத்தியாரே இல்லாமல் நீட் தேர்ச்சியை பற்றி பேசலாமா – மத்திய மாநில அரசுகளை சாடிய ஜோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கிராமப்புற பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்காமல் "நீட்" தேர்ச்சி விகிதம் குறைகிறது எனக்கூறுவது தவறு - மத்திய,மாநில அரசுகளை சாடிய ஜோதிகா ராட்சசி பட பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோதிகா ரொம்பவே ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியது: அகரம் பவுண்டேசன் சார்பில் ஆண்டுதோறும் பல கிராமப்புற மாணவர்களை சந்திக்கிறேன். அவர்களில் பலர் சொல்வது எங்கள் பள்ளியில் பல நேரங்களில் ஆசிரியர்களே இருப்பதில்லை. பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாமல் இருக்கிறது என்று, முதலில் அரசு பள்ளிக்கூடங்களில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்யாமல் நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைகிறது என்று சொன்னால் எப்படி. அதோடு இல்லாமல் நான் டிவிட்டரில் சில விஷயங்களை பார்த்தேன். நான் டிவிட்டரில் இல்லை ஆனால் என் கணவர் டிவிட்டர் மூலமாக ராட்சசி படம் பற்றி கருத்துக்களில் பல இது பள்ளிக்கூடம் போல உள்ளது, சாட்டை ப...
+2 மாணவர்களுக்கு பாடமாகி தமிழ் திரையுலகை பெருமைபடுத்திய பரியேறும் பெருமாள் படக்கதை..!

+2 மாணவர்களுக்கு பாடமாகி தமிழ் திரையுலகை பெருமைபடுத்திய பரியேறும் பெருமாள் படக்கதை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவில் எப்போதாவது அத்தி பூத்தார் போல வரும் சில படங்கள் காலம் காலமாக மக்களை பேச வைக்கும். இதற்கு பல படங்களை உதாரணமாக சொல்லலாம். சமீபத்திய மெகா உதாரணம் இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த பரியேறும் பெருமாள். கதிர் , ஆனந்தி, லிஜீஸ் மாரிமுத்து உட்பட பலர் நடித்த இந்த படம் எந்த ஜாதி அடையாளமும் இல்லாமல் ஜாதி துவேஷங்களை தோலுரித்தது. அதோடு திரைக்கதை அத்தனை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்பட்டது. அதோடு பல நாடுகளில் விருது விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றது. இந்த வெற்றியின் மகுடமாக 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் கதையமைப்பு, திரைக்கதை வடிவம் ஒரு பாடமாக இடம் பிடித்து படம் இயக்கிய, தயாரித்த அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது. பாட புத்தகத்தில் ஒரு சினி...
தேர்தலில் ஓட்டு போட வராத நயன்தாரா மீது கடுப்பான கருணாஸ்…!

தேர்தலில் ஓட்டு போட வராத நயன்தாரா மீது கடுப்பான கருணாஸ்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தேர்தலில் ஓட்டு போட வராத நயன்தாரா மீது கடுப்பான கருணாஸ்...! நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும் போட்டியிட்டனர். பல்வேறு சிரமங்களுக்கிடையே நடைபெற்ற இந்த தேர்தலில் ஏராளமான நடிக, நடிகையரும் வாக்களித்தனர். ஆனால் இதில் நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகள் வாக்களிக்க வரவில்லை. நயன்தாராவை பொதுவெளியில் ராதாரவி கேவலமாக பேசியதாக நடிகர் சங்கத்தில் நயன்தாரா புகார் அளித்தபோது உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். ராதாரவிக்கு கண்டன நோட்டீஸ் அனுப்பினார்கள். விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலும் இருந்ததால் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்தும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதை தாண்டி ராதாரவியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே திமுக நீக்கியதோடு, இதுபோன்ற அநாகரீக பேச்சில் ஈடுபட்டதற்காக ராதாரவியை கண்டித்தது. நயன்தாரா அளித...
மகள் திருமண சர்ச்சை… கிறிஸ்தவ மதம் மாறினாரா கர்னாடக பாடகி சுதா ரகுநாதன்..!

மகள் திருமண சர்ச்சை… கிறிஸ்தவ மதம் மாறினாரா கர்னாடக பாடகி சுதா ரகுநாதன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
மகள் திருமண சர்ச்சை... கிறிஸ்த்தவ மதம் மாறினாரா கர்னாடக பாடகி சுதா ரகுநாதன்..! இசை உலகில் , மட்டுமல்லாமல் சினிமா,கர்நாடக சங்கீதத்தில் மிகவும் பிரபலமானவர் சுதா ரகுநாதன். இவரது மகள் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இந்நிலையில் அதற்கான அழைப்பிதழ் சமூகவலை தளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் , சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா திருமணம் செய்து கொள்ள போகும் நபர் ஒரு வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரிந்தது. அதிலும் அவர் கிறித்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. இதனால் சுதாரகுநாதனுக்கு பலதரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கர்நாடக இசைப்பாடகியான சுதா ரகுநாதன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் அவரை இனிமேல் கோவில்களில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும், கச்சேரிகளில் பாட அனுமதி தரக்கூடாது என்றும் வலியுறித்தியுள்ளனர்.   சு...
நடிகர் சங்க வழக்கில் தலையிட்டதால் தான் ஐசரிகணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீதியரசர் உத்தரவில் விளக்கம்

நடிகர் சங்க வழக்கில் தலையிட்டதால் தான் ஐசரிகணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீதியரசர் உத்தரவில் விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நடிகர் சங்க தேர்தலில் நாசர்-விஷால் கூட்டணி சார்பில் பாண்டவர் அணியும், பாக்யராஜ்-ஐசரி கணேஷ் கூட்டணியில் சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலை சந்தித்தது. தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்தே எப்படியாவது தேர்தலை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என பல முயற்சிகள் நடை பெற்றன. நடிகர் எஸ்வி சேகர் ஒரு பக்கம் "தனக்குள்ள" அதிகாரத்தை வைத்து பல தடைகளை ஏற்படுத்தி வந்தார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென தேர்தல் நடத்தும் இடத்திற்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என போலீசார் கை விரித்தனர். அதே நேரம் எஸ்.வி.சேகர் உட்பட 4 பேர் புகார் மனு கொடுத்திருப்பதாகவும், அந்த மனுக்களை விசாரிக்க வேண்டி உள்ளதால் தேர்தலை ரத்து செய்ய பதிவாளருக்கு பதிவுத்துறை தலைவர் திடீரென கடிதம் அனுப்பினார். இதை தொடர்ந்து தேர்தலை பதிவாளர் ரத்து செய்தார். இதை எதிர்த்தும் தேர்தலை அறிவித்த தேதியில் நடத்தி முடிக்க போலீச...
திருமண உடையில் படுகவர்ச்சியாக இலியானா..!

திருமண உடையில் படுகவர்ச்சியாக இலியானா..!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  திருமண உடையில் படுகவர்ச்சியாக இலியானா..! வழக்கமாக எல்லா நடிகைகளைப் போல இலியானாவும் அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை பதிவிடுவார்.   அந்த வகையில் இலியானா இப்போது வெட்டிங் அபையர் ( wedding affair) என்ற இதழுக்காக திருமண உடையை அணிந்து கொண்டு அழகான பல படங்களை கவர்ச்சியாக எடுத்துள்ளார். அதில் சில படங்கள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. திருமண உடையில் இப்படி யாராவது கவர்ச்சி காட்டுவார்களா என அந்த படங்களை பார்த்த பலரும் இலியானாவை கழுவி ஊற்றவும் செய்கிறார்கள்....
உ.பி.காங்., கூடாரத்தை அடியோடு கலைத்த ராகுல்..!

உ.பி.காங்., கூடாரத்தை அடியோடு கலைத்த ராகுல்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உ.பி.மாநிலத்தில் மாவட்ட கமிட்டிகளை கலைத்தது காங்கிரஸ் உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனிடையே அங்குள்ள 12 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளையும் கலைப்பதாக, அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. உ.பி. கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உ.பி. வடக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கலைக்கப்பட்டது. அதே நேரன் சட்டசபை இடைத்தேர்தல் பணிகளை கண்காணிக்க 2 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது....
பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா?-இயக்குனர் ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி

பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா?-இயக்குனர் ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா?-இயக்குனர் ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி சினிமா டைரக்டர் பா.ரஞ்சித், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- ஜூன் 5-ந் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பில், அதன் நிறுவனர் டிஎம் மணி என்ற உமர் பாரூக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. அதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன். சாதியத்தை எவ்வாறு நீக்குவது? சாதி இல்லாத சமூகத்தை உருவாக்குவது எப்படி? போன்றவை குறித்தும், நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் “செந்தமிழ் நாட்டு சேரிகள்” எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன். நான் ஒரு இந்திய குடிமகன். இந்திய ...