3 வயது குழந்தையை கரடி அகழிக்குள் தள்ளி விட்ட கொடூர தாய்!
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்டில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது.
அங்குள்ள அகழியில் நின்று கொண்டிருந்த கரடியை எல்லோரும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தையை அகழிக்குள் தள்ளிவிட்டார்.
அந்தப் பெண் தனது குழந்தையை அகழிக்குள் தள்ளிவிட்ட காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அகழிக்குள் விழுந்த அந்த சிறுமிக்கு அருகில் சென்று கரடி மோப்பம் பிடிக்கத் தொடங்கியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் இதுகுறித்து பூங்கா ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து அகழிக்குள் இருந்த கூண்டுக்குள் கரடியை விரட்டியடித்த நிலையில், அந்தக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
ஆனால், இந்த சம்பவம் குறித்து எதையும் அலட்டிக் கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த ...









