விஷால் நடிப்பில் 'ஆக்ஷன்' படம் வெளியாகும் அன்றே அவர் நடிக்கும் அடுத்தப் படமான 'சக்ரா' படத்தின் முதல் பார்வை போஸ்டரும் இன்று வெளியானது.
விஷால் ஃபிலிம்
ஃபாக்டரி சார்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இயக்குநராக அறிமுகமாகும் எம் எஸ் ஆனந்தன் இயக்கும் 'சக்ரா' படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறியதாவது :-
குடும்ப உணர்வுகளோடு, தொழில் நுட்பம் சார்ந்த ஆக்ஷன் திரில்லரை தேசபக்தியோடு உருவாகும் படம் தான் 'சக்ரா'. தொழில் நுட்பம் சார்ந்தது என்பதால் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு படமாகவும் இருக்கும்.
அறிமுக இயக்குநருக்கு முதல் படத்திலேயே பெரிய நாயகன் கிடைப்பது அதிர்ஷ்டம். அதிலும், விஷால் நாயகனாக கிடைத்தது என்னுடைய மிகப்பெரிய அதிர்ஷ்டம். ஒரு இயக்குநராக 'சக்ரா' படத்திற்கு கதை எழுதும்போதே இந்த மிலிட்டரி அலுவலர் கதாபாத்திரத்திற்கு...
நான் இன்னொரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு திரும்பி வந்துள்ளேன்.. அமலா அக்கினேனி.
28 ஆண்டுகளுக்குப் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் தமிழில் திரைப் பயணத்தைத் தொடங்கும் அமலா அக்கினேனியின் செய்தி.
'மைதிலி என்னை காதலி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி 1980-90 களில் தமிழ் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை அமலா. ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் நடித்த பல படங்கள் வெற்றி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றிருக்கிறார்.
1991-ல் ஃபாசில் இயக்கத்தில் 'கற்பூர முல்லை' படத்தில் தனி நாயகியாக நடித்திருந்தார். அதன் பின்பு தெலுங்கு ந...
தர்பார் பட டப்பிங் தொடங்கினார் ரஜினி..!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரித்து வரும் பிரமாண்ட படம் தர்பார்.
இதில் ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு உட்பட பலர் நடிக்கிறார்கள்.
பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது.
இப்போது படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளது.
ரஜினிகாந்த் டப்பிங் பணியை இன்று தொடங்கினார். இன்றும் நாளையம் அவர் நடித்த காட்சிகளில் டப்பிங் பேசி முடிக்க இருக்கிறார் ரஜினி.
ரஜினி டப்பிங் பேசும் படங்கள் வெளியாகி வைரல் ஆனது....
தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் தனஞ்செயன். பல படங்களை தயாரித்திருந்த தனஞ்செயன் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கப்போவதாகவும், அதற்காக பல மாதங்களாக கதை விவாதத்தில் ஈடுபட்டு அழகான திரைக்கதையை உருவாக்கி படத்தையும் பூஜை போட்டு தொடங்கி விட்டார் என சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வந்தது.
இந்த நிலையில் சமூக வலைதளபக்கம் ஒன்றில் தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் ஆக உள்ள படம் ஹாலிவுட் ரீமேக் என பதிவு வெளியாக தமிழ் திரையுலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ஏற்கனவே கதை திருட்டு புகார்களில் தமிழ் திரையுலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. பலரும் நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கி வருகிறார்கள்.
இந்த சூழலில் தயாரிப்பாளர் இயக்குநர் ஆகும் படம் ரீமேக் படம் என்ற தகவல் உண்மையா இல்லையா என்பதை சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் இயக்குனர் தான் சொல்ல முடியும்.
காத்திருப்போம்.
- கோடங்கி...
*தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்?...தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை!*
சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதன்படி உள்ளாட்சி தேர...
அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு
மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள், நடிகர் தனுஷ் தங்கள் மகன். அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது எங்கள் பாராமரிப்பு செலவை ஏற்க வேண்டும் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை எதிர்த்து தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனது பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை தாக்கல் செய்தார். இதனை ஆராயந்த நீதிமன்றம் கதிரேசன் வழக்கை தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தனுஷ் தாக்கல் செய்தது போலி சான்றிதழ் என்று கூறி கதிரேசன், மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கதிரேசன் போலி என்று கூறும் சான்றிதழ்களின் அசலை நீதிமன்றத்தில் தாக்கல் செய் தனுஷிற்கு உத்தரவிட்டு, வழக்கை...
தரமணி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜேஎஸ்கே, மம்மூட்டி நடித்த 'பேரன்பு' படத்தில் கெளரவ வேடமொன்றில் நடித்திருந்தார். தற்போது அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் பிரதான வேடங்களில் நடிக்கும் 'அக்னி சிறகுகள்' படத்தில் வலுவான பாத்திரமொன்றில் நடித்து வருகிறார்.
இயக்குநர் நவீன் 'அக்னி சிறகுகள்' படத்தில் நடிக்க அணுகியபோது, கதையிலும் தன் பாத்திரப் படைப்பிலும் வெகுவாக கவரப்பட்ட ஜேஎஸ்கே இப்போது அப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த பெரும்பாலான காட்சிகள், படத்தில் நடிக்கும் பிரதான பாத்திரங்களுடன் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன.
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சிவா தயாரிக்கும் 'அக்னி சிறகுகள்' படத்துடன், சிபிராஜ் நடிக்கும் 'கபடதாரி', ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றிலும் நல்ல வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க...
சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா-இளையராஜா சந்திப்பு நிகழ்ந்து அது பரபரப்பான செய்தியானது. அதேப்போல தேனியில் பாரதிராஜா-ராதிகா சந்திப்பு நிகழ்ந்தது.
திருமணம் ஒன்றிற்காக தேனி சென்றிருந்தார், இயக்குநர் பாரதிராஜா. அங்கு பாரதிராஜாவின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கும் ' மருதா ' படப்பிடிப்பில் இருந்த ராதிகா, பாரதிராஜா வீட்டுக்கு சென்று சந்தித்து இருவரும் உரையாடி இருக்கின்றனர். நேற்றைய காலை உணவு பாரதிராஜா வீட்டில்தான்..!...
இயக்குனராக நினைப்பவர்கள் , ஈகோ பார்க்காமல் அனைவரும் ஒருமுறை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும் – நடிகர் விஷால்
‘ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசிய விபரம் வருமாறு
வசனகர்த்தா பத்ரி பேசும்போது,
டிரைலரை பார்க்கும்போதே தெரிந்திருக்கும் ஆக்ஷன் பொருத்தமான பெயர் தான் என்று. இன்னொரு பெயர் உலகம் சுற்றம் வாலிபன் என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நீண்ட வருடங்களுக்குப் பிறகு உலக நாடுகள் பலவற்றில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இப்படம் விஷால் ரசிகர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் விதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றார்.
நடிகர் சாரா பேசும்போது,
சுந்தர் அண்ணா எப்படி இயக்குகிறார் என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அ...