பத்திரிகையாளர்களாக கார்த்திக்-அனுபமா ஜோடி இரு மொழியில் நடிக்கும் த்ரில்லர் படம் ரிவெஞ்ச்..!
இருமொழியில் உருவாகும் த்ரில்லர் படம் ‘ரிவெஞ்ச்’..!
ரோஹித் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இருமொழியில் உருவாகிவரும் படம் தான் ‘ரிவெஞ்ச்’.. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துக்கும் இந்தப்படத்தின் கதை, திரைக்கதையை ரெஞ்சு பரிபள்ளி என்பவர் எழுதுகிறார்.
படத்தை மலையாள நடிகரும் இயக்குனருமான தினேஷ் பணிக்கர் தயாரித்து இயக்குகிறார். இவர் மலையாளத்தில் கிரேயான்ஸ், லெப்ட் ரைட் லெப்ட், சாப்பா குரிஷ் ஆகிய ஹிட் படங்கள் உட்பட கிட்டத்தட்ட 12 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர்.. இந்தப்படத்தின் கதை ஊடகம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை சித்திரிக்கும் விதமாக தயாராகிறது
மீடியாவில் பணிபுரியும் காதலர்கள் இருவரின் மேல் பயணிக்கும் விதமாக கதை பயணிக்கிறது. காதலர்களாக கார்த்திக், அனுபமா இருவரும் நடிக்கின்றனர்.. அனுபமாவின் திறமை மீது நம்பிக்கை வைத்து, தீவிரவாதம் பற்றிய ...









