சிறை எனது 25வது படம் – விக்ரம் பிரபு
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு, அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ’சிறை’.
வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து படத்தின் விளம்பர பணிகளை உற்சாகமாக செய்து வருகின்றனர்.
இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களிடம் பேசியதாவது: சிறை எனது 25வது படம். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல கதை. அதில் என் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். படம் பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்.
எனக்கும் மிகவும் பிடித்த தமிழ் சாரின் வ...









