திமுக வேட்பாளருக்கு போட்டியாக சுயேச்சை வேட்பாளரை களம் இறக்கிய காங்கிரஸ்
திமுக வேட்பாளருக்கு போட்டியாக சுயேச்சை வேட்பாளரை களம் இறக்கிய காங்கிரஸ்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக முருகன் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் வேப்பனப்பள்ளி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்காமல் தி.மு.க. வேட்பாளரை அறிவித்தது அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து வேப்பனப்பள்ளி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் குப்பச்சிபாறை கிராமத்தில் ஒன்று கூடினர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. வினர் உள்ளடி வேலைகள் பார்த்து காங்கிரசை தோற்கடித்தனர். இதுபற்றி தி.மு.க. தலைமைக்கு புகார் செய்தும் கண்டிக்கவில்லை. இதனால் இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க போவதில்லை’ என்று கூட்டத்த...









