கமிஷனுக்காக 2855 கோடி டெண்டர் அதிமுக ஆட்சியின் கடைசி நேர வசூல் – ஸ்டாலின் திடுக்!
அதிமுக ஆட்சியின் கடைசி நேர வசூல்..
கமிஷனுக்காக 2855 கோடி டெண்டர்..
ஸ்டாலின் திடுக்!
அதிமுக ஆட்சியின் கடைசி கால வசூல் வேட்டையாக ரூ.2855 கோடிக்கு அவசர, அவசரமாக டெண்டர் விடப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், வசூல் வேட்டையை நடத்தி முடித்து, குவித்து விட வேண்டும் என்பதற்காக, முதலமைச்சர் பழனிசாமியின் பொறுப்பில் உள்ள பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்றே மாதங்களில் 2855 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்களை விட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நடந்து வரும் டெண்டர் கொள்ளைகளின் தொடர்ச்சியாக, தேர்தல் வரவுள்ள இந்த நேரத்திலும் பழனிசாமி இதுபோன்று, கடைசி நிமிட கையெ...









