செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

இந்தியாவில் வைரஸ் தடுப்பூசி இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு முன்னேற்றம்!

இந்தியாவில் வைரஸ் தடுப்பூசி இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு முன்னேற்றம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
இந்தியாவில் வைரஸ் தடுப்பூசி இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு முன்னேற்றம்!   இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மிக வேகமாக இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு என்பது அதிர வைப்பதாக அமைந்திருக்கிறது. தொற்று பாதிப்புக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கையும் 10 லட்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தடுப்பூசி ஒன்றுதான், இந்த பரவலை தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இந்தியாவில் இப்போது 2 தடுப்பூசிகள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியையும், ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனம் ஜைகோவ்-டி என்னும் தடுப்பூசியையும் உருவாக்கி உள்ளன. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி, கொரானா வைரஸ் திரிபுவில் இருந்து உருவாக்கப்பட்டுள...
கோர்ட் உத்தரவுக்கு பின் முதல்முறையாக போயஸ் கார்டன் போன தீபக்…

கோர்ட் உத்தரவுக்கு பின் முதல்முறையாக போயஸ் கார்டன் போன தீபக்…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கோர்ட் உத்தரவுக்கு பின் முதல்முறையாக போயஸ் கார்டன் போன தீபக்... மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. அவருடைய மறைவுக்கு பிறகு, இந்த இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்ற முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து சென்னை கலெக்டர் கட்டுப்பாட்டுக்குள் இந்த வீடு கொண்டு வரப்பட்டு வருவாய் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வீட்டுக்கான சட்டபூர்வமான முதல் நிலை வாரிசாக தீபா மற்றும் தீபக் என்று அறிவித்தது. இந்தநிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் தீபக், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு வந்தார். அங்கு காவல் பணியில் தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் இருந்தார். அவரிடம் தீபக், ‘...
முதல்கட்ட வெற்றியால் வைரஸ் தடுப்பூசியின் 2ம் கட்ட பரிசோதனைக்கு ரெடியான ரஷ்யா!

முதல்கட்ட வெற்றியால் வைரஸ் தடுப்பூசியின் 2ம் கட்ட பரிசோதனைக்கு ரெடியான ரஷ்யா!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    முதல்கட்ட வெற்றியால் வைரஸ் தடுப்பூசியின் 2ம் கட்ட பரிசோதனைக்கு ரெடியான ரஷ்யா! உலகம் முழுதும் பல்லாயிரக்கணக்கான மக்களை பலிவாங்கி வரும் கொரானா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சி உலகின் பல நாடுகளில் நடந்து வருகிறது. இந்தியாவிலும் நடந்து வருகிறது. இதற்கிடையே, ரஷியாவில் உள்ள கேமலயா தொற்றுநோய் மற்றும் நுண்உயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், கொரானா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த மாதம் 18-ந் தேதி, மனிதர்களிடம் முதல்கட்ட பரிசோதனை நடத்தியது. அச்சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட பரிசோதனை வெற்றி பெற்றதால் 2-ம் கட்ட பரிசோதனைக்கு ரஷ்யா தயாராகி உள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் கூறியதாவது:- தடுப்பூசியின் திறனை உறுதி செய்வதற்காக, மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை, வரு...
109 MLAக்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர்!

109 MLAக்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்தார் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்.* *சச்சின் பைலட் மற்றும் இரு அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்தும், கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில், ஆளுநருடன் அசோக் கெலாட் சந்திப்பு.. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அதிருப்தியில் உள்ள சச்சின் பைலட் நீக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக கோவிந்த் சிங் தோதாஸ்ரா ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராக நியமனம்...
செய்தி ஊடகங்களை சாபம் விட்ட சிறப்பு SI பால்துரை ஜாமீன் மனுத்தாக்கல்!

செய்தி ஊடகங்களை சாபம் விட்ட சிறப்பு SI பால்துரை ஜாமீன் மனுத்தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
செய்தி ஊடகஙகளை சாபம் விட்ட சிறப்பு SI பால்துரை ஜாமீன் மனுத்தாக்கல்! சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீதர் முதலில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்பின் மனுவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் சிறப்ப்பு எஸ்.ஐ. பால்துரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பால்துரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்....
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையில் A1 சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், A4 இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சேர்ப்பு!

சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையில் A1 சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், A4 இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சேர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் இருவரையும் கொடூரமாக போலீசார் அடித்து கொன்ற வழக்கு இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸ் வழக்கின் அனைத்து ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்தது. விசாரணை வேட்டையில் இறங்கிய சிபிஐ சந்தேகமரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியது. மேலும், சாத்தான்குளம் சப் இன்ஸ்பெக்டர் ரகுகணேஷை ஏ1 குற்றவாளியாக அறிவித்துள்ளது. அதோடு முக்கிய சர்ச்சை இன்ஸ்பெக்டராக இருக்கும் ஸ்ரீதர் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொலை வழக்காக மாற்றியதோடு ஏ1, ஏ2 என குற்றவாளிகள் விவரத்தையும் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் 7 அறிவுரைகள்!

அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் 7 அறிவுரைகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரானா தொற்று அதிகமாக பரவி வருகிறது.  இதையடுத்து கொரானா பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரானா காரணமாக  இறப்பு எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரானா தொற்றிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற 7 முக்கிய ஆலோசனைகளை அரசுக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.  பல்துறை வல்லுநர்கள்  கருத்துக்களைக் கேட்டு முதல்வரின் கவனத்திற்கு ஆலோசனைகளை அளிப்பதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   கொரோனா தொற்று கிராமப்புறங்களில் பரவலாக மாறிய நிலையில் பல்வேறு மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 7 முக்கிய ஆலோசனைகள் : மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார இழப்பை சமாளிக்க அனைவரின் கையிலும் பணப்புழக்கம...
வைரஸ் பாதிப்பில் இறந்தவர் உடலை டிராக்டரில் எடுத்து சென்ற டாக்டரின் மனித நேயம்!

வைரஸ் பாதிப்பில் இறந்தவர் உடலை டிராக்டரில் எடுத்து சென்ற டாக்டரின் மனித நேயம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மீண்டும் ஒரு மருத்துவரின் மனித நேயம்! தெலுங்கானாவின் பெடப்பள்ளி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை டாக்டராக ஸ்ரீராம் என்பவர் இருந்து வருகிறார்.  அவர், கொரானா பரவல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாகவும் உள்ளார்.  இந்நிலையில், கொரானா பாதித்ததில் உயிரிழந்த ஒருவரது உடலை சவக்குழிக்கு எடுத்து செல்ல வேண்டியிருந்தது.  ஆனால், சில காரணங்களுக்காக மாவட்ட நகராட்சி வாகன ஓட்டுனர் வர மறுத்துள்ளார். இதனால் நோயாளியின் உறவினர்கள் என்ன செய்வது என தெரியாமல் அவதிப்பட்டனர்.  தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.  இதனால் உடலை எடுத்து செல்ல டாக்டர் முன்வந்துள்ளார்.  இதன்படி, தனிநபர் பாதுகாப்பு உபகரணம் அணிந்து கொண்டு டிராக்டர் ஒன்றில் உடலை ஏற்றி அதனை அவரே சவக்குழிக்கு ஓட்டி சென்றார். கொரானா நோயாளியின் உடலை எடுத்து செல்ல பலரும் தயக்கம் காட்டி வரும் சூழலில், தெலுங்கானாவில் டாக்டர் ஒருவர் மற்றவர்களுக...
ஊரடங்கை மீறி காரில் ஊர் சுற்றிய மந்திரி மகனை தடுத்து நிறுத்திய  பெண் போலீஸ் இடமாற்றம்!

ஊரடங்கை மீறி காரில் ஊர் சுற்றிய மந்திரி மகனை தடுத்து நிறுத்திய பெண் போலீஸ் இடமாற்றம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
ஊரடங்கை மீறி காரில் சுற்றிய மந்திரி மகனை மடக்கிய பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுத்து சர்ச்சையில் சிக்கிய குஜராத் போலீஸ்!   குஜராத்தில் ஊரடங்கை மீறி இரவு நேரத்தில் வெளியே வந்த பாஜக அமைச்சர் மகனிடம் பெண் காவலர் ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.. அதாவது குஜராத்தைச் சேர்ந்த ஹெல்த் மினிஸ்டர் குமார் கனானி.. இவரோட மவன் பிரகாஷ் கனானி... போன புதன்கிழமை இவர் காரில் ஊரை சுற்றி வந்துருக்கான்.. அந்த காரில் ஃப்ரண்டுகளும் இருந்துருக்கானுஹ.. லாக்டவுன் விதிகளை மீறி, ரொம்ப நேரமாக சுற்றிக் கொண்டு இருக்கவும், அந்த காரை வாகன போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணை செஞ்சது சுனிதா என்ற லேடி போலீஸ்.. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், 'நான் யார் தெரியுமா?.. எம்எல்ஏ மகன்' என்றார்.. உடனே சுனிதா, "நீ யாரா வேணும்னாலும் இருந்துட்டு போ.. எம்எல்ஏ மகன்-ன்னா, உனக்கு கொரோனா வராதா? லாக்டவுனில் இப்படி தே...
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகிக்கலாம்-உச்சநீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகிக்கலாம்-உச்சநீதிமன்றம் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகிக்கலாம்-உச்சநீதிமன்ற நீதிபதிகள் லலித், இந்து மல்கோத்ரா அமர்வு அதிரடி தீர்ப்பு.* *இடைக்கால ஏற்பாடாக திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் ஒப்புதல்.* *புதிதாக நிர்வாக குழு அமைக்கும் வரை, நீதிபதி தலைமையிலான குழு கோயிலை நிர்வகிக்கும்.* *கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.* *கோயில் நிலவறைகளில் உள்ள பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கணக்கிட ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.* *9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சட்டபோராட்டத்திற்கு இன்று தீர்ப்பளித்தது, உச்சநீதிமன்றம்.* *5 நிலவறைகள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டதில் ஆபரணங்களின் மதிப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய் என தெரியவந்தது.*...