செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ-பாஸ் கட்டாயம் என்கிறார் முதல்வர் பழனிச்சாமி!

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ-பாஸ் கட்டாயம் என்கிறார் முதல்வர் பழனிச்சாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது: கொரானா வைரஸை கட்டுப்படுத்த கடுமையான முயற்சி எடுத்து வருகிறோம். *தமிழகத்தில் கொரானா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம்.* *கொரானாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.* *தமிழகம் முழுவதும் கொரானா சிகிச்சைக்கு 75ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.* *சென்னையில் மக்கள் தொகை அதிகம், குறுகலான தெருக்கள் அதிகம், ஒரே வீட்டில் 7 பேர் வரை உள்ளனர்,* *மக்கள் தொகை அதிகம் என்பதால் சென்னையில் கொரானா தொற்று எளிதாக பரவுகிறது.* *சென்னையில் தற்போது வீடு வீடாக சென்று கொரானா அறிகுறிகள் உள்ளனவா என்று பரிசோதிக்கப்படுகிறது.* *சென்னையில் சுமார் 600 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு காய்ச்சல் உள்ளவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.* *சென்னையில் மட்டும் ...
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் – மத்திய அரசு

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் – மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
      வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்த திட்டத்தின்கீழ் விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதிக்க கோரியும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்க கோரியும் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை 26 ஆயிரம் தமிழர்கள் 50 விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது....
விமானபடையில் பைலட்… வறுமையிலும் போராடி சாதித்த டீ கடைக்காரர் மகள்!

விமானபடையில் பைலட்… வறுமையிலும் போராடி சாதித்த டீ கடைக்காரர் மகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வறுமையிலும் போராடி சாதித்த டீ கடைக்காரர் மகள்! மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து சில நூறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள நீமுச் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக தேநீர் கடை நடத்தி வருபவர் சுரேஷ் கங்வால் .தனது மகளின் ஆசையை தன் கடின உழைப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளார். 24 வயதான அஞ்சல் கங்வால் சமீபத்தில் தான் விமானப்படையில் பைலட் அதிகாரியாக இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். தனது மகளின் கல்வி கட்டணத்திற்கு கூட பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு பலரிடம் கடன் வாங்கி மகளின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அஞ்சல் கங்வாலுக்கு மாநிலத்தை பெருமைப்படுத்திய மகள் என்று வாழ்த்து கூறியுள்ளார். இனி வரும் காலங்களில் நம் பாரத நாட்டை காக்க போர் விமானத்தில் வானில் அஞ்சல் வலம் வருவார் என்பது ஒவ்வொரு இந்தியர்களுக்கும் பெருமைதானே....
சாத்தான்குளம் அப்பா,மகன் இருவரையும் அடித்து கொன்ற போலீஸ் மீது கொலைவழக்கு பதிவு செய்யுங்கள் – திருமா ஆவேசம்

சாத்தான்குளம் அப்பா,மகன் இருவரையும் அடித்து கொன்ற போலீஸ் மீது கொலைவழக்கு பதிவு செய்யுங்கள் – திருமா ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளத்தில் வியாபாரிகளை அடித்துப் படுகொலை செய்த போலிஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்க! தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருக்கும் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டபோது பணியில் இருந்த காவல்துறையினர் அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், மற்றவர்கள் பணிமாற்றல் செய்யப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை போதுமானதல்ல. இந்தப் படுகொலை நடந்தபோது காவல் நிலையத்தில் பணியில் இருந்த அனைவர்மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். அவர்கள...
பலியான சீன வீரர்களின் உடலை கூட காட்டாமல் அஸ்தியை அனுப்பியதாம் சீன அரசு!

பலியான சீன வீரர்களின் உடலை கூட காட்டாமல் அஸ்தியை அனுப்பியதாம் சீன அரசு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  பலியான சீன வீரர்களின் உடலை கூட காட்டாமல் அஸ்தியை அனுப்பியதாம் சீன அரசு! லடாக் பகுதியில் சீன அத்துமீறலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதோ மட்டுமில்லாமல் நமது வீரர்களின் உடல்களுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதே நேரம் இந்திய வீரர்கள் எதிர்த்தாக்குதலில் 43 சீன வீரர்கள் பலியானதாக உறுதியற்ற தகவல்கள் தெரிவித்தன. ஆனால், சீன அரசு பலி எண்ணிக்கை எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் மரணத்தை கூட  உலக நாடுகளிடம் இருந்து மறைத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பலியான ராணுவ வீரர்களின் உடல்களை கூட சம்மந்தப்பட்ட உறவினர்கள், பெற்றோர்கள் என யாரையும் பார்க்க அனுமதிக்காமல். வெறும் அஸ்தியை மட்டுமே வீட்டிற்கு அனுப்பியுள்ளது. உடலை கூட காட்...
வன்முறையும் ஆபாசமும் அதிகம் இருப்பதால் OTT டிஜிட்டல் தளங்களுக்கும் சென்சார் அவசியம் – பிரதமருக்கு பீகார் முதல்வர் கடிதம்

வன்முறையும் ஆபாசமும் அதிகம் இருப்பதால் OTT டிஜிட்டல் தளங்களுக்கும் சென்சார் அவசியம் – பிரதமருக்கு பீகார் முதல்வர் கடிதம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  வன்முறையும் ஆபாசமும் அதிகம் இருப்பதால் OTT டிஜிட்டல் தளங்களுக்கும் சென்சார் அவசியம் - பிரதமருக்கு பீகார் முதல்வர் கடிதம் சென்சார் இல்லாமல் OTT டிஜிட்டல் தளங்களில் ரிலீசாகும் தொடர்களால் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது . திரைப்படங்கள் திரையரங்குகளில் மட்டுமே வெளியான காலம் மாறி இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இணைய உலகில் டிஜிட்டல் தளங்களிலும் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. தியேட்டரில் வெளியாகும் எல்லா படைப்புகளும் அரசின் தணிக்கைக்கு பிறகே ரிலீஸ் ஆகும். ஆனால் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை அவசியமில்லை என்ற நிலையே இப்போது வரை உள்ளது. அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் வலைதளங்களில் வெப்சீரிஸ் மட்டுமே அதிகமாக ரிலீஸ் செய்யப்பட்டு வந்த நிலையில், கொரானா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கமுடியாத நிலை தற்போது நிலவு...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வருகிறார் ஏன் தெரியுமா?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வருகிறார் ஏன் தெரியுமா?

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வருகிறார் ஏன் தெரியுமா? கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் அவரது நாட்டில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது மனைவி சானியாமிர்சா சர்வதேச  டென்னிஸ் தொடரை முடித்துவிட்டு மகனுடன் இந்தியாவில் தங்கியிருந்தார். இந்நிலையில் கொரானா பரவல் காரணமாக இரு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இருவரும் கடந்த ஐந்து மாதங்களாக சந்திக்க முடியாமல் போனது. இந்த நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் அணி  வரும் 28ம் தேதி சிறப்பு விமானம் மூலம் புறப்படவுள்ளது. 29 நபர்கள் கொண்ட அணியில் சோயப்மாலிக் இடம் பிடித்துள்ளார். இருப்பினும் கடந்த ஐந்து மாதங்களாகத் தனது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதால் எனது மனைவியையும், மகனையும் சந்திக்க சிறப்பு அன...
நடிகர் சிவக்குமாரின் யோகா பயிற்சி!

நடிகர் சிவக்குமாரின் யோகா பயிற்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
உலக யோகா தினத்தை முன்னிட்டு நடிகர் சிவக்குமார் யோகா செய்த படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.      
தம்பிக்கு பிறந்த நாள் பரிசாக ஹீரோ சான்ஸ் கொடுத்த அண்ணன் லாரன்ஸ்!

தம்பிக்கு பிறந்த நாள் பரிசாக ஹீரோ சான்ஸ் கொடுத்த அண்ணன் லாரன்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் பிறந்த நாளான இன்று அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. நண்பர்களுக்கு வணக்கம் ..இன்று என் தம்பியின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது. அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேற போகிறது. ஆம் நாங்கள் பல நாட்கள் காத்திருந்து தற்போது தான் ஒரு நல்ல திரைக்கதை அமைந்துள்ளது. ராகவேந்திரா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்க, ராஜா என்பவர் இயக்க உள்ளார். எல்வின் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும், தற்போது நிலவிவரும் கொரான...
கொரானா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியுமாம் சொல்கிறார் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி!

கொரானா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியுமாம் சொல்கிறார் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியுமாம் சொல்கிறார் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி! சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கொரானா சிகிச்சைக்கான மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரானாவை தடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.  வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரானா பரவியது. மருத்துவர்கள், செவிலியர்களின் சிறப்பான பணியினால் குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது. தினமும் கொரானா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் இதுவரை 8 லட்சத்து 27 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. வசதி இருப்பவர்கள் தான் தனியார் மருத்துவமனையை...