அரசும் எதிர்க்கட்சியும் அரசியல் விளையாட்டை நிறுத்தி விட்டு மக்களை காப்பாற்றும் பணியில் கவனம் செலுத்துங்கள் – டிடிவி தினகரன் அறிக்கை
அரசும் எதிர்க்கட்சியும் அரசியல் விளையாட்டை நிறுத்தி விட்டு மக்களை காப்பாற்றும் பணியில் கவனம் செலுத்துங்கள் - டிடிவி தினகரன் அறிக்கை
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரானா பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் அரசியல்கட்சிகளும், தன்னார்வ சேவை அமைப்புகளும் அரசுக்கு எல்லாவகையிலும் பக்கபலமாகவே இருந்து வருகின்றன. ஆனால் 20 நாட்களாக ஊரடங்கு தொடர்வதால் பல இடங்களில் அன்றாட வருமானத்தை நம்பியிருந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை,எளிய மக்கள் பலரும் உணவுக்காகவும், உணவுப் பொருட்களுக்காகவும் தத்தளித்து வரும் செய்திகள் வந்தபடியே இருக்கின்றன.
அதனால்தான் அவர்களுக்கு உதவ மற்றவர்கள் முன்வருகிறார்கள். ஒடிசா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் செய்வதைப் போன்று அரசே சமுதாய உணவகங்களை ஏற்படுத்தி பசித்த வயிறுகளுக்கு உணவிட்டிருந்தால், மற்றவர்க...









