பி.எம்.கேர்ஸ் நிதி ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? பா.ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை - மம்தா பானர்ஜி
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
மத்தியில் உள்ள பா.ஜனதா அரசின் விருப்பத்திற்கு ஏற்ப எனது தலைமையிலான மாநில அரசாங்கம் செயல்படாது. விசாரணை முகமைகள் மூலம் எங்களை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள். அதற்கெல்லாம் நாங்கள் பயப்படவில்லை. அது (பா.ஜனதா) ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை.
பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே போய் விட்டது? அதன் எதிர்காலம் என்ன என்று யாருக்காவது தெரியுமா? ஏன் அது தணிக்கை செய்யப்படவில்லை?. கொரோனாவை கட்டுப்படுத்த அவர்கள் எங்களுக்கு என்ன கொடுத்தார்கள். ஆனால் பாடம் எடுக்கிறார்கள். புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரச்சினையில் பா.ஜனதாவை எந்த கட்சிகளும் ஆதரிக்கவில்லை....
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பல மாதங்களாக தேர்தல் நடைபெறாமல் சமீபத்தில்தான் தேர்தல் நடந்தது. முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும், டி.ஆர். தலைமையில் ஒரு அணியும் சிலர் சுயேட்சைகளாகவும் போட்டியிட்டனர். கடந்த மாதம் 22ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
பின்னர் நடந்த வாக்கு எண்ணிக்கையில் டிஆர் தோல்வியை தழுவினார். முரளி ராமசாமி வெற்றி பெற்றார். அதோடு, சுயேட்சையாக தேர்தலில் நின்ற கதிரேசன் வெற்றி பெற்றார்.
இந்த சூழலில், இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பலரும் தயாரிப்பாளர்களுக்கு அன்பளிப்புகள் கொடுத்தும், கள்ள வாக்குகள் செலுத்தியும் வெற்றி பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அதோடு, தோல்வி அடைந்தவர்கள் பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் முறையாக நடைபெற வில்லை என புகார் அளித்தார்கள்.
அதேநேரம், தனியாக ஒரு அமைப்பை தொடங்க திட்டமிட்டார்கள். இதற்காக...
இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்
தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நிலை கொண்டுள்ளது.
அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வரும் 2-ந்தேதி தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும்.
இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 1-ந்தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்...
நடிகர் சிவகார்த்திகேயனும், ரகுல் ப்ரீத் சிங்-கும் இனைந்து நடிக்கும் 'அயலான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் அயலான் படத்தை இயக்குகிறார். ஹீரோவாக சிவகார்த்திகேயனும், ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங்-கும் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் கருணாகரன், யோகி பாபு, பானு பிரியா, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படதொகுப்பு செய்கிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
அயலான் படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில், தற்போது படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "அயலான் ப...
பேரறிவாளன் உள்பட7 பேர் விடுதலைக்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தை தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்பி.யுமான கனிமொழி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து தொடங்க உள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் நேற்று இரவு ஈரோட்டிற்கு வந்தார். ஈரோட்டுக்கு வந்த கனிமொழி எம்.பி.க்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு கனிமொழி எம்.பி. பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தை நாளை (இன்று) எடப்பாடியில் தொடங்க உள்ளேன். திமுக தேர்தல் அறிக்கை ...
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுவடைய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும்.
மேலும், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் டிசம்பர் 2-ந்தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 30ந் தேதி காலை நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி தொடங்குவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் 30ந் தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
காய்ச்சல் ஏற்பட்டதாகவும், கொரோனா காலத்தில் மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு, ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கடிதம் ஒன்று அண்மையில் வெளியாகி இருந்தது.
மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு தனது பெயரில் வந்த அறிக்கை உண்மையல்ல, மருத்துவ தகவல்கள் மட்டும...
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் நெட்பிளிக்ஸ்OTT தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிகில் படத்துக்குப் பிறகு விஜய் மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் பட டீசர் பெற்றது.
சமீபகால...
தமிழனின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை கொச்சைப் படுத்தவும், ஜல்லிக்கட்டு என்றாலே காளைகளை அடக்கி வெட்டி கொன்று தின்னும் காட்டுமிராண்டித்தனமான நிகழ்வுதான் ஜல்லிக்கட்டு என உலக அரங்கில் பதிய வைத்து தமிழனின் மரபு கலாச்சாரம் சார்ந்த பாரம்பரிய வீர விளையாட்டை அழிக்கவும் மாபெரும் சதி நடக்கிறது.
அதனால்தான் மலையாள மொழியில் எடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் தமிழனின் வீர விளையாட்டை அழிக்கும் சதி.
ஜல்லிக்கட்டு ஆஸ்கர் பரிந்துரை புறக்கணிப்போம் - கோடங்கி
https://youtu.be/rrpC85Axkoc...