2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி.
அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
மு.க. தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதன்பிறகு அஜய் ஞானமுத்துவிற்கு நயன்தாராவை வைத்து ’இமைக்கா நொடிகள்’ என்ற படத்தை இயக்க வாய்ப்பு வந்தது. பிறகு விக்ரமின் கோப்ரா என பல படங்கள் கிடைத்தது.
அந்த அளவிற்கு இப்படம் அனைவரையும் கவர்ந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிட்டததட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அற...
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதன் பட வேலைகளை 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கினர். வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில பிரச்சினைகளால் தள்ளிப்போனது. பின்னர் 2020-ல் வெளியாகும் என்று எதிர்பார்த்து அப்போதும் வரவில்லை.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் முடங்கியது.
இந்நிலையில் படத்தின் பணிகளை கௌதம் மேனன் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக விக்ரம் அவருடைய டப்பிங் பணிகளை கொடுத்து வருவதாவும் தெரிகிறது.
இதன...
2018-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து ’டாக்டர்’ படத்தை இயக்கினார். இதன்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
தற்போது ரஜினியின் 169-வது படத்தை இயக்க நெல்சன் ஒப்பந்தமாகியுள்ளார்.
நெல்சன் திலிப்குமார் முதன் முதலில் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார்.
சில மாதங்கள் படப்பிடிப்பு நடைப்பெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் தடைப்பட்டு வெளியாகாமல் போனது. அன்றைய பொழுது அப்படத்தில் இடம்பெற்ற சிம்புவின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
இன்றளவும் சிம்பு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில...
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.
2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் சட்ட ரீதியாக தனது மனைவியை பிரிந்த டி.இமான், தற்போது சென்னையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் திருமணம் குறித்து இரு வீட்டாரும் பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது....
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படத்தைத் தொடர்ந்து 'தோழா' படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்.
வம்சி இயக்கும் படத்தின் பணிகள் தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படம் குறித்து முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர்...
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
புவனா சுந்தர் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தனுசுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டரில் நடிகர் தனுசும் இயக்குனர் செல்வராகவனும் இடம்பெற்றுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதற்கு முன்பு செல்வரகாவன்...
15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில் போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசி லீக் ஆட்டம் மே 22ம் தேதி வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
வான்கடே மைதானம் மற்றும் டி.ஒய்.பாட்டீல் ஆகிய மைதானங்களில் தலா 20 லீக் ஆட்டங்களும், மும்பை பிரபோன் மைதானம் மற்றும் புனே எம்சிஏ சர்வதேச ஸ்டேடியத்தில் தலா 15 போட்டிகளும் நடக்கின்றன. இரண்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.
லீக் ஆட்டங்க...
#LTTEPrabakaran #sivajilingamMP #srilankapolitics #DouglasDevanandam
போரில் சரணடைந்தார் என்பது இலங்கையின் பித்தலாட்டம், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - மாஜி MP ரகசியம்
https://youtu.be/SD2ocYGTxrA
ரஷ்யாவின் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன உக்ரைன் அதிபர் வேதனை!
ரஷ்யாவின் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன என்றும் முதல் நாளில் எப்படி ரஷ்யாவை தனியாக எதிர்த்தோமோ 2வது நாளிலும் அப்படியே எதிர்கொள்கிறோம் என்றும் மேற்கத்திய நாடுகள் எங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளது என்றும் இதை எதிர்பார்த்தோம் என்றாலும்கூட அதிக வேதனையை தருகிறது என்றும் கூறியுள்ளார்.
https://youtu.be/5AcWZ9gguJI...