சாக்லேட்’ குறும்படம் படமல்ல பாடம் அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டு
சாக்லேட்’ குறும்படம் படமல்ல= பாடம்
அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டு
பன்னிரண்டு வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாக்லெட் குறும்படம் படமல்ல பாடம்
என்று செய்தி மற்றும் தகவல் தொடர்த்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு
தெரிவித்திருக்கிறார்.
பத்திரிகையாளர் கவிதா தயாரித்திருக்கும் குறும்படம் சாக்லேட். இதில் நட்டி
என்கிற நட்ராஜ், காயத்ரி,தேஜஸ்வினி, தீக்ஷளா உள்ளிட்ட பலர்
நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய,
ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் லாவண்யா நான்சி
இயக்கியிருக்கிறார். பாடல்களை மீரான் எழுத, பவதாரிணி பாடியிருக்கிறார்.
குறும்படம் ஒன்றிற்கு பவதாரிணி பின்னணி பாடியிருப்பது இது தான் முதன்முறை
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குறும்படத்தினை விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்வு ஒன்று நேற்று
சென்...









