வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு!

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு! சிஏஏக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது.. குறிப்பாக சமீபத்தில் வெடித்த டெல்லி வன்முறை இந்திய மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அதே போல் தமிழகத்திலும் சிறுபான்மையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டில்லி சென்ற தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் சந்தித்து சிஏஏ, என்பிஆர் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இதற்கு காரணம் சமீபத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போராட்டமாக மாறியதால் போலீசார் தடியடி நடத்தினர். அதை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் நள்ளிரவில் இஸ்லாமியர்கள் போராட்டத்தை தொடங்கியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது....
இந்தியன் 2 விபத்து விளக்கம் தர கமலுக்கு போலீஸ் சம்மன்!

இந்தியன் 2 விபத்து விளக்கம் தர கமலுக்கு போலீஸ் சம்மன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் விபத்து குறித்த விசாரணையில் பதில் அளிக்கும் படி நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி வைத்தனர். சென்னையை அடுத்த பூந்தமல்லி ஈவிபி ஷூட்டிங் ஸ்பாட்டில் கடந்த வாரம் திடீரென கிரேன் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு உதவி இயக்குனர் உட்பட 3 பேர் அதே இடத்தில் பலியானார்கள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில் இந்த விசாரணையின் போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி நடிகர் கமல் ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது....
இந்த காலகட்டத்துக்கு மிக அவசியமான படம் கன்னிமாடம் இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய பா.ரஞ்சித்!

இந்த காலகட்டத்துக்கு மிக அவசியமான படம் கன்னிமாடம் இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய பா.ரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இந்த கால கட்டத்திற்கு மிக அவசியமான கருத்தை சொல்லும் அற்புதமான திரைப்படம் கன்னிமாடம் - இயக்குனர் பா.ரஞ்சித் பாராட்டு ரூபி பிலிம்ஸ் ஹசீர் தயாரிப்பில் நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமான படம் கன்னிமாடம். இந்த படம் ஆண்வகொலைக்கும், சாதி வெறிக்கும் எதிரான கருத்தை சொல்லும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. படம் 2வது வாரமாக ரசிகர்கள் ஆதரவோடு ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு ஏற்கனவே தொல். திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் படம் பார்த்துவிட்டு இயக்குனரையும், தயாரிப்பாளரையும் பாராட்டிச் சென்றார். அதோடு இயக்குனர் நடிகர் போஸ் வெங்கட்டை கட்டிப்பிடித்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் கூறும் போது: கன்னிமாடம் படம் இந்த கால கட்டத்திற்கு மிக அவசியமான படம்....
திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்… இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை!

திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்… இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்... இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை! தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக கடந்த சில நாட்களாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருந்தது. அதிமுக கூட்டணியில் எப்படியும் ஒரு எம்பி பதவியை பெற தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோதிலும், அதிமுக அதற்கு இணங்கவில்லை. திமுக கூட்டணியில் இந்த பிரச்சனையே இல்லை. இருந்த போதும் சீனியர்களை ஒதுக்கிவிட்டு இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார். ஏற்கனவே மாநிலங்களவை எம்பி இருந்து வரும் திருச்சி சிவா மற்றும் என் ஆர் இளங்கோ ஆகியோர்களின் ப...
வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் – வரலட்சுமியின் பகீர் புகார்

வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் – வரலட்சுமியின் பகீர் புகார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. மீ டூ என்ற புதிய பரபரப்பின் மூலமாக பலரும் தங்களின் முந்தைய கசப்பான அனுபவங்களை சொல்லி வருகிறார்கள். அப்படி தான் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஒரு பகீர் விஷயத்தை சொல்லியிருக்கிறார் "தான் ஒரு பிரபலமானவரின் வாரிசு நடிகை என தெரிந்தும் கூட தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் என்னிடம் கூறினர். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டேன். அப்படி பேசியவர்களின் ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது ஏற்க முடியாது. பெண்கள் தங்களை பாதுகாக்க தாங்களே தயார் ஆகி கொள்ள வேண்டுமாம் சொல்கிறார் வரலட்சுமி. வரலட்சுமியின் பகீர் புகார் திரையுலகில் பரபரப்பை ...
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல்!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  திமுக தலைவர் ஸ்டாலின் ஞாயிறன்று தனது 67-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆனால் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல்நலக்குறைவு காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று முன்னரே அறிவித்து விட்டார். இந்நிலையில் மக்களுக்காக உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலிக்கட்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அன்பு சகோதரர் திரு. @mkstalin அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட "என் மனமார்ந்த வாழ்த்துக்கள்"...
முன்னாள் பத்திரிகையாளரின் படத்தலைப்பின் பாதியை எடுத்துக் கொண்ட சூர்யா- ஹரி!

முன்னாள் பத்திரிகையாளரின் படத்தலைப்பின் பாதியை எடுத்துக் கொண்ட சூர்யா- ஹரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கும் புதிய படம் அருவா! ஹரியும் சூர்யாவும் இணைந்து சிங்கம், வேல் என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியை இணைத்தது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா. இவர் தயாரிப்பில் உருவாக உள்ள படத்துக்கு அருவா என்று பேர் வைத்து இருக்கிறார்கள். டி இமான் இசையமைக்கிறார். ஏப்ரலில் தொடங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டம். படத்தலைப்பு அருவா என்பதால் கண்டிப்பாக ஆக்‌ஷன் தூள் பறக்கும் என தெரிகிறது. அதே நேரம் அருவா படத்தலைப்பு சின்ன சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ஹிட் ஆன சிலந்தி படத்தின் இயக்குனர் ஆதிராஜன் இப்போது அருவா சண்ட என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இதில் சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சென்சார் அதிகாரிகளால...
சந்தானத்தின் டிக்கிலோனா ஷூட்டிங் ஓவர்!

சந்தானத்தின் டிக்கிலோனா ஷூட்டிங் ஓவர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிற டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.  இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கும் அளவில் இருக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த  ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்க...
விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்!

விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்! சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. அப்போது நடிகர் விஜய் சேதுபதி கலை இயக்குநர் சதீஷ் குமாருக்கு வாழ்த்துச் சொல்லி கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விஜய் தனக்கும் ஒரு முத்தம் வேண்டும் என்று விஜய் சேதுபதியிடம் கேட்க, அவருக்கு அன்பு முத்தமிட்டார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு முடியும் தருணத்தில் விஜய்யின் முகத்தை இரு கைகளாலும் பிடித்து விஜய் சேதுபதி அப்படியே விஜய் கன்னத்தில் முத்தம் பதிக்க சுற்றி இருந்த மாஸ்டர் படக்குழு கை தட்டி ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இந்த முத்த விவகாரம் சில நாட்களுக்கு முன் நடந்திருந்தாலும் இப்போது தான் முத...
அம்மன் வேஷத்தில் சூலாயுதம் ஏந்திய நயன்தாரா!

அம்மன் வேஷத்தில் சூலாயுதம் ஏந்திய நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் ரொமப காலமாக அம்மன் படங்கள் எடுக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. முன்பெல்லாம் அம்மன் வேஷம் என்றாலே கே.ஆர்.விஜயாதான் அம்மன் ஆக இருப்பார். இப்போது பக்தி படங்கள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா அம்மன் ஆக நடிக்க மூக்குத்தி அம்மன் என்ற படம் அறிவிக்கப்பட்டது. அம்மன் வேஷத்தில் நடிக்கும் நயன்தாரா அந்த வேஷத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக மாமிச உணவுகளை தவிர்த்தார். விரதம் இருந்தார். பல அம்மன் கோயிகளுக்கு விஜயம் செய்து வழிபட்டார். இந்த படத்தில் அம்மன் ஆக நடிப்பதால் தனது தயாரிப்பில் தான் நடிப்பதாக அறிவித்து தொடங்கிய நெற்றிக்கண் பட ஷூட்டிங்கை கூட தள்ளி வைத்தார். இந்த சூழலில் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மன் வேஷத்தில் இருக்கும் டிசைனை இன்று வெளியிட்டது படக்குழு. அதில் சிவப்பு சேலையில் கையில் சூல...