வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

தர்பார் பட டப்பிங் தொடங்கினார் ரஜினி..!

தர்பார் பட டப்பிங் தொடங்கினார் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் பட டப்பிங் தொடங்கினார் ரஜினி..! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரித்து வரும் பிரமாண்ட படம் தர்பார். இதில் ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு உட்பட பலர் நடிக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது. இப்போது படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளது. ரஜினிகாந்த் டப்பிங் பணியை இன்று தொடங்கினார். இன்றும் நாளையம் அவர் நடித்த காட்சிகளில் டப்பிங் பேசி முடிக்க இருக்கிறார் ரஜினி. ரஜினி டப்பிங் பேசும் படங்கள் வெளியாகி வைரல் ஆனது....
தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் ஆக அறிமுகமாகும் படம் ஹாலிவுட் ரீமேக்கா..!?

தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் ஆக அறிமுகமாகும் படம் ஹாலிவுட் ரீமேக்கா..!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் தனஞ்செயன். பல படங்களை தயாரித்திருந்த தனஞ்செயன் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கப்போவதாகவும், அதற்காக பல மாதங்களாக கதை விவாதத்தில் ஈடுபட்டு அழகான திரைக்கதையை உருவாக்கி படத்தையும் பூஜை போட்டு தொடங்கி விட்டார் என சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வந்தது. இந்த நிலையில் சமூக வலைதளபக்கம் ஒன்றில் தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் ஆக உள்ள படம் ஹாலிவுட் ரீமேக் என பதிவு வெளியாக தமிழ் திரையுலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஏற்கனவே கதை திருட்டு புகார்களில் தமிழ் திரையுலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. பலரும் நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கி வருகிறார்கள். இந்த சூழலில் தயாரிப்பாளர் இயக்குநர் ஆகும் படம் ரீமேக் படம் என்ற தகவல் உண்மையா இல்லையா என்பதை சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் இயக்குனர் தான் சொல்ல முடியும். காத்திருப்போம். - கோடங்கி...
தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்..?

தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்..?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    *தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்?...தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை!* சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி உள்ளாட்சி தேர...
அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு..!

அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள், நடிகர் தனுஷ் தங்கள் மகன். அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது எங்கள் பாராமரிப்பு செலவை ஏற்க வேண்டும் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை எதிர்த்து தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை தாக்கல் செய்தார். இதனை ஆராயந்த நீதிமன்றம் கதிரேசன் வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தனுஷ் தாக்கல் செய்தது போலி சான்றிதழ் என்று கூறி கதிரேசன், மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கதிரேசன் போலி என்று கூறும் சான்றிதழ்களின் அசலை நீதிமன்றத்தில் தாக்கல் செய் தனுஷிற்கு உத்தரவிட்டு, வழக்கை...
நடிகர் அவதாரம் எடுத்த பிரபல முன்னணி தயாரிப்பாளர்..!

நடிகர் அவதாரம் எடுத்த பிரபல முன்னணி தயாரிப்பாளர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தரமணி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜேஎஸ்கே, மம்மூட்டி நடித்த 'பேரன்பு' படத்தில் கெளரவ வேடமொன்றில் நடித்திருந்தார். தற்போது அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் பிரதான வேடங்களில் நடிக்கும் 'அக்னி சிறகுகள்' படத்தில் வலுவான பாத்திரமொன்றில் நடித்து வருகிறார். இயக்குநர் நவீன் 'அக்னி சிறகுகள்' படத்தில் நடிக்க அணுகியபோது, கதையிலும் தன் பாத்திரப் படைப்பிலும் வெகுவாக கவரப்பட்ட ஜேஎஸ்கே இப்போது அப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த பெரும்பாலான காட்சிகள், படத்தில் நடிக்கும் பிரதான பாத்திரங்களுடன் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சிவா தயாரிக்கும் 'அக்னி சிறகுகள்' படத்துடன், சிபிராஜ் நடிக்கும் 'கபடதாரி', ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றிலும் நல்ல வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க...
நீண்ட நாட்களுக்கு பின் பாரதிராஜாவை சந்தித்த ராதிகா..!

நீண்ட நாட்களுக்கு பின் பாரதிராஜாவை சந்தித்த ராதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா-இளையராஜா சந்திப்பு நிகழ்ந்து அது பரபரப்பான செய்தியானது. அதேப்போல தேனியில் பாரதிராஜா-ராதிகா சந்திப்பு நிகழ்ந்தது. திருமணம் ஒன்றிற்காக தேனி சென்றிருந்தார், இயக்குநர் பாரதிராஜா. அங்கு பாரதிராஜாவின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கும் ' மருதா ' படப்பிடிப்பில் இருந்த ராதிகா, பாரதிராஜா வீட்டுக்கு சென்று சந்தித்து இருவரும் உரையாடி இருக்கின்றனர். நேற்றைய காலை உணவு பாரதிராஜா வீட்டில்தான்..!...
ஆக்‌ஷன் என் சினிமா கேரியரில் மிகப் பெரிய படம் – விஷால் மகிழ்ச்சி

ஆக்‌ஷன் என் சினிமா கேரியரில் மிகப் பெரிய படம் – விஷால் மகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      இயக்குனராக நினைப்பவர்கள் , ஈகோ பார்க்காமல் அனைவரும் ஒருமுறை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும் – நடிகர் விஷால் ‘ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசிய விபரம் வருமாறு வசனகர்த்தா பத்ரி பேசும்போது, டிரைலரை பார்க்கும்போதே தெரிந்திருக்கும் ஆக்ஷன் பொருத்தமான பெயர் தான் என்று. இன்னொரு பெயர் உலகம் சுற்றம் வாலிபன் என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நீண்ட வருடங்களுக்குப் பிறகு உலக நாடுகள் பலவற்றில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இப்படம் விஷால் ரசிகர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் விதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றார். நடிகர் சாரா பேசும்போது, சுந்தர் அண்ணா எப்படி இயக்குகிறார் என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அ...
பத்திரிகையாளர்களின் பாராட்டோடு 125 தியேட்டர்களின் இன்று ரிலீஸ் ஆகும் மிக மிக அவசரம்..!

பத்திரிகையாளர்களின் பாராட்டோடு 125 தியேட்டர்களின் இன்று ரிலீஸ் ஆகும் மிக மிக அவசரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  125 தியேட்டர்களில் இன்று வெளியாகிறது மிக மிக அவசரம் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது 'மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மிகப் பிரம்மாண்டமாக படத்தை வெளியிடுகிறார்.. இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதியே வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது சில திரைப்படங்கள் முன்னறிவிப்பு இல்லாமல்...
நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமனம் ஒரு ஜனநாயக படுகொலை – முன்னாள் நிர்வாகிகள் எதிர்ப்பு

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமனம் ஒரு ஜனநாயக படுகொலை – முன்னாள் நிர்வாகிகள் எதிர்ப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
      நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:- தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இம்முறை தேர்தலுக்கு பல பிரச்சனைகள் வந்த போதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். அது எங்கள் கடமை. ஆனால், எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் வைக்க முடியாத நிலையில் இ...
பார்க்க வேண்டிய படமா மிக மிக அவசரம் – கோடங்கி விமர்சனம்

பார்க்க வேண்டிய படமா மிக மிக அவசரம் – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி பட்ட படங்கள் வரும். ஒரு சாதாரண அதே நேரம் அவசியமான ஒரு விஷயத்தை மைய கருவாக வைத்து ஒரு மேம்பாலத்தின் மீது மொத்த படத்தையும் வைத்து படமெடுத்து அதை சாதனை ஆக்கிய துணிச்சல் இயக்குனர் சுரேஷ் காமாட்சிக்குத்தான் உண்டு. உடம்பை காட்டி ரசிகனை ஏமாற்றாத அழகான கதை நாயகி... ஒரு மேம்பாலம்... நேர்மையான ஒரு காவல் உயர் அதிகாரி.... காவல் துறையை களங்கப்படுத்தும் ஒரு இன்ஸ்பெக்டர்... மனைவியின் தங்கையை களங்கப்படுத்தாத மாமா... மனிதாபிமானம் உள்ள ஒரு போலீஸ்காரர், நியாயமான போலீஸ் டிரைவர் என இவர்களை சுற்றி நடக்கின்ற கதைதான் மிக மிக அவசரம். அதிரடி தயாரிப்பாளராக சினிமா வட்டாரத்தில் அறியப்பட்ட சுரேஷ் காமாட்சியை அழகான திரைக்கதையை மிக எளிமையாக அதே நேரம் நேர்த்தியாக காட்சிப் படுத்தி இயக்குனர் ஆக தனி முத்திரை பதித்திருக்கிறார் சுரேஷ் காமாட்சி. கடந்த சில வருடங்களில...