வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

சிவாஜிக்கு பின் குருக்ஷேத்ரம் படம் மூலம் அர்ஜுன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் – தாணு பாராட்டு

சிவாஜிக்கு பின் குருக்ஷேத்ரம் படம் மூலம் அர்ஜுன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் – தாணு பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    முனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார் . இப்படத்தை தமிழில் கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு ஆகும் . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது . பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் முனிரத்னா : " இந்த விழாவில் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கலைப்புலி எஸ் தானு அவர்கள். இந்த படத்தில் இடம் பெரும் இரண்டு சண்டைக் காட்சிகள் ஒன்று அர்ஜுன் இடம்பெறும் சண்டை,  மற்றும் தர்சனின் சண்டை .இதை சண்டைப்பயிற்சி செய்தது 'கனல் கண்ணன்'. மகாபாரத கதையை பலவிதத்தில் எடுக்கலாம் .அந்த விதத்தில் நாங்கள் துரியோதனின் கதையை எடுத்திருக்கிறோம். இந்த மாதிரியான படம் கன்னட சினிமாவில் 80 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது .அதற்கு பிறகு கன்னடாவில் நாங்கள் இந்த படத்தினை எடுத்திருக்கிறோம். 3D மட்டும் 2 வருடங்கள் எடுக்கப்பட்டத...
முடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்… மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்…!

முடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்… மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  முடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்... மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்...! பாக்யராஜ் வெற்றி பெற்றாரா என படிப்பவர்களுக்கு இது நடிகர் சங்க தேர்தல் முடிவு நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பாகாது... ஆனால் தனது சரியான அணுகுமுறை மூலம் மீண்டும் ஒரு உதவி இயக்குனரின் கதை திருட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அந்த உதவி இயக்குனருக்கு நியாயம் பெற்று கொடுத்திருக்கிறார் பாக்யராஜ். ஜெயம் ரவி இப்போது கோமாளி ரவியாக மாறி இருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். பிரதீப் என்பவர் அறிமுக இயக்குனர் அறிமுகம் ஆகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என இயக்குனர் பார்த்திபனின் உதவி இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி எனபவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்க பிரச்சினை பெரிதானது. படம் வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. கதை த...
ரவியின் கோமாளி படக்கதை திருட்டு கதையா? உதவி இயக்குனருக்கு அங்கீகார கடிதம் கொடுத்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ்..!

ரவியின் கோமாளி படக்கதை திருட்டு கதையா? உதவி இயக்குனருக்கு அங்கீகார கடிதம் கொடுத்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரவியின் கோமாளி படக்கதை திருட்டு கதையா? உதவி இயக்குனருக்கு அங்கீகார கடிதம் கொடுத்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ்..! தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கதை திருட்டு புகார் அதிகரித்த படி உள்ளது. எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குனர் பாக்யராஜ் வந்த பின் பல அதிரடிகளை செய்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்க்கார் படக்கதையும் திருட்டுக்கதை என புகார் எழுந்த போது உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனுக்கு எழுத்தாளர் சங்கம் கடிதம் கொடுக்க பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் பட ரிலீஸ் நேரத்தில் வருண் ராஜேந்திரன் பெயர் டைட்டிலுக்கு முன் போடப்பட்டது. இப்போது அதே போல மீண்டும் ஒரு அதிரடியை இயக்குனர் பாக்யராஜ் சத்தமில்லாம்ல் செய்திருக்கிறார். ஜெயம் ரவி நடித்து வரும் படம் கோமாளி. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் பெரும் செலவில் தயாரித்து இருக்கிறார...
ரவியின் கோமாளி ரிலீசுக்கு குறுக்கே நிற்கும் திருச்சி தியேட்டர்ஸ்… கடுப்பாகும் கவுன்சில்… தூசி தட்டப்படும் திருட்டு விசிடி தியேட்டர் விவகாரம்..!

ரவியின் கோமாளி ரிலீசுக்கு குறுக்கே நிற்கும் திருச்சி தியேட்டர்ஸ்… கடுப்பாகும் கவுன்சில்… தூசி தட்டப்படும் திருட்டு விசிடி தியேட்டர் விவகாரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரவியின் கோமாளி ரிலீசுக்கு குறுக்கே நிற்கும் திருச்சி தியேட்டர்ஸ்... கடுப்பாகும் கவுன்சில்... தூசி தட்டப்படும் திருட்டு விசிடி தியேட்டர் விவகாரம்..! ஜெயம் ரவி நடிப்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் இயக்கி இருக்கிறார். படத்தின் டீசர் வெளியான போது ரஜினியை நக்கல் அடித்திருக்கிறார்கள் என சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த காட்சியை நீக்கிவிட தயாரிப்பாளர், இயக்குனர் ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்ததால் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. படத்தில் ரவி பல கெட்டப்பில் நடித்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேல் ரிலீஸ் செய்ய உள்ளார். இந்த நிலையில் இதே சக்தி பிலிம் பேக்டரி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்...
அரசியல் கட்சி பெயரில் ரஹ்மானுக்கு கடிதம் எழுதிய தயாரிப்பாளர்

அரசியல் கட்சி பெயரில் ரஹ்மானுக்கு கடிதம் எழுதிய தயாரிப்பாளர்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இசை நிகழ்ச்சியில் பாடல் பாடுவதற்கு முன் படத் தயாரிப்பாளர் பெயரையும், பட நிறுவனத்தின் பெயரையும் சொல்லுங்கள் என தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் தான் சார்ந்த கட்சி பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடிதம் எழுதியது சர்ச்சை ஆகியுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இப்போது ஓய்வு பெற்ற நீதியரசர் கண்காணிப்பில் செயல்படுகிறது. மேலும், திரைத்துறையில் உள்ள பிரபல தயாரிப்பாளர்கள் சிலரை நியமித்து நிர்வாக குழுவை அமைத்து உள்ளது தமிழக அரசு. இந்த கமிட்டி பல அதிரடிகளை செய்து வருகிறது. இதில் உறுப்பினர் ஆக இருக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் தான் சார்ந்த கட்சி பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு கடிதம் எழுத அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னையில் இன்று நடைபெற உள்ள ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடல் பாடுவதற்கு முன் தயாரிப்பாளர் பெயரும், பட நிறுவன பெயரும் சொல்ல வேண்டும் என ...
கேஜிஎஃப்’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்..!

கேஜிஎஃப்’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *'கேஜிஎஃப்' படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்* விஜய் கிரகண்டுர் தயாரிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட 'கேஜிஎஃப்'  திரைப்படம் தேசிய அளவில் இரண்டு விருதுகளை வென்றிருக்கிறது. 1970ல் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு, ஒரு தாழ்த்தப்பட்ட சமூக இளைஞன் சமூக சீர்கேடுகளையும், ஏற்ற தாழ்வுகளையும் தகர்த்தெறிந்து முன்னேறும் காலப் பெட்டகத்தின் புரட்சிக்கரமான கதைகளத்தை கொண்ட இப்படம் மும்மொழி திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது. இப்படத்திற்கு அதிரடி காட்சி அமைப்புகள் மற்றும் சிறப்பு காட்சி அமைப்புகள் ஆகிய இரு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருக்கிறது. இம்மகிழ்ச்சியான தருணத்தில், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், தேசிய திரைப்பட விருதுகள் இயக்குனரகம், ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள்...
ரிலீசுக்கு தொடர் விடுமுறை நாளை குறிவைத்த அசுரன் தனுஷ்..!

ரிலீசுக்கு தொடர் விடுமுறை நாளை குறிவைத்த அசுரன் தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ரிலீசுக்கு தொடர் விடுமுறை நாளை குறிவைத்த அசுரன் தனுஷ்..! தனுஷ்-வெற்றி மாறன் கூட்டணியின் பரபரப்பான படம் அசுரன். அசுரன்' படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 4ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமையை அடுத்து சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும். அதனை அடுத்து திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை என்பதால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை உள்ளது. எனவே நீண்ட விடுமுறை இடைவெளி கொண்ட ஒரு பக்கா நாளில் ரிலீஸ் தேதியை தனுஷ் படம் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.   தனுஷ் ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வரும் இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள...
ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு – பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு – பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு - பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை அறிமுகம் செய்தது. கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய முயற்சிகளை உலக மேடையில் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்தார். அறிமுக நிகழ்வை தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விக்கு அற்புதமாக பதில் அளித்தார். பின்னர் மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்து காண்பித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் லிடியனின் சகோதரி அமுர்த வர்ஷினி பாட்டு பாடி அசத்தினார். அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியை பிரபல ஓவியரான ஏ.ப...
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்க கமிட்டி..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்க கமிட்டி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்க கமிட்டி..! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இப்போது தமிழக அரசின் கண்காணிப்பில் செயல்படுகிறது. ஓய்வு பெற்ற நீதியரசர் சேகர் தலைமையில் நிர்வாக கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிட்டியின் சமீபத்திய பல அதிரடி நடவடிக்கைகள் தமிழ் திரையுலகில் பலராலும் உன்னிப்பாக கவனிக்கும் செயலாக மாறி உள்ளது. சேலம் நகர தியேட்டர் சிண்டிகேட் தொடங்கி ரேடியோவில் பாட்டு போடும் உரிமை வரைக்கும் தயாரிப்பாளர் நலன் சார்ந்து பல அதிரடிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருது விழாக்களில் பயன்படுத்தப்படும் காட்சிகளுக்கு தயாரிப்பாளர் அனுமதி பெறவேண்டும் அவர்களை அழைத்து கவுரவபடுத்த வேண்டும் எனற கோரிக்கை உடனடியாக அமலுக்கு வந்தது. அதே போல ரேடியோவில் பாடல் ஒலிபரப்பும் போது அந்த பட தலைப்பை சொல்லும் போது தயாரிப்பாளர...
மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கம் – தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு

மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கம் – தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை சிம்புவைத் தவிர எந்த ஒரு ஹீரோவுக்கும் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டு இருக்காது. பிரமாண்டமாக அறிவிக்கப்பட்ட படத்தில் இருந்து திடீரென ஹீரோவையே தூக்கி எறிந்து விட்டு அதே பெயரில் அதே இயக்குனர் வைத்து மீண்டும் படம் தயாரிப்பேன். அந்த அறிவிப்பு வரும் காத்திருங்கள் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு வெளியிட்டதுதான் இப்போது கோலிவுட் ஹாட் டாப்பிக்.. அந்த அறிக்கை விவரம்: வணக்கம்... நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி... துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில்...