திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

Tag: லைகா

‘இந்தியன் 2’ தாமதம் ஆவதற்கு லைகா தான் காரணம் – ஐகோர்ட்டில் ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

‘இந்தியன் 2’ தாமதம் ஆவதற்கு லைகா தான் காரணம் – ஐகோர்ட்டில் ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
‘இந்தியன் 2’ தாமதம் ஆவதற்கு லைகா தான் காரணம் - ஐகோர்ட்டில் ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு! நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பல உண்மை தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக இயக்குனர் சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். முதலில் இந்த படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்ததாகவும், பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்ததாகவும் கூறியுள்ளார். கடந்த 2017 செப்டம்பரில் படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டதாகவும், 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பைத் துவங்க முடிவு செய்ததாகவும் பதில் மனுவில் கூ...
பொன்னியின் செல்வன் படத்தில் வில்லனா விக்ரம்பிரபு!?

பொன்னியின் செல்வன் படத்தில் வில்லனா விக்ரம்பிரபு!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    பிரபல எழுத்தாளர் கல்கியின் மிகப் பிரபலமான "பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதற்கு முன் எம்.ஜி.ஆர்.உட்பட பலர் இந்த நாவலை படமாக்க முயற்சித்து முடியாமல் போனது. மணிரத்னம் இயக்கும் இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக ரூ.800 கோடி செலவில் இந்த படத்தை 2 பாகங்களாக உருவாக்குகிறார்கள். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்க...
என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என் சகாக்களை இழந்து விட்டேன் - கமல் உருக்கம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று இரவு நடந்து வந்தது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நிகழ்ந்தது குறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள கமலஹாசன் ” எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என...
மாஃபியா மிக வித்தியாசமான அனுபவமாக ரசிகர்களுக்கு இருக்கும்!

மாஃபியா மிக வித்தியாசமான அனுபவமாக ரசிகர்களுக்கு இருக்கும்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக உள்ள படம் “மாஃபியா”. துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் “மாஃபியா - பாகம் 1” படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவாணி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டீஸர், டிரெயலர் படு பயங்கர வரவேற்பை பெற்ற நிலையில் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் அருண் விஜய்யின் 25 வருட வெற்றிகரமான சினிமா பயணத்தை பாராட்டி வகையில் ரசிகர்கள் மேடையில் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிகழ்வில் படக்குழு மாஃபியா பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டது. பாடலாசிரியர் விவேக் பேசியது... முதன் முதலில் துருவங்கள் பதினாறு படத்தில் வேலை செய்தபோதே இயக்குநர் கார்...
அருண் விஜய்யின் “மாஃபியா” விரைவில் ரிலீஸ்!

அருண் விஜய்யின் “மாஃபியா” விரைவில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அருண் விஜய் நடிப்பில் துருவங்கள் பதினாறு புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் படம் “மாஃபியா - பாகம் 1”. இப்படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். டீஸர் வெளியீட்டிற்கு பிறகு இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படமாக மாறியுள்ளது “மாஃபியா”. பட வெளியீட்டை முன்னிட்டு  இன்று இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்நிகழ்வில் அவர் கூறியதாவது... “மாஃபியா - பாகம் 1 “என்னோட 3 வது படம். போலீஸ் கதை. சென்னை பின்னணியில் நடக்கிறது. இரு வலிமையான பாத்திரங்கள் இடையே ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் நடக்குற மாதிரியான கதை தான் இந்தப்படம்.  இப்படம்   நான் - லீனியர் முறையில நடப்பதாக கதை  அமைக்கப்பட்டுள்ளது. படத்தில்  நான்கு பாடல்கள் இருக்கிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் திரைக்கதையோட சம்பந்தபட்டதா தான் இருக்கும். தனியா இருக்காது. ...
இளமையாக மாஸ் காட்டும் ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்..!

இளமையாக மாஸ் காட்டும் ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இளமையாக மாஸ் காட்டும் ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்..! ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் லைகா பெரும் பொருட் செலவில் தயாரித்து வரும் படம் தர்பார். படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் அடிக்கடி லீக் ஆகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. ரஜினிகாந்த் மிக இளமையாக போலீஸ் கெட்டப்பில் வலம் வரும் ஸ்டில்கள் வைரலானது. இப்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இதிலும் இளமையான ரஜினி உடற்பயிற்சி செய்வது போல உள்ளது. இளமையான ரஜினியால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து வருகிறது....
முதல்முறையாக கமலுடன் இந்தியன்2 படத்தில் இணையும் காமெடியன்..!

முதல்முறையாக கமலுடன் இந்தியன்2 படத்தில் இணையும் காமெடியன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ரகுல் ப்ரீத்திசிங், ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.  இம்மாத இறுதியில் கமல்ஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் கமல்ஹாசன் முழு அளவில் இந்த படத்தில் நடித்து முடிப்பார்  என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரபல இயக்குனர் நடிகர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவரைத் தொடர்ந்து காமெடி நடிகர் விவேக் முதல் முறையாக கமல்ஹாசன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். கமல்ஹாசன், விவேக் ஏராளமான படங்களில் நடித்தாலும் இருவரும் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கவில்லை. அதே நேரம், ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்', 'அந்நியன்' மற்றும் 'சிவாஜி' ஆகிய படங்களில் விவேக் நடித்துள்ள...
சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?!

சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?! லைகா தயாரிப்பில் சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'காப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளது இந்த படத்தின் முதல் பாடல் 'சிறுக்கி' என்று தொடங்குகிறது. இந்த பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ், ரமணி அம்மாள் பாடியுள்ளனர், ஞானகரவேல் இந்த பாடலை எழுதியுள்ளார். இரண்டாவது பாடல் 'விண்ணில் விண்மீன்' என்று தொடங்குகிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மகள் நிகிதா ஹாரீஸ் பாடியுள்ளார். இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் மூன்றாவது பாடல் 'ஹே ஹமிகோ' என்று தொடங்குகிறது. லெஸ்லி ...
2020 பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 9ல் ரஜினி தர்பார் ரிலீஸ்..!

2020 பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 9ல் ரஜினி தர்பார் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  2020 பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 9ல் ரஜினி தர்பார் ரிலீஸ்..! முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருப்பது போல அவரை எதிர்க்கும் வில்லன்களுக்கும் திரைக்கதையில் பலமாக காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் இஷாக், பாஹி 2 ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபர், சுனில் ஷெட்டி என ஏற்கனவே 2 பேர் வில்லன்களாக இருந்தார்கள். இப்போது அவர்களோடு நவாப் ஷாவும் வில்லன் பாத்திரத்தில் இணைந்துள்ளார். ரஜினிக்கு படத்தில் இரட்டை வேஷம். அதே போல அவரை எதிர்க்கும் வில்லன்களும் 3 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கடந்த பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 10 தேதி பேட்ட ரிலீஸ் ஆகி மெகா ஹிட் அடித்தது. அந்த வரிசையில் தர்பார் படமும் வரும் 2020 ஜனவரி 9ம் தேதி  வியாழக்கிழமை ரிலீஸ் செய்ய  லைகா நிறுவனம் திட்டமிட்டிருக்கிறா...
லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் “மாபியா” அருண் விஜய்..!

லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் “மாபியா” அருண் விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் "மாபியா" அருண் விஜய்..! லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'மாஃபியா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அட்டகாசமான டைட்டிலே இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது அருண்விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக இளம் நடிகை ப்ரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் பிரசன்னா நடித்து வருகிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையில் கோகுல் பினாய் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது...