ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: காங்கிரஸ்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்! பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் களப்பணியாற்றத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கிற்கு எதிராக செயல்பட்டு வரும் நவ்ஜோத் சிங் சித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்துப் பேசி இருந்தார். இதற்கிடையே, சமீபத்தில் டெல்லி சென்ற பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அமரீந்தர் சிங், பஞ்சாப்பை பொறுத்தவரை சோனியா எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவோம் என தெரிவித்தார். இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சியின்...
சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை ஓட்டெடுப்பு!

சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை ஓட்டெடுப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை ஓட்டெடுப்பு! தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் பல தொகுதிகளை இழந்த நிலையில் இந்த தேர்தலில் மீண்டு எழுந்தது. அந்த கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் 18 எம்.எல்.ஏ.க்களில் சட்டசபை தலைவர் பதவியை பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் முறை எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றவர்கள் மட்டும் அமைதியாக இருக்கிறார்கள். ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்கள், இரண்டு மற்றும் 3 முறை எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களிடையே இந்த பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேசி ஒருமித்த முடிவை ஏற்படுத்த முயற்சித்தனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக யாரை தேர்வு செய்யலாம்...
அடையாறு சாஸ்திரி நகரில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்!

அடையாறு சாஸ்திரி நகரில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அடையாறு சாஸ்திரி நகரில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்! தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி நாளை (ஞாயிறு) சென்னை வருகிறார். காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் ராகுல் அங்கிருந்து கார் மூலம் வேளச்சேரி வருகிறார். வேளச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மவுலானாவை ஆதரித்து அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் சைதாப்பேட்டை தி.மு.க. வேட்பாளரும், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளருமான மா.சுப்பிரமணியன் கலந்து கொள்கிறார். ராகுல் பிரசார கூட்டத்தில் 10 ஆயிரம் பேரை திரட்ட ஏற்பாடுகள் நடக்கிறது. சென்னை பிரசாரத்தை முடித்து கொண்டு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு ராகுல் செல்கிறார். அங்கு மதிய உணவை அருந்தி விட்டு முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பிற்பகல்...
நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்!

நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்! மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகி வெளியானது. இந்திரஜித் லங்கேஷ் இயக்கிய இப்படத்தில் ரிச்சா சத்தா ஷகிலாவாக நடித்திருந்தார். தற்போது ஷகிலா சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் யூடியூப் தளங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தமிழக காங்கிரஸின் மனித உரிமை துறையில் இணைந்திருக்கிறார் நடிகை ஷகிலா. இதற்கான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஷகிலா....
திமுக வேட்பாளருக்கு போட்டியாக சுயேச்சை வேட்பாளரை களம் இறக்கிய காங்கிரஸ்

திமுக வேட்பாளருக்கு போட்டியாக சுயேச்சை வேட்பாளரை களம் இறக்கிய காங்கிரஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக வேட்பாளருக்கு போட்டியாக சுயேச்சை வேட்பாளரை களம் இறக்கிய காங்கிரஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக  முருகன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வேப்பனப்பள்ளி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்காமல் தி.மு.க. வேட்பாளரை அறிவித்தது அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வேப்பனப்பள்ளி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் குப்பச்சிபாறை கிராமத்தில் ஒன்று கூடினர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. வினர் உள்ளடி வேலைகள் பார்த்து காங்கிரசை தோற்கடித்தனர். இதுபற்றி தி.மு.க. தலைமைக்கு புகார் செய்தும் கண்டிக்கவில்லை. இதனால் இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க போவதில்லை’ என்று கூட்...
ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்ட போது அரசியல் பேசிய ராகுல்-உதயநிதி

ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்ட போது அரசியல் பேசிய ராகுல்-உதயநிதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்ட போது அரசியல் பேசிய ராகுல்-உதயநிதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று மதுரை வந்திருந்தார். அவரின் பயணத்தின் ஒரே நோக்கம் அவனியா புரம் ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசிப்பது மட்டுமே. டெல்லியிலிருந்து விமானத்தில் புறப்பட்ட ராகுல் காந்தி மதுரை வந்தார் ராகுல். அதன்பின் காரில் அவனியாபுரம் சென்ற ராகுல் அங்கே ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசித்தார். அப்போது பேசிய ராகுல், ‘இந்த விழாவில் இளைஞர்கள் கட்டுப்போப்பாகவும் பாதுகாப்பாவும் பங்கேற்பது மகிழ்ச்சி. நான் இங்கே வந்தது தமிழர் பண்பாட்டையும் வரலாற்றையும் அறிந்துகொள்ளவே’ என்று தெரிவித்தார். மாடு பிடி வீரர்கள் தடுப்பில் ஏறி ராகுல் காந்தியோடு போட்டோ எடுக்க முயன்றனர். பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைத்தடுக்க என்றபோது ராகுல்காந்தி அதிகாரிகளைத் தடுத்து மாடு பிடி வீரர்களோடு போட்டோ எடுத்துக்கொண்...
காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் – குலாம்நபி ஆசாத் கடுமையாக விமர்சனம்

காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் – குலாம்நபி ஆசாத் கடுமையாக விமர்சனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பீகார் சட்டசபை தேர்தல், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து, அக்கட்சிக்குள் உட்கட்சி பூசல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக, கபில் சிபல் காங்கிரஸ் கட்சி தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தலைமையில் பெரும் மாற்றம் வேண்டும் என கடந்த ஆக்ஸ்ட் மாதம் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களில் கபில் சிபலுடன் சேர்த்து குலாம்நபி ஆசாத்தும் உள்ளடக்கம். ஆசாத்தும் சிபலுக்கு ஆதரவான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்க...
பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு ராகுல் நையாண்டி!

பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு ராகுல் நையாண்டி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  ராகுல்காந்தி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- கொரோனா  காலக்கட்டத்தில் அரசின் சாதனைகள்: பிப்ரவரி- நமஸ்தே டிரம்ப், மார்ச்-மத்திய பிரதேச அரசைக் கவிழ்த்தது, ஏப்ரல்-- மக்களை மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல், மே-அரசின் 6-வது ஆண்டு கொண்டாட்டம், ஜூன் - பிகார் மெய்நிகர் பேரணி, ஜூலை--ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி. இந்தச் சாதனைகளினால் கொரானா வைரஸ்சுக்கு எதிரான போரில் நாடு 'தன்னிறைவு பெற்றது'. இவ்வாறு விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி...
வரலாற்றில் இடம் பிடிக்கும் மோடியின் தோல்விகள் – ராகுல் காந்தி டிவீட!

வரலாற்றில் இடம் பிடிக்கும் மோடியின் தோல்விகள் – ராகுல் காந்தி டிவீட!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    வரலாற்றில் இடம் பிடிக்கும் மோடியின் தோல்விகள் - ராகுல் காந்தி டிவீட் ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்' எதிர்கால ஆய்வில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தோல்விகள் இடம்பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், 'ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்' எதிர்கால ஆய்வில் கொரானா, பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்திய விதம், இடம்பெறும் என தெரிவித்துள்ளார். மேலும், கொரானா பாதிப்பு எண்ணிக்கை 102 நாட்களில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 69 ஆக உயர்ந்து உலகிலேயே மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளதையும், கொரானாவுக்கு எதிரான போரை 21 நாள்களில் வெல்வோம் என பேசிய பிரதமர் மோடியின் வீடியோவையும், பதிவிட்டுள்ளார். உலக அளவில் கொரானா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்திற்கு வந்து உலக அளவில் மோ...