புதன்கிழமை, செப்டம்பர் 16
Shadow

Tag: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நீக்கப்பட்ட 3 மாதத்தில் மீண்டும் விருதுநகர் மாவட்ட செயலாரான அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…!

நீக்கப்பட்ட 3 மாதத்தில் மீண்டும் விருதுநகர் மாவட்ட செயலாரான அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட 3 மாதத்தில் மீண்டும் விருதுநகர் மாவட்ட செயலாரான பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி...! தமிழக அமைச்சர்களில் பலரும் அடிக்கடி ஏதாவது கருத்தை சொல்லி சர்ச்சையில் சிக்குவார்கள். அதில் அதிரடியாக எதையாவது கூறி விட்டு பெரும் சர்ச்சையில் சிக்குபவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக அடிக்கடி கருத்து வெளியிடுவார். பாஜக தலைவர்களை விட பிரதமர் மோடியை புகழ்வதில் ராஜேந்திரபாலாஜி தனி இடம் பிடிப்பார். அதோடு, ரஜினிக்காக அடிக்கடி குரல் கொடுப்பவர். இப்படி பல அதிரடிகள் செய்த ராஜேந்திரபாலாஜி கடந்த மார்ச் மாதம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி அனைவரிடம் பெரும் கண்டனத்தை பெற்றது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக ராஜேந்திரபாலாஜி விடுவிக்கப்பட்ட...
ஊரடங்கை நீடிப்பது கோடாரியை வைத்து கொசுவை அழிக்க நினைக்கும் முயற்சி – மருத்துவர் குழு தகவல்

ஊரடங்கை நீடிப்பது கோடாரியை வைத்து கொசுவை அழிக்க நினைக்கும் முயற்சி – மருத்துவர் குழு தகவல்

Uncategorized
  ஊரடங்கை நீடிப்பது கோடாரியை வைத்து கொசுவை அழிக்க நினைப்பது போல என்பதால் மாற்றுவழிகள் செய்ய சொன்னோம் மருத்துவர் குழு தகவல். தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் கொரானா தொற்று அதிகரித்து வருவதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். நோய் தாக்கம் அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு முடக்கத்தை நீட்டிக்கவேண்டுமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின்போது, கள நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர் குழு விளக்கமாக தெரிவித்தது. அடுத்து மேற்கொள்ள வேண்டி...
சாத்தான்குளம் அப்பா,மகன் மரண வழக்கு CBI வசம் ஒப்படைக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சாத்தான்குளம் அப்பா,மகன் மரண வழக்கு CBI வசம் ஒப்படைக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாத்தான்குளம் அப்பா,மகன் மரண வழக்கு CBI வசம் ஒப்படைக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில தினங்களாக நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் அப்பா, மகன் மரண வழக்கு இப்போது விசாரணையில் உள்ளது. மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. அப்பா, மகனை அடித்து கொன்றதாக சாத்தான்குளம் போலீசார் அனைவரும் கூண்டாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பொது மக்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கின் உண்மையான நிலையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்று தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இப்போது இந்த வழக்கின் விசாரணையை கோர்ட் அனுமதியுடன் CBI வசம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளதாக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி கூறியுள்ளார்....
கொரானா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியுமாம் சொல்கிறார் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி!

கொரானா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியுமாம் சொல்கிறார் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியுமாம் சொல்கிறார் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி! சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கொரானா சிகிச்சைக்கான மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரானாவை தடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.  வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரானா பரவியது. மருத்துவர்கள், செவிலியர்களின் சிறப்பான பணியினால் குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது. தினமும் கொரானா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் இதுவரை 8 லட்சத்து 27 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. வசதி இருப்பவர்கள் தான் தனியார் மருத்துவமனையை...
தமிழகத்தில் தொழில் செய்ய பிரபல நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு!

தமிழகத்தில் தொழில் செய்ய பிரபல நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் முதலீடு செய்ய பிரபல நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி அழைப்பு விடுத்தார். தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். யாதும் ஊரே திட்டம், நாடுகளுக்கான சிறப்பு அமைவுகள், வெளிநாட்டு தூதுவர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது உலகளவில் விமான துறையில் தலைசிறந்த 9 முன்னணி விமான நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரிடையாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் உலக பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்க...
பொதுமக்களின் கேள்விகளுக்கு உடனடி பதில் போட்டு டிவிட்டரில் அசத்தும் முதல்வர் EPS

பொதுமக்களின் கேள்விகளுக்கு உடனடி பதில் போட்டு டிவிட்டரில் அசத்தும் முதல்வர் EPS

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டிவிட்டர் அரசியல்.   கமல்ஹாசன் அரசியல் கட்சி அறிவிப்பு செய்த நேரத்தில் தனது கருத்துக்களை டிவிட்டர் என அழைக்கப்படும் சமூக வலைதள பக்கத்தில்தான் பதிவிடுவார். அதனால் அவரை டிவிட்டர் அரசியல்வாதி என்றே விமர்சனங்கள் செய்தார்கள். பின்னர் கமல் பதிவுகள் குறைந்துவிட்டது. இப்ப கொரானா காலம்... இப்ப டிவிட்டர் பதிவுகளில் பட்டையை கிளப்பி அதிரடி அரசியல் செய்து வருவது தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான். அதிலும், கொரானா தடுப்பு நடவடிக்கைகள் ஒரு பக்கம் எதிர்க் கட்சிகளின் விமர்சனங்கள் இன்னொரு பக்கம் தன் கட்சியிலேயே ஏற்படும் இடர்கள் என பலவகையான பணிகளில் பரபரப்பாக பணியாற்றி வருகிறார். இத்தனை பணிகளுக்கு மத்தியில் அவரது டிவிட்டர் பக்கத்தில் பொது மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் பதில் அளித்து அசத்தி வருகிறார் முதல்வர்...
தமிழகத்தில் ஊரடங்கை ஏப்ரல் கடைசிவரை நீடிக்க வேண்டும் பிரதமரிடம் முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை!

தமிழகத்தில் ஊரடங்கை ஏப்ரல் கடைசிவரை நீடிக்க வேண்டும் பிரதமரிடம் முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கொரானா பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடஙகை மேலும் நீடிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.   தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடந்தது. இந்நிலையில், தலைமை செயலாளர் சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகளுக்கு பாராட்டும், நன்றியும் தமிழக அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்....
கொரானா பாதிப்பு அதிகரிப்பதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா – முதல்வர் எடப்பாடி பதில்

கொரானா பாதிப்பு அதிகரிப்பதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா – முதல்வர் எடப்பாடி பதில்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பாதிப்பு அதிகரிப்பதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா - முதல்வர் எடப்பாடி பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியது: மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.500 கோடி எஸ்.டி.ஆர்.எப்.புக்கு கொடுத்திருக்கிறார்கள். படிப்படியாக நிதி கொடுப்பதாக சொல்லியிருக் கிறார்கள். சீனாவில் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசிடம் போதுமான நிதி இருக்கிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். வைரசினுடைய தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்வதுதான். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த வைரஸ் எளிதாக பரவக்கூடியது, இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் வாயிலாக மக்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்...
கொரானா நிவாரண பொருள் டோக்கன், ஆயிரம் ரூபாய்  ரொக்கம் நாளை வீடுதேடி வரும்..!

கொரானா நிவாரண பொருள் டோக்கன், ஆயிரம் ரூபாய் ரொக்கம் நாளை வீடுதேடி வரும்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனா நிவாரணத்தொகை ரூ.1000 வீடு வீடாக நாளை முதல் வினியோகம்! தமிழகம் முழுவதும் 2 கோடியே 10 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் மட்டுமே அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரணத் தொகை ரூ.1000 மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான பொருட்கள் வழங்கும் பணி கடந்த 2-ந்தேதி ரேசன் கடைகளில் தொடங்கப்பட்டது. இதனை பெற ரேசன் கடைகளில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர். இதன் காரணமாக நிவாரணத்தொகை ரூ.1000-த்தை வீடு, வீடாக சென்று வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் பொருட்களை ரேசன் கடைகளில் வினியோகம் செய்யும் நடைமுறை இன்றுடன் நிறுத்தப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரேசன...
கொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி!

கொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்டு சோதனை நடத்திய முதல்வர் பழனிச்சாமி! தமிழகத்தில் உள்ள அம்மா உணவங்கள் இந்த சமயத்தில் ஏழை மக்களுக்கு பெரிதும் கைகொடுக்கின்றன. குறைந்த விலையில் உணவு வழங்குவதால், ஏராளமானோர் அம்மா உணவகத்தில் சாப்பிடுகின்றனர். இந்நிலையில் சென்னை சாந்தோம் மற்றும் கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். உணவின் தரம் மற்றும் ஊழியர்கள் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கிறார்களா என்பதை முதல்வர் ஆய்வு செய்தார். உணவை சாப்பிட்டு பார்த்த அவர், அங்கு சாப்பிட வந்திருந்தவர்களிடம் உணவின் தரம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதா...