சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: கொரானா பரவலை தடுக்க

கொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை!

கொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    கொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை! உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானாவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். நாளுக்கு நாள் தொற்று அதிகமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதால் மருத்துவ பணியாளர்கள் பலருக்கும் பணிச் சிரமம் ஏற்படுகிறது. இதனால் மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் பேன் (fan) என்ற படத்தில் நடித்தவர் ஷிஹா மல்ஹோத்ரா. இவர் டெல்லியில் உள்ள வர்தாமன் மஹாவீர் மெடிக்கல் காலேஜில் நர்சிங் படிப்பு படித்து டிகிரி பெற்றவர். திரைத்துறை வாய்ப்பு காரணமாக மருத்துவ துறை பணியை விட்டுவிட்டு நடிக்க வந்தார். இந்த நிலையில் கொரானா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மீண்டும் தன்னை மருத்துவ ...
கொரானா பரவ காரணம் யார்னு தெரியுமா..? பிரகாஷ்ராஜ் ஆவேசம்

கொரானா பரவ காரணம் யார்னு தெரியுமா..? பிரகாஷ்ராஜ் ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கொரானா பரப்பி விடுவது யார் ? பிரகாஷ்ராஜ் ஆவேசம் உலகின் பெரும்பாலான நடுகளை நிலைகுலைய செய்து உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானா தொற்றால் சுமார் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரானா பரவலை தடுக்க 21நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அதே நேரம் கொரானா தொற்றின் தீவிரம் புரியாமல் பலரும் சுற்றி வருகிறார்கள். கொரானா விழிப்புணர்வுக்கு ஒவ்வொரு நடிகர் நடிகையும் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ்ராஜ் சமூகத்தில் எந்த ஒரு பிரச்சனைக்கும் அழுத்தமாக தன் கருத்தை பதிவு செய்வார். கொரானா விழிப்புணர்விலும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். கொரானா வைரசை பரப்பியது சீனாதான் என்று அமெரிக்கா ஊடகங்கள் சில ஆதாரங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. ஆனால் நடிகர் ப...
இந்தியாவில் கொரானா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது… தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று!

இந்தியாவில் கொரானா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது… தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவில் கொரானா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது... தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா: நான்கு பேர் பலி உலகம் முழுதும் மிக வேகமாக பரவி வரும் கொரானாவை கட்டுப்படுத்த பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள...
கொரானா சமூக பரவல் ஆகி 3வது கட்டத்துக்கு போக கூடாது என போராடி வருகிறோம் – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கொரானா சமூக பரவல் ஆகி 3வது கட்டத்துக்கு போக கூடாது என போராடி வருகிறோம் – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா சமூக பரவல் ஆகி 3வது கட்டத்துக்கு போக கூடாது என போராடி வருகிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி உயிர்க்கொல்லி கொரானா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:- தமிழகம் கொரானா வைரஸ் பாதிப்பில் 2-வது நிலையில் உள்ளது. இந்த 2-வது நிலையுடன் கொரானா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது கொரானா வைரசின் 3-வது கட்டம் என்பது சமூக பரவலாகும். சமூகத்தில் பரவ ஆரம்பித்து விட்டால் கொரானா வைரசை கட்டுப்படுத்துவது கஷ்டமாகும். ஆகையால் தமிழகத்தில் கொரானா வைரஸ் சமூக பரவல் நிலைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் தீவிரமாக போராடி வருகிறோம். கொரானா வைரசை தமிழகத்தில் வேகமாக பரவுவதை தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள...
கொரானா ஊரடங்கு… நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

கொரானா ஊரடங்கு… நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பிடியிலிருந்து மக்களை காக்கவே ஊரடங்கு என்று கூறி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்! மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரசை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம் போன்றது. நான் எடுத்த முடிவால் என்மீது சிலர் கோபத்தில் இருப்பதை நான் அறிவேன். ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கொரோனாவை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழி இல்லை. விதிகளை மீறி வீடுகளை விட்டு வெளியே வரும் சிலரால...
முதலமைச்சர் நிவாரண நிதி கொடுங்கள்- திரைப்பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

முதலமைச்சர் நிவாரண நிதி கொடுங்கள்- திரைப்பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கொரானா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்த நிதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.   இதையடுத்து பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான JSK சதீஷ் குமார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் கொடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ் திரைத்துறையினருக்கு அன்பான வேண்டுகோள். அன்புடையீர் வணக்கம். உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாகப் பரவி, மனித இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பரவலை தடுத்து மக்களை காப்பாற்றும் துரித நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் திறம்பட பணியாற்றி வருகின்றன. இந்த போர்க்கால நடவடிக்கைக்கு, பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் மாநில அரசுக்கு பெரும் நிதி தேவைப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் அரசுக்கு கரம் கொடுத்து தங்களால் இயன்ற நிவாரண ந...
சென்னைக்குள் அவசர தேவைகளுக்கு பயணம் செய்ய போலீசிடம் அனுமதி வாங்கலாம்!

சென்னைக்குள் அவசர தேவைகளுக்கு பயணம் செய்ய போலீசிடம் அனுமதி வாங்கலாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று 4வது நாள். அதே நேரம் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் வரலாம் என அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் காரணமின்றி சும்மா சுற்றும் பலரையும் போலீசார் அடித்து உதைக்கிற காட்சியும், பல இடங்களில் நூதன தண்டனை வழங்கும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது. மிக மிக அவசியம் அல்லது அவசரம் என்றால் பயணப்படலாம். அதற்கு காவல்துறை வழி காட்டியுள்ளது. சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்கான பயணம் மேற்கொள்ள விரும்புவோர் உரிய காரணங்களுக்காக விண்ணப்பிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. திருமணம், மருத்துவம், இறப்பு, உள்ளிட்டவற்றுக்காக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம். 7530001100-ல் தொடர்பு கொண்டோ/ எஸ்எம்எஸ்/ வாட்ஸ் அப்பில் தகவல் அளிக்கலாம் என...
கொரானா எதிரொலி இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்த A.R. ரஹ்மான்!

கொரானா எதிரொலி இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்த A.R. ரஹ்மான்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    கொடூர அரக்கனாக பல லட்சம் மக்களை பாதித்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் உலகம் முழுதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் மெல்ல மெல்ல அதன் தீவிரத்தை அதிகரித்து வருகிறது. இதன் பரவலை தடுக்க நாடு முழுதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். திரைப்பிரபலங்கள் பலரும் கொரானா விழிப்புணர்வு பதிவுகளை வீடியோ வடிவில் வெளியிட்டு வருகிறார்கள். திரைத்துறை முற்றிலும் முடங்கி உள்ளது. இந்த சூழலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மே, ஜூன் மாதங்களில் திட்டமிட்ட தனது வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் “மே, ஜூன் மாதங்களில் வட அமெரிக்காவில் நடைபெற இருந்த தனது இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் அடுத்த வருடத்துக்கு தள்ளிவைத்...
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார் கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியது : கொடூர கொரானா தாக்குதலில் இருந்து மக்களை காக்க வேண்டியது அவசியம். அதற்காக என் சேமிப்பில் இருந்து 25 கோடியை அளித்திருக்கிறேன் என்றார். ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு பிரபாஸ் 3 கோடி நிதி கொடுத்து இருக்கிறார்....
மக்களை காக்கவே 144 தடை உத்தரவு – முதல்வர் பழனிச்சாமி

மக்களை காக்கவே 144 தடை உத்தரவு – முதல்வர் பழனிச்சாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மக்களை காக்கவே 144 தடை உத்தரவு - முதல்வர் பழனிச்சாமி உடலால் தனித்திருப்போம். உள்ளத்தால் இணைந்திருப்போம். ஓமந்தூரார் வளாகத்தில் அமைக்கப்பட்ட கொரானா சிறப்பு மருத்துவமனையை முதல்வர் பழனிச்சாமி பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: மக்களை காப்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரானா பாதிப்பு முதல் ஸ்டேஜ் அளவில் தான் உள்ளது. இரண்டு மூன்று நான்கு என அடுத்த கட்டங்களுக்கு போக விடாமல் தடுக்கவே தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அத்தியாவசிய தேவை என்றால் மட்டும் வெளியில் வாருங்கள். மற்றபடி சும்மா சுற்றுகிறவர்களுக்கு 144 தடை கண்டிப்பாக பொறுந்தும். மக்களை பாதுக்கத்தான் இந்த நடவடிக்கைகள். பொதுமக்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 15 சிறப்பு படுக்கைவசதிகள் ஏற்படுத்தி இர...