சனிக்கிழமை, செப்டம்பர் 12
Shadow

Tag: CM MK Stalin

மயங்கி விழுந்த சீமான்… உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

மயங்கி விழுந்த சீமான்… உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்துவதற்கு ரயில்வே துறையினர் அப்பகுதியில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக ஜேசிபி எந்திரங்களை கொண்டு வந்தனர் பொதுமக்கள் வீடுகளை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென்றும் அல்லது தமிழக அரசால் மாற்று இடம் வழங்குவதற்கு உறுதி அளித்தால் மட்டுமே தற்போது உள்ள வீடுகளை அகற்றுவதற்கு அனுமதி அளிப்போம் என்று கூறி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதி மக்களை சந்தித்து பேசி வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மய...
நாடாளுமன்றத்தில் மு.க.ஸ்டாலின்… உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்ட எம்.பி.க்கள்!

நாடாளுமன்றத்தில் மு.க.ஸ்டாலின்… உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்ட எம்.பி.க்கள்!

HOME SLIDER, NEWS, Photos, politics, செய்திகள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
நாடாளுமன்றத்தில் மு.க.ஸ்டாலின்... உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்ட எம்.பி.க்கள்.. தமிழக முதலமைச்சர் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தை சுற்றிப் பார்த்தார். அப்போது எம்.பி.க்கள் அவருடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துகொண்டனர்.   இதை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்த மு.க.ஸ்டாலின் உடன் தமிழக எம்.பி.க்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோனு ஆகியோர் புகைப்படம் எடுத்துகொண்டனர்   திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா மு.க.ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துகொண்டார்.       Tamil Nadu CM MK Stalin in his meeting with PM Modi today discussed the economic condition in Sri Lanka. He proposed to send relief materials including food and medicines from Tamil Nadu ...
முதல்வர் 4 நாள் டெல்லி பயணம்!

முதல்வர் 4 நாள் டெல்லி பயணம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
கடந்த 2006-ம் ஆண்டு பாராளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களுக்கு மேல் பலம் கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் கட்டிக்கொள்வதற்கு நிலம் ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி தி.மு.க.வுக்கு டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பா.ஜனதா அலுவலகம் அருகே 2013-ம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் தி.மு.க. அலுவலகமான ‘அண்ணா கலைஞர் அறிவாலயம்’ கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி சென்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அதன்படி டெல்லி அறிவாலய கட்டுமான பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் அறிவாலயத்தை திறக்கலாமா? என ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வந்ததால் திறப்பு விழா தேதி உடனே முடிவு செ...
5 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு துபாயிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

5 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு துபாயிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசுமுறை பயணமாக கடந்த 24-ம் தேதி மாலை துபாய் சென்றார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகத்துக்கு சென்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின், அங்கு நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் தமிழகத்திற்கான அரங்கை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, துபாயில் உள்ள ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரது முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன. துபாயில் இருந்து அபுதாபி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து உரையாடினார். அவரது முன்னிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாலையில் அபுதாபியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு ...
இன்று காலை தேனாம்பேட்டையில முதல்வர் திடீர் ஆய்வு !

இன்று காலை தேனாம்பேட்டையில முதல்வர் திடீர் ஆய்வு !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் நகரில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மழைநீர் வடிகால் வசதிகள் இருந்தும் தண்ணீர் வடியாததால் பல இடங்களில் 4 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மழைநீர் தேங்கிய பகுதிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வரும் காலங்களில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் வேப்பேரி, பெரம்பூர், புளியந்தோப்பு, தேனாம்பேட்டை, தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வேப்பேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், திரு.வி.க.நகர் பகுதிகளில் நடைபெற்ற பணிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து இன்று தேனாம்பேட்டை பகுதி...
பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இன்று பஞ்சாப் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் பகவந்த் மானுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொழியுரிமை மற்றும் இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களுக்கான உரிமைகள் குறித்துக் குரலெழுப்புவதில் தமிழ்நாட்டிற்கும் பஞ்சாபிற்கும் நெடிய வரலாறு உண்டு. பஞ்சாப் மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசின் ஆட்சிக்காலம் வெற்றிகரமானதாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....
கிராக்கி அதிகமுள்ள சீர்திருத்த திருமணத்தை நடத்தும் புரோகிதர் நான் – திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி

கிராக்கி அதிகமுள்ள சீர்திருத்த திருமணத்தை நடத்தும் புரோகிதர் நான் – திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    வைதீக புரோகிதரைவிட கிராக்கி அதிகமுள்ள சீர்திருத்த திருமணத்தை நடத்தும் புரோகிதர் நான் - திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி   https://youtu.be/I7bgRnbGpb4  
இனி குடும்பத் தலைவிகள் பெயரில் வீடு- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இனி குடும்பத் தலைவிகள் பெயரில் வீடு- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திமுக மகளிர் அணியின் இணையத்தளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் மகளிர் தின நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகள் இனி குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வழங்கப்படும். கல்வியில் ஆண்களை விட பெண்களே தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகின்றனர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை வழங்கியது திமுக ஆட்சிதான். அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்திய...
சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன் – தூத்துகுடியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன் – தூத்துகுடியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன் என புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக இன்று இரவு தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு வெண்கலத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆளுயரச் சிலையை முதல்வர் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டக் கழக அலுவகத்தில் கலைஞரின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய மாவட்ட கழகத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கை கனிமொழிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கலைஞர் மறைவுக்கு பின்னர்,...
கறுப்பு சிவப்பு கொடியுடன் உதய சூரியன் சின்னம் டாப்பில் ஸ்டாலின்- துர்கா அமர்ந்திருந்த கேக்கை வெட்டிய முதல்வர்!

கறுப்பு சிவப்பு கொடியுடன் உதய சூரியன் சின்னம் டாப்பில் ஸ்டாலின்- துர்கா அமர்ந்திருந்த கேக்கை வெட்டிய முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். உதய சூரியன் சின்னத்தில் கறுப்பு சிவப்பு கொடியுடன் டாப்பில் ஸ்டாலின்- துர்கா அமர்ந்திருப்போது போல கேக் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த கேக்கை வெட்டி பிறந்தநாளை மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். அப்போது, அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரிசன் உடனிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடுவதைத் தவிர்த்து வந்தார். தொண்டர்களை சந்தித்தும் அவர் வாழ்த்து பெறாமல் இருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற போது பதவியேற்பு விழாவை எளிமையான முறையில் ஸ்டாலின் நடத்தினர். இந்நிலையில், ஆண்டு முதலமைச்சராக அரியனையில் அமர்ந்து தனது 69வது பிறந்தநாளை கொண்டாட இரு...