புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

மீரா ஜாஸ்மின் நடிப்பில் “குயின் எலிசபெத்” காமெடி திரைப்படம் ZEE5 தளத்தில் ரிலீஸ்!

மீரா ஜாஸ்மின் நடிப்பில் “குயின் எலிசபெத்” காமெடி திரைப்படம் ZEE5 தளத்தில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அசத்தலான காமெடிக் கொண்டாட்டம் , நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் "குயின் எலிசபெத்" திரைப்படம் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது !! மலையாளத்தில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற "குயின் எலிசபெத்" திரைப்படம் ZEE5 தளத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரத்தியேகமாகக் கிடைக்கிறது ~இந்தத் திரைப்படத்தை M. பத்மகுமார் இயக்கியுள்ளார். பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.~ நரேன், ஸ்வேதா மேனன் மற்றும் V.K.பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளம், அடுத்தடுத்து பல புதிய திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களை ரசிகர்களுக்காகத் தந்து வருகிறது. அந்த வகையில் இந்த காதலர் தினக் கொண்டாட்டமாகக் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற குயின் எல...
குடிசை கொளுத்திய சாதி அரசியலுக்கு சங்கு ஊதும் “சைரன்” கோடங்கி விமர்சனம் 4/5

குடிசை கொளுத்திய சாதி அரசியலுக்கு சங்கு ஊதும் “சைரன்” கோடங்கி விமர்சனம் 4/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  குடிசை கொளுத்திய சாதி அரசியலுக்கு சங்கு ஊதும் “சைரன்” கோடங்கி விமர்சனம் 4/5   ஆயுள் தண்டனைக் கைதியாக 14 ஆண்டுகளாக சிறையில் இருக்கும்  ஜெயம் ரவி, பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு சீரியசாக இருக்கும் அப்பாவை பார்க்க  இரண்டு வாரம் பரோலில் வெளியே வருகிறார். தாய் இல்லாத அவரது மகள் ஜெயம்ரவி  மீது கடும்போகத்தில் இருப்பதோடு, அவரை பார்க்கவே விரும்பாமல் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிடுகிறார். அதே நேரம் லாக்கப் டெத் காரணமாக சஸ்பெண்ட் ஆகியிருந்த கீர்த்திசுரேஷ் மீண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியில் சேருகிறார். அவர் ஸ்டேஷனில் தான் பரோலில் வெளியே வந்திருக்கும் ஜெயம்ரவி தினமும் கையெழுத்து போடுகிறார். பரோலில் இருக்கும் அந்த கால கட்டத்தில் ஜெயம் ரவி சந்திக்கும் சில முக்கியஸ்தர்கள் அடுத்தடுத்து மர்மமாக கொல்லப்படுகிறார்கள். அதற்கு அவர் தான் காரணம் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த...
கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் “அமரன் “

கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் “அமரன் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI), மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் (SPIP) இணைந்து தயாரிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் #SK21 திரைப்படத்தின் பெயரை, நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அறிவித்துள்ளார்கள்.இத்திரைப்படத்தின் பெயர் 16, பிப்ரவரி 2024 அன்று வெளியிடப்பட்ட சுவாரசியமான டீசரின் வழியாக தெரிவிக்கப்பட்டது.* இந்தத் திரைப்படத்திற்கு, "அமரன்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை, உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் திரு. ஆர்,மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, இவர்களுடன் இணை-தயாரிப்பாளராக வக்கில் கானின் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைகிறது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் ராஜ்குமார் பெரியசாமி. மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் ராஹுல் சிங் ஷிவ் அரூர் எழுதிய 'இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்...
சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, sports, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், விளையாட்டு செய்திகள்
      *(Celebrity Cricket League) சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* *இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது*. *இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும், சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்*. செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌ர். திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, மேலும் மேலும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார் மற்...
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஆக்சன் எண்டர்டெயினர் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது !!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஆக்சன் எண்டர்டெயினர் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    தமிழ் திரையுலகின் அடுத்த பிரம்மாண்டம், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்,  சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்,  இப்போது படப்பிடிப்பில் !! ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை  நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது. தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து,  பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இந்த ஆக்சன் படத்தின் அறிவிப்பே, ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது. இந்நிலையில் தற்போது பட...
பிரசவத்தில் உள்ள மெடிக்கல் மாஃபியாவை தொட்டு சர்ச்சையை ஏற்படுத்துமா “பர்த் மார்க்”

பிரசவத்தில் உள்ள மெடிக்கல் மாஃபியாவை தொட்டு சர்ச்சையை ஏற்படுத்துமா “பர்த் மார்க்”

CINI NEWS, HOME SLIDER
  ‘நேஞ்சுரல் பர்த்’ (Natural Childbirth) என்று சொல்லக்கூடிய இயற்கை குழந்தை பிறப்பை களமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பர்த் மார்க்’. (Birth Mark) ஸ்ரீராம் சிவராமன் மற்றும் விக்ரம் ஸ்ரீதரன் இணைந்து இப்படத்தை எழுதியிருப்பதோடு, சேபியன்ஸ் (SAPIENS) எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்தும் இருக்கிறார்கள். விக்ரம் ஸ்ரீதரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில், நாயகனாக ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் நடிக்க, நாயகியாக ‘ஜெயிலர்’ புகழ் மிர்னா நடித்திருக்கிறார். இவர்களுடன் பி.ஆர்.வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் பற்றி இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் மற்றும் தயாரிப்பாளரும், கதையாசிரியருமான ஸ்ரீராம் சிவராமன் கூறுகையில், “இது தான் எங்களுடைய முதல் படம். புதிதாக செய்ய ...
நடிகர் மம்முட்டியின் ‘பிரமயுகம்’ திரைப்படம் பிப்ரவரி 15ல் ரிலீஸ்

நடிகர் மம்முட்டியின் ‘பிரமயுகம்’ திரைப்படம் பிப்ரவரி 15ல் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *நடிகர் மம்முட்டியின் 'பிரமயுகம்' திரைப்படம் பிப்ரவரி 15 அன்று மலையாளத்தில் உலகளவில் திரைக்கு வருகிறது...விரைவில் தமிழிலும் ரிலீஸ் ஆகிறது!* கடந்த ஐந்து தசாப்தங்களாக சினிமாவில் தனக்கான இடத்தை அழுத்தமாக பதிய வைத்து ஈடு இணையற்ற நடிகராக வலம் வருகிறார் நடிகர் மம்முட்டி. அவரது வரவிருக்கும் 'பிரமயுகம்' திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவில் மிரட்டலான அவதாரத்தில் பார்வையாளர்களைக் கவர உள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்த 'பிரமயுகம்' படத்தை, 'பூதகாலம்' புகழ் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 15ஆம் தேதி மலையாளத்தில் உலகளவில் திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் முன்பு இந்தப் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதன் ஒரிஜினல் வெர்ஷனை முதலில் பார்வையாளர்கள் அனுபவிக்க வே...
‘புதுமையாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் கோலாகலமாக நடந்தேறியது, சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி

‘புதுமையாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் கோலாகலமாக நடந்தேறியது, சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
    ‘புதுமையாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் கோலாகலமாக நடந்தேறியது, சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி மேக்கிங் மொமெண்ட்ஸ் ஒருங்கிணைப்பில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி இசை நிகழ்ச்சி, பிரம்மாண்டமான முறையில், எந்தவித புகார்களும் இல்லாமல், ஒரு இசை நிகழ்ச்சி எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக, ரசிகர்களின் பேரதாரவுடன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. ‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசை கலைஞர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் ரசிகர்களிடம் தனித்துவமான இசைகலைஞர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கும் சந்தோஷ் நாராயணன். முதன் முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இச...
ப்ளீஸ் பாக்காதீங்க… லவ்வர் கோடங்கி விமர்சனம் 2.5/5

ப்ளீஸ் பாக்காதீங்க… லவ்வர் கோடங்கி விமர்சனம் 2.5/5

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
      நாயகன் மணிகண்டனும், நாயகி ஸ்ரீ கெளரி ப்ரியாவும் கல்லூரியில் இருந்தே காதலித்து வருகிறார்கள். ஸ்ரீகெளரி வேலைக்கு போகிறார். மணிகண்டன் கடை வைக்கும் முயற்சியில் இறங்கி அதில் சில சிக்கல்களை சந்தித்து வருகிறார். இதற்கிடையே, எதற்கெடுத்தாலும் காதலி மீது சந்தேகப்பட்டு சண்டை போடுகிறார். ஒரு சூழ்நிலையில் மணிகண்டனை விட்டு பிரிய முடிவு எடுத்து பிரேக்கப் பண்ணிக்கலாம் என்று சொல்கிறார் ஸ்ரீ கௌரி பிரியா. அதை மணிகண்டனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை மீண்டும் மீண்டும் ஸ்ரீ கௌரி பிரியாவை சந்தித்து மன்னிப்பு கேட்டு காதலை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சுகிறார். ஏற்க மறுத்தால் சாகப்போவதாக மிரட்டுகிறார். மணிகண்டனின் தொல்லையை தாங்க முடியாத ஸ்ரீ கெளரி ப்ரியா என்ன முடிவு எடுத்தார்? மணிகண்டன் என்ன ஆனார் என்பது தான் ‘லவ்வர்’ படத்தின் மீதிக்கதை. மணிகண்டன் கதாபாத்திரம் சதா சிகரெட்,...
அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’

அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'ஹரா' திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் வெளியாகிறது யோகி பாபு, அனுமோல், மொட்டை ராஜேந்திரன், கௌஷிக், அனித்ரா நாயர்,சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், பிரபஞ்சன், ஜெயக்குமார் ரயில் ரவி ,மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்....