3 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும் டிடிவி தினகரன் பேட்டி
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதில் எனக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். இதனால் எனது வெற்றி உறுதியாகி உள்ளது
தமிழக மக்களின் எண்ணத்தைதான் ஆர்.கே.நகர் வாக்காளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். இந்த வெற்றிக்காக பாடு பட்ட கட்சியின் 1.5 கோடி தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவினாசி, கோவை, அருமனை சென்றபோதும் அங்குள்ள மக்கள் குக்கர் சின்னம் வெற்றி பெற வேண்டும் என்று என்னைவாழ்த்தினர். மக்கள் விரும்பியபடி வெற்றி பெற்றுள்ளேன். இன்னும் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும். நல்லாட்சிதர தியாகத் தலைவி சின்னம்மாவால் தான் முடியும் என மக்கள் நம்புகின்றனர். அதனால் தான் ஆர்.கே.நகரில் வெற்றியை தந்துள்ளனர்.
சின்னமாக இருந்தாலும் சரி, கட்சியாக இருந்தாலும் சரி வேட்பாளரை வைத்தே அது நிர்ணயிக்கப்படுகிறது. சி...









